Latest Updates
-
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க..
சுந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பெண் எம்எல்ஏ தேர்வு.. எங்கு தெரியுமா?
ஹெகானி ஜக்காலு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) வேட்பாளரான அஜெட்டோ ஜிமோமியை விட 1,536 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். பெண்களின் படிப்பும், திறமையும் அவர்களின் உழைப்பும் அவர்கள் யார் என்பதை இந்த உலகிற்கு காட்டுகிறது. இருப்பினும் அரசியலை பொறுத்தவரை பெண்களின் முன்னேற்றம் என்பது இன்னும் பின்தங்கியதாகவே இருக்கிறது. தற்போது அரசியலில் பெண்களுக்கு என்று தொகுதிகள் மற்றும் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இன்னும் அவர்களுக்கான உரிமைகள் அரசியலில் வழங்கப்பட வேண்டும். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன நிலையில், நாகலாந்து மாநிலத்தில் 2023 நடப்பாண்டில்தான் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச் 3) நடைபெற்று வருகிறது. 60 தொகுகளைக் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக- தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி(NDPP) கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறது. இந்நிலையில், நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

4 பெண்கள் போட்டியிட்டனர்
1963ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை 13 சட்டமன்ற தேர்தல்கள் நாகாலந்தில் நடைபெற்றுள்ளன. ஆனால், ஒருமுறை கூட பெண் ஒருவர் வெற்றி பெறவில்லை. சுந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதும் ஆணாதிக்க சிந்தனையால், ஒரு பெண் எம்எல்ஏ ஆக முடியவில்லை. இந்நிலையில், 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு பெண்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இதில் திமாபூர்-III தொகுதியில் ஹெகானி ஜக்காலு என்ற பெண் பாஜக கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார்.

முதல் பெண் எம்எல்ஏ
தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஹெகானி ஜக்காலு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) வேட்பாளரான அஜெட்டோ ஜிமோமியை விட 1,536 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையை இவர் பெற்றுள்ளார்.

பிறப்பு மற்றும் படிப்பு
நாகாலாந்து மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான திமாபூரில் 1976 இல் பிறந்தவர் ஹெகானி ஜக்காலு கென்ஸ். இவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தார். இவர் 2013 இல் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக சட்டப் பள்ளியிலிருந்து சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் உள்ள வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவற்றில் அனுபவமும் பயிற்சியும் பெற்றவர்.

யூத்நெட் தொண்டு நிறுவனம்
48 வயதான ஹெகானி ஜக்காலு யூத்நெட் என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதன்மூலம் இளைஞர்களுக்கு கல்வியும், திறன் மேம்பாடும் அளித்து வருகிறார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். சமூக தொழில்முனைவோர் மற்றும் வணிக வாய்ப்புகளைத் தேட மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும் சேவையை செய்து வந்ததால், மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருந்தார்.

விருதுகள்
2018 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் நாரி சக்தி விருதைப் பெற்றுள்ளார். வடகிழக்கு பெண்களுக்கான இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற ஒரே நபர் இவர்தான். "நாகாலாந்தில் உள்ள சமூகம் பெரும்பாலும் ஆணாதிக்க மனப்பான்மையையே கொண்டுள்ளது. ஆனால், தற்போது மக்களின் மனநிலை மாறிவருகிறது" என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது ஹெகானி ஜக்காலு தெரிவித்திருந்தார்.



Click it and Unblock the Notifications