Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க
பிப்ரவரி மாசத்துல இந்த 4 ராசிக்காரர்களின் தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்பட போகுது...
பிப்ரவரி மாத கிரக நிலைகளின் படி, இந்த மாதமானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாகவும், சிலருக்கு அதிர்ஷ்டமானதாகவும், இன்னும் சிலருக்கு தொழிலில் பல முன்னேற்ற பாதை திறக்கக்கூடிய வகையிலும் இருக்கப் போகிறது.
புதிய மாதம் பிறக்கும் போது அனைவரது மனதிலும் கடந்த மாதத்தை விட இந்த மாதம் சிறப்பாக இருக்காதா என்ற ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். இவை அனைத்தும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது. கிரகங்களின் நிலைகள் தான் ஒருவருக்கும் கிடைக்கும் பலன்களை தீர்மானிக்கின்றன. நிறைய பேர் ஒரு மாதம் பிறக்கும் போது அந்த மாதத்தில் நிதி நிலைக்கு அடுத்தபடியாக தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலவாக இருப்பார்கள். நீங்களும் உங்களின் தொழில் வாழ்க்கை பிப்ரவரி மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

பிப்ரவரி மாத கிரக நிலைகளின் படி, இந்த மாதமானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாகவும், சிலருக்கு அதிர்ஷ்டமானதாகவும், இன்னும் சிலருக்கு தொழிலில் பல முன்னேற்ற பாதை திறக்கக்கூடிய வகையிலும் இருக்கப் போகிறது. இப்போது 2023 பிப்ரவரி மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு இம்மாதம் ஏற்றம் நிறைந்ததாக இருக்கும். மிகவும் கடினமாக உழைப்பீர்கள். பணியிடத்தில் திறம்பட செயல்படுவீர்கள். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இம்மாதம் வெற்றிகரமான மாதமாக இருக்கும். இருப்பினும் இம்மாதத்தில் கவனமாக திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும். புதிதாக தொழில் தொடங்க வேண்டாம். தற்போதைய தொழிலில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். குருவின் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சனியின் அருளால் பணிபுரிபவர்கள் ஏராளமான வெற்றியைப் பெறுவார்கள். ஆனால் மாதத்தின் நடுப்பகுதியில் சில சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், அந்த சவால்களை திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். கடினமாக உழைத்தால், பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் இம்மாதத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதுவும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பின் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி
பிப்ரவரி மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல பலன்களைத் தரும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் அற்புதமாக இருக்கும். அலுவலகத்தில் சில பணி அழுத்தங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு, பிப்ரவரி மாதம் நல்ல பலனைத் தரும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, வெற்றி பெறுவீர்கள். இம்மாதத்தில் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது தொழில் ரீதியாக அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதுவும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பின் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் புதிய வேலை வாய்ப்புக்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளன. வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள், இம்மாதத்தில் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
