Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உருளைக்கிழங்கை இந்த மாதிரி ஒரு தடவை கார வறுவல் செஞ்சு பாருங்க - தாறுமாறான சைடிஷா இருக்கும்
Urulaikilangu Kara Varuval Recipe in Tamil: உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாகும். பிடிக்காது என சொல்பவர்கள் மிகவும் குறைவு. உருளைக்கிழங்கை விதவிதமாக சமைத்து சாப்பிடுவோம். எதில் சேர்த்து சமைத்தாலும் அதன் தனித்துவம் மாறாது இருப்பதோடு, அதன் சுவையையும் அதிகப்படுத்தி கொடுக்கும். அதுதான் உருளைக்கிழங்கின் தனித்துவமே.

நீங்கள் உருளைக்கிழங்கை வறுவல், குருமா, பொரியல் என பல வழிகளில் சமைத்திருப்பீர்கள், ஆனால் உருளைக்கிழங்கு கார வறுவலை எப்போதாவது முயற்சித்துப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில், உங்களுக்கான பதிவுதான் இது. இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு கார வறுவல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் என அனைத்திற்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு வறுவல் செய்வதற்கு மிகவும் எளிதானது, எனவே இதை சமையல் தெரியாதவர்கள் கூட எளிதில் செய்துவிடலாம்.
உங்களுக்கு இந்த சூப்பரான உருளைக்கிழங்கு கார வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கார வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வேகவைத்த உருளைக்கிழங்கு - 3
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- அரிசி மாவு - 1.5 ஸ்பூன்
- கடலை மாவு - 1.5 ஸ்பூன்
செய்முறை:
- உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதிக தீயில் 2 முதல் 3 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
- பிரஷர் வெளியேறியதும் தோலை உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் தீயை முழுவதுமாகக் குறைக்கவும். கலந்து வைத்துள்ள பொடிகளைச் சேர்க்கவும்.
- மாவு அடிபிடித்து விடாமல் வேகமாக கிளறவும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கு நன்றாக வறுபடும் வரை, மிதமான தீயில் சீரான இடைவெளியில் கிளறிவிடவும்.
- மசாலா உருளைக்கிழங்கில் நன்றாக சேர்ந்ததும் பெருங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்.
- உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சூப்பரான உருளைக்கிழங்கு கார வறுவல் ரெடி!



Click it and Unblock the Notifications