Just In
- 1 hr ago
இன்றைய ராசிப்பலன் (21.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- 12 hrs ago
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- 13 hrs ago
போராடிக்கிற உங்கள் பாலியல் வாழக்கையை சுவாரஸ்யமாக மாற்ற இத சரியா பண்ணுனா போதும்...!
- 14 hrs ago
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
Don't Miss
- News
மரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Movies
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020 கார்த்திகை தீபத்தின் தேதி, நேரம் மற்றும் சிறப்பம்சங்கள்!
தமிழ் மாத நாட்காட்டியின் படி கார்த்திகை தீபம் என்பது ஒரு முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாத பௌர்ணமி அன்று கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப நாளன்று சிவபெருமானின் இரண்டாவது புதல்வனும், முருகன், சண்முகன், சுப்ரமணியன் என்று அழைக்கப்படும் தமிழ் கடவுள் முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.
தீபாவளி திருநாளை போலவே கார்த்திகை தீப நாளிலும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். எண்ணெய் ஊற்றிய அகல் விளக்குகளை வீடு மற்றும் கோயில்களில் ஏற்றி வழிபடுவர். கார்த்திகை தீப நாள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.
MOST READ: 2020 திருவண்ணாமலை திருகார்த்திகை தீபம் எப்போது?

2020 ஆம் ஆண்டு கார்த்திகை தீபம்:
இந்த ஆண்டு 2020 கார்த்திகை தீபம் நவம்பர் மாதம் 29 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது.

கார்த்திகை நட்சத்திர நேரம்:
நவம்பர் 29ஆம் தேதி கார்த்திகை நட்சத்திரம் அதிகாலை 3.19 மணிக்கு தொடங்கி நவம்பர் 30ம் தேதி காலை 6.04 மணிக்கு நிறைவடைகிறது.

கார்த்திகை தீப நாளின் சிறப்பம்சம்:
கார்த்திகை தீபம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகிறது. முருகப்பெருமான் பிறந்த நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. தாரகாசுரன் என்னும் அரக்கனை அழிக்க சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணில் இருந்து உருவானவர் முருகப்பெருமான். முருகப்பெருமான் ஆறு முகத்துடன், 12 கைகளுடன் பிறந்தார். 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். துலா, நிதத்தனி, அப்ரயந்தி, வர்ஷயந்தி, மேகயந்தி, சிபுனிகா ஆகியோர் அந்த 6 கார்த்திகை பெண்கள் ஆவர். மற்றொரு புராணத்தின்படி அந்த 6 கார்த்திகை பெண்கள் பெயர்கள் வேறுபடுகிறது. அவர்கள் பிரபா , அபா, தேஜா, பவ்யா, ஷோபா, சுக்ரிதி போன்றோர் ஆவர்.
முருகப்பெருமானின் 6 முகங்களும் 6 வெவ்வேறு குணங்களை குறிப்பிடுகின்றன. தத்புருஷம், அகோரம், சத்யோஜதம், வாமதேவம், ஈசானம், அதோமுகம் போன்றவை இந்த குணங்களாகும்.

சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய கதை
மற்றொரு புராணத்தின்படி, முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்த நெருப்பில் இருந்து உருவானவர் என்றும் சரவண பொய்கை ஆற்றில் 6 பகுதிகளாக பிறந்தார் என்றும் கூறப்படுகிறது. தேவி பார்வதி அந்த ஆற்றில் இருந்து ஒவ்வொரு பகுதியையும் எடுத்து ஒன்றாக்கி இறைவன் முருகனுக்கு வடிவம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நிகழ்வு இந்த நாளில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

கார்த்திகை தீப நாளுடன் ஒருங்கிணைந்த மற்றொரு புராணம்
விஷ்ணு பகவான் மற்றும் பிரம்ம தேவருக்கு இடையில் யார் சிறந்தவர் என்ற போட்டி எழுந்தது. அந்த நேரத்தில் சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றிய நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. இவர்கள் இருவரின் அகந்தையை அழிக்கும் நோக்கத்தோடு சிவபெருமான் ஜோதி வடிவமாக இருவர் முன்னிலையில் தோன்றினார். இந்த ஜோதியின் தொடக்கத்தையும் முடிவையும் கண்டுபிடிக்குமாறு இருவரிடமும் சிவபெருமான் கூறினார். அந்த ஒளியின் முடிவைக் காண பகவான் விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்கு அடியில் சென்றார். பிரம்ம தேவர் அன்னத்தின் உருவத்தைக் கொண்டு அந்த ஒளியின் தொடக்கத்தைக் காண மேல் நோக்கி சென்றார். நீண்ட தூரம் பயணித்தும் விஷ்ணு பகவான் அந்த ஒளியின் அடியைக் காண முடியவில்லை. பிரம்ம தேவரும் ஒளியின் தொடக்கத்தைக் காண முடியவில்லை.
ஆனால் பிரம்மதேவர் ஒரு தந்திரம் செய்தார். அவர் மேல் நோக்கி பயணிக்கும்போது சிவபெருமானின் தலையில் இருந்து ஒரு தாழம்பூ விழுந்து கீழே வந்து கொண்டிருந்தது. அந்த பூவிடம் பிரம்மதேவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றார் என்பதற்கு சாட்சியாக இருக்க தாழம்பூவின் உதவியை நாடினார். தாழம்பூவும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. இருப்பினும் உண்மையை அறிந்த சிவபெருமான் பிரம்மதேவரை தண்டிக்கும் விதமாக அவருடைய ஐந்து தலைகளில் ஒன்றைத் துண்டித்தார். தவறான சாட்சி கூறியதற்காக தாழம்பூவிற்கும் தண்டனை அளிக்கப்பட்டது. அன்றுமுதல் சிவபூஜையில் தாழம்பூவை பக்தர்கள் சேர்த்துக் கொள்வதில்லை.