Latest Updates
-
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன?
பிள்ளைகளே! இந்த பெற்றோர் தினத்தில் உங்க பெற்றோர்கிட்ட 'இத' சொல்லுங்க... ரொம்ப சந்தோஷப்படுவாங்க!
பெற்றோர்கள் தினமான இன்று மட்டும் இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல. ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது பெற்றோரால் இவ்வுலகத்திற்கு வந்தவர்கள். இவ்வுலகில் உள்ள அனைவரை காட்டிலும் பெற்றோர்களே நமக்கு முதன்மையானர்வர்கள். நம் அனைவருக்கும் உயிரையும், வாழ்க்கையும் தந்தவர்கள். எவ்வித பலனும் இல்லாமல் நம் மீது அன்பு காட்டவும், நமக்காக உழைக்கவும் செய்யும் ஒப்பற்ற ஜீவன்கள். அத்தகைய சிறப்பு மிக்க நம் பெற்றோருக்கு சிறப்பு செய்யும் நாளாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று உலகளாவிய பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செய்யும் எல்லாவற்றிற்கும், தன்னலமற்ற அர்ப்பணிப்புக்காகவும் நன்றி கூறவும், பாராட்டவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு குடும்பத்தின் முதன்மை பொறுப்பை அங்கீகரிப்பதற்காக இந்த நாளை 2012-இல் ஐ.நா பொதுச் சபை நியமித்தது. குழந்தைகள் ஒரு குடும்பச் சூழலிலும், அவர்களின் ஆளுமையின் அனைத்து வகையான வளர்ச்சிக்கும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் புரிதல் ஆகியவற்றை வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. பெற்றோர்கள் தினமான இன்று மட்டும் இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல. ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இந்த பெற்றோர் தினத்தில் உங்கள் பெற்றோருக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அருமையான வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்.

வாழ்த்து 1
பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
உலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
இவ்வுலகத்திற்கு என்னை கொண்டுவந்த உங்களுக்கு பெற்றோர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
தன்னலம் கருதாமல் தியாக உணர்வோடும், அர்பணிப்போடும் தங்களது குழந்தைகளை வளர்க்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் பெற்றோர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
இம்மண்ணில் உங்களுக்கு குழந்தையாக பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன். ஆயிரம் முத்தங்களுடன் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
உங்களுடைய ஆசை, கனவுகளை மனதில் புதைத்துக்கொண்டு உங்கள் பிள்ளையாகிய என்னுடைய ஆசை, கனவுகளை நிறைவேற்ற பாடுபடும் அன்பு அம்மா, அப்பாவிற்கு பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
என் இலட்சியத்தை அடைய எனக்கு பலமாகவும் உத்வேகம் அளிக்கும் பெற்றோருக்கு பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
எவ்வித பலனும் எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வுலகில் என்னை நேசிக்கவும் ஆதரிக்கவும் இருக்கும் ஜீவன்கள்..அப்பா, அம்மா.. இருவருக்கும் பெற்றோர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
உலகின் மிகவும் அற்புதமான பெற்றோருக்கு பிறந்ததால் நான் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். எனது உலகத்தை மிகவும் அழகாக மாற்றியதற்கு பெற்றோருக்கு நன்றி. பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
இன்று நான் இருப்பது எல்லாம் நீங்கள் இருவரால் தான். உங்களுக்கு மகிழ்ச்சியான பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 11
உங்கள் இருவர் மீது அன்பும் மரியாதையும் நிறைய இருக்கிறது. நீங்கள் எனது குழந்தைப்பருவத்தை அற்புதமாகவும், என் வாழ்க்கையை அழகாகவும் ஆக்கியுள்ளீர்கள். அவை அனைத்திற்கும் நன்றி. இனிய பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 12
ஒரு வழிகாட்டியைப் போல என் வாழ்க்கையில் என்னை வழிநடத்தியதற்கும் உண்மையான நண்பரைப் போல என்னை ஆதரித்தமைக்கும் நன்றி! அன்புள்ள தாய், தந்தையரே, உங்களுக்கு பெற்றோர் தின வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications