Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
சூரிய கிரகணம் 2020: உங்கள் காதல் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த போகுதுன்னு தெரியுமா?
சூரிய கிரகணம் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்றும், ஜோதிடத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து ஒரே நேர் கோட்டில் விழும்போது நிகழும் ஒரு நிகழ்வு ஆகும். இதன் மூலம் சந்திரன் அதன் நிழலை சூரியனுக்கு மேல் செலுத்துகிறது. முதல் மற்றும் வருடாந்திர சூரிய கிரகணம் 2020 ஜூன் 21 அன்று இந்திய நேரப்படி காலை 9:15 மணிக்கு தொடங்குகிறது. அதிகபட்சமாக முழு கிரகணமானது காலை 10:17 மணி முதல் 12:10 மணி வரை நிகழும்.

கிரகணத்திற்கான சமஸ்கிருத சொல் "சூர்ய கிரஹான்" என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வானியல் நிகழ்வை மட்டும் குறிப்பதல்ல. வானியல் மண்டலத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றையும் இது குறிக்கிறது. இது மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்றும், ஜோதிடத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. உங்கள் துணையுடனான உங்கள் உறவை குறித்து அக்கறை கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியெனில் உங்கள் ராசியின் படி, இந்த சூரிய கிரகணம் உங்கள் காதல் வாழ்க்கையை எந்த வகையில் பாதிக்கும் என்பதை இதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை. ஏனென்றால், இந்த சூரிய கிரகணம், உங்களுக்கு ஆச்சரியத்தை வாரி வழங்க போகிறது. எனவே, உங்கள் துணையிடமிருந்து ஒரு இன்பஅதிர்ச்சி அல்லது ஆச்சரியத்தை பெற தயாராக இருங்கள். இது உணர்ச்சிபூர்வமான ஒன்றாகவோ அல்லது பொருள் பரிசு பொருளாகவோ இருக்கலாம். எனவே, உச்சக்கட்ட சந்தோஷத்தை பெற தயாராக இருங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இது ஓய்வெடுப்பதற்கான நாள். உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து எதிர்பார்ப்புகளை முதலில் நிறுத்துங்கள். உங்கள் உறவு தானாகவே சிறப்பாக செயல்படுவதோடு,கிடைக்க வேண்டியவை தானாக கிடைக்கும். மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்
காதலில் உங்கள் நகர்வை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்களது துணை முதலில் சொல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பை முதலில் தூக்கி எறியுங்கள். உரையாடலை முதலில் நீங்களே தொடங்குங்கள். இனிமேலும் காத்திருக்க வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்களை பிரிந்து சென்றவர்கள் திரும்பி மீண்டும் உங்களிடமே வந்துவிட வேண்டுமென்று விரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை சற்று அடக்கி, எதார்த்தத்தை புரிந்து செயல்பட முயலுங்கள். தீர யோசித்து முடிவெடுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் நீங்களாகவே இருங்கள். சரியான நேரத்திற்காக காத்திருப்பதை முதலில் நிறுத்துங்கள். மாறாக உங்கள் மனதிற்கு பிடித்த நபரிடம் சென்று நீங்களே சென்று உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

கன்னி
உங்கள் காதலரை உங்கள் பெற்றோருக்கு அறிமுகப்படுத்துவற்கான சிறந்த நேரம் வந்துவிட்டது. நல்ல நேரம் வர வேண்டுமென்று காத்திருந்தவர்களுக்கு இது ஒரு பொன்னான காலம். இதை தவறவிட்டு விடாதீர்கள். இதுவே சரியான தருணம்.

துலாம்
உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் சுமூகமான சூழல் நிலவவில்லையா? அப்படியெனில், துலாம் ராசிக்காரர்களே இதுவே சரியான நேரம்.சண்டைகளைத் தீர்ப்பதற்கும், உங்கள் துணையுடன் தொடர்புகொள்வதற்கும் இதுவே சிறந்த நேரம். எதுவாக இருந்தாலும் அதனை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்களை விட்டு பிரிந்த உங்களது பழைய காதலன் திரும்பி உங்களிடமே வந்துவிட விரும்பலாம். அவற்றை புறக்கணிப்பதற்கு பதிலாக, வாழ்க்கையின் ஓட்டத்தில் அப்படியே செல்ல முயற்சிக்கவும். யாருக்கு தெரியும் அதுவே கூடு சிறந்ததாக அடைந்திடலாம்.

தனுசு
இந்த சூரிய கிரகணத்தின் போது, உங்களால் முடிந்தவரை உங்கள் துணையுடன் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி விடுங்கள். ஏனென்றால், உங்கள் எல்லா சிக்கல்களையும் தீர்ப்பதற்கான சிறந்த நேரம் இது தான்.

மகரம்
காதலுக்கு முன்பு ஈகோ இருக்கவே கூடாது. ஒருவேளை, உங்கள் துணையிடமே நீங்கள் ஈகோ பார்ப்பவர் என்றால், உங்களது சுபாவத்தை பற்றி சற்று யோசித்து பாருங்கள். உங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்து பார்ப்பது சிறந்தது. உங்களது துணையுடன் இணையாக நில்லுங்கள். சிறந்த விஷயங்களை பாராட்ட மறவாதீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் அன்பை அவர்களிடம் உடனே வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. இந்த தருணத்தை தவற விட வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களே, இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு மிகுந்த ரொமான்டிக் நிறைந்ததாக மாறப்போகிறது. உங்கள் வாழ்க்கை துணை உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்க போகிறார். அதுமட்டுமில்லாமல், நீங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவராகவும், அன்பிற்குரியவராகவும் உணர செய்ய தயாராக உள்ளார்.



Click it and Unblock the Notifications