Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா?
குரு பெயர்ச்சி 2019: ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் - பரிகாரம் பண்ணுங்க
குரு பெயர்ச்சி சில தினங்களில் நிகழப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. மீதமுள்ள ரிஷபம், கடகம
குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவான் ஆலயங்களில் லட்சார்ச்சனை பரிகாரங்கள் நடைபெற உள்ளன. யாகங்களும் நடைபெறப்போகின்றன. இந்த குரு பெயர்ச்சி மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. மீதமுள்ள ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டால் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
குரு பகவான் ராசிகளில் தெய்வ பலத்தைக் குறிக்கும் ஒன்பதாவது ராசியான தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் ஆலயங்களில் அதிக நன்மைகள் நடக்கும். கோவில் பாதுகாப்புக்கு உண்டான சட்டங்கள் இயற்றப்படும். தங்கம் விற்பனை அதிகரிக்கும் ஆடை ஆபரணங்கள் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும். கோதுமை விலை உயரும். அரசியலில் மாற்றங்கள் ஏற்படும்.

அரசு புதிய திட்டங்களை கொண்டு வரும். அரசு வேலைகள் புதிது புதிதாக உருவாகும். கலைத்துறையில் இருப்பவர்கள் புகழ் பெறுவார்கள். பருவமழை நன்றாக பெய்யும். அரசு அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும். இந்த குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்களும் எந்த கோவிலிலுக்கு செல்ல வேண்டும் என்றும் பார்க்கலாம்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு எட்டு மற்றும் பதினொன்றாம் வீட்டு அதிபதி. குரு உங்க ராசி அதிபதிக்கு பகைவர். அஷ்டம குரு பாதிப்புதான் என்றாலும் இந்த குரு அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம். அஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். 2020 ஜனவரி முதலே உங்கள் பிரச்சினைகள் குறையும் உதவிகள் தேடி வரும். ரிஷப ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய கோவில் தென் திட்டை ராஜகுருவை வணங்க நன்மைகள் நடக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு 50 சதவிகித நன்மை 50 சதவிகிதம் பாதிப்பை தரும்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு குரு நன்மைதான் செய்வார். குருவும் சந்திரனும் நண்பர்கள். ஆறாம் வீட்டில் குரு அமர்ந்தாலும் நன்மைதான் நடக்கும் காரணம் ஆறாம் வீட்டு அதிபதி குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். இது விபரீத ராஜயோக அமைப்பாகும். என்றாலும் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் தொந்தரவு நீங்கும் என்றாலும் கடன் நோய் பிரச்சினை மன அழுத்தத்தை தரும்.
புதிய முயற்சிகள் எதையும் செய்யாதீர்கள். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். நீங்க எப்படி கடன் வாங்கக் கூடாதோ அதே போல உங்க பணத்தை யாருக்கும் கடனாகக் கொடுக்காதீங்க. தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் குரு பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளுங்கள்.
மேதா தட்சிணா மூர்த்தியை வணங்க பாதிப்புகள் குறையும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு 60 சதவிகித நன்மையை தரும்.

கன்னி ராசி
புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு குரு சாதகம் செய்ய மாட்டார். கன்னி ராசிக்கு குரு நான்கு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி. இந்த குரு பெயர்ச்சி உங்க ராசிக்கு சுக ஸ்தான அதிபதி சுக ஸ்தானத்தில் அமரப்போகிறார். இது கேந்திர ஸ்தான அதிபதி கேந்திரத்தில் அமர்வது கேந்திர ஆதிபத்ய தோஷம். அம்மாவின் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். வீடு, வண்டி வாகனம் வாங்கும் போது எச்சரிக்கை தேவை. நன்றாக செக் செய்து வாங்குங்கள். ஏற்கனவே நான்காம் வீட்டில் சனி இருந்து கடும் பிரச்சினைகளை கொடுத்து வருகிறார். அம்மா, மனைவி உடல் நலனில் கவனமாக இருங்க. நீங்க செல்ல வேண்டிய கோவில் பாடி திருவலிதாயம் குருபகவானை வணங்கவும். யாகங்களில் பங்கேற்கவும்.

துலாம் ராசி
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. உங்க ராசி அதிபதிக்கு குரு நண்பர் இல்லை. குருவின் வீட்டில் சுக்கிரன் உச்சமடைகிறார். குரு பகவான் உங்க ராசிக்கு மூன்று மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி. மூன்றாம் அதிபதி மூன்றாம் வீட்டில் மறைகிறார். இது உங்களுக்கு நன்மை தருவதில்லை. சிறு தூர பயணங்கள் நன்மை செய்யும். குரு உங்க ராசிக்கு ஏழாம் வீட்டினை பார்க்கிறார். ஒன்பதாம் வீட்டினையும் லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் திருமணம் கைகூடும், பாக்கியங்கள் கிடைக்கும், செய் தொழிலில் லாபம் வரும். சகோதர சகோதரி வகையில் மனஸ்தாபம் நடக்கும். பாதிப்புகள் குறைய நீங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். குரு பெயர்ச்சி நாளில் தரிசனம் செய்ய நன்மைகள் நடக்கும்.

மகரம்
மகரம் ராசிக்கு அதிபதி சனி. மகரம் ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி, மூன்றாம் வீட்டிற்கு அதிபதி. உங்க ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் அமரப்போவதால் விபரீத ராஜயோகம் வரப்போகிறது. நிறைய பணவரவு வந்தாலும் செலவுகள் வரும். குரு பார்வை உங்க ராசிக்கு நான்காம் வீடு, ஆறாம் வீடு, மற்றும் எட்டாம் வீடுகளை குரு பார்வையிடுகிறார். சோதனைகளை சாதனைகளாக்குவீர்கள். நடுத்தர வயதுடையவர்களுக்கு யோகம் வரும். வேலை தொழிலில் முன்னேற்றம் நடக்கும். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யலாம். நன்மைகள் நடக்கும். பரிகாரத்திற்காக நீங்க தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலாயங்களுள் ஒன்றான முறப்பநாடு கைலாயநாதர் கோவிலுக்கு சென்று வரலாம். கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். தாமிரபரணியில் நீராடி குருபகவானை வணங்க தோஷங்கள் நீங்கும்.

மீனம்
குரு பகவான் உங்க ராசி அதிபதி தொழில் ஸ்தான அதிபதி தொழில் ஸ்தானத்தில் அமரப்போகிறார். பத்தில் குரு பதவி பறிபோகும் என்பார்கள். தொழில் அல்லது வேலையில் மாற்றங்கள் நிகழும். குருவின் பார்வை உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுகிறது. பணம் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். முதல் மூன்று மாதங்கள் கடன் பிரச்சினை, தடைகள் ஏற்படும் காரணம் குரு பகவான் கேதுவின் நட்சத்திர சாரமான மூல ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் எச்சரிக்கை தேவை. சனி பெயர்ச்சியாகி சென்ற பின்னர் கொஞ்சம் நிம்மதியடையலாம். நீங்க வியாழக்கிழமைகளில் திருச்செந்தூர் முருகனை சென்று வழிபட பாதிப்புகள் குறையும்.



Click it and Unblock the Notifications











