Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்..
இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
ஜோதிடத்தில் தீபாவளியை கொண்டாடுவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளது. அதன்படி உங்கள் ராசிப்படி நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாட வேண்டும் என்று நமது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது, தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருட தீபாவளியும் நமது புது அனுபவத்தை வழங்குகிறது. இந்த வருட தீபாவளியும் உங்களுக்காக ஒரு அனுபவத்தை தர காத்திருக்கிறது. அந்த அனுபவம் எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கப்போகிறது என்பதை உங்களின் செயல்கள்தான் முடிவுசெய்யும்.

ஜோதிடத்தில் தீபாவளியை கொண்டாடுவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளது. அதன்படி உங்கள் ராசிப்படி நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாட வேண்டும் என்று நமது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், பணப்பிரச்சினைகளும் இல்லாமல் இருக்க வேண்டுமெனில் உங்கள் ராசிப்படி தீபாவளி அன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
தீபாவளி அன்று உங்களின் லாக்கரில் சந்தனம் அல்லது குங்குமப்பூவை வெள்ளை நிறத்துணியில் கட்டி வையுங்கள். அது உங்கள் இல்லத்தில் செல்வத்தையும், வளத்தையும் அதிகரிக்கும்.

ரிஷபம்
தீபாவளி அன்று இரவு பசு நெய்யில் இரண்டு விளக்குகளை ஏற்றி வைக்கவும், அதன் இரண்டு திரிகளையும் ஒன்றாக இணைத்து வைக்கவும். இதனை உங்கள் வீட்டின் தனிமையான இடத்தில் வைத்து விட்டு உங்கள் வேண்டுதலைக் கூறவும். இது உங்கள் வேண்டுதலை நிறைவேற்றும்.

மிதுனம்
தீபாவளி நாளில் லக்ஷ்மி தேவியை வணங்கிய பிறகு ஒரு தேங்காயை நாணயத்துடன் சேர்த்து உங்கள் வேண்டுதலை கூறவும். அந்த தேங்காயை ஒரு சிவப்புத் துணியில் சுற்றி வீட்டின் தனிமையான மற்றும் சுத்தமான இடத்தில் வைக்கவும். உங்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன் அந்த தேங்காயை லக்ஷ்மி கோவிலில் வைத்து விடவும்.

கடகம்
தீபாவளி நாள் அன்று விஷ்ணு கோவிலில் மஞ்சள் நிற துணியை முக்கோண வடிவில் வெட்டி அதனை கொடியாக அந்த கோவிலில் கட்டி வைக்கவும். இந்த கொடி காற்றில் ஊசலாடும் படி கட்டவும், இது உங்களின் அதிர்ஷ்டத்தை பலமடங்கு அதிகரிக்கும். அடுத்த வருடம் வரை இந்த கொடி விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்
தீபாவளி அன்று இரவில் உங்கள் வீட்டின் பிரதான வாயிலில் ஒரு நெய் விளக்கை ஏற்றி வையுங்கள். அந்த விளக்கை விடியும் வரை அணையாமல் பார்த்துக் கொண்டால் அது உங்களின் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும்.

கன்னி
உங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றால் தீபாவளி அன்று உங்கள் லாக்கரில் தேங்காயை, லக்ஷ்மி படத்துடன்சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் சுற்றி வைக்கவும். இது உங்களின் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்தை நீக்கும்.

துலாம்
உங்கள் வாழ்க்கையில் அதிகளவு நிதி பிரச்சினை இருந்தால் அந்த துன்பத்தில் இருந்து தப்பிக்க தீபாவளி அன்று இரவு லக்ஷ்மி தேவியை வணங்கும் போது அவரின் பாதத்தில் கமல மாலையை வைக்கவும். பூஜை முடிந்த பிறகு அந்த கமல மாலையை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் சிவப்பு நிற துணியில் சுற்றி வைக்கவும். இது உங்களின் அனைத்து பணப்பிரச்சினைகளையும் தீர்க்கும்.

விருச்சிகம்
உங்கள் பொருளாதார நிலை குறித்து நீங்கள் திருப்தியடையவில்லை என்றால் ஏதாவது ஒரு கோவிலில் இரண்டு வாழைக்கன்றுகளை நட்டு வைத்து அதனை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அந்த மரம் காய்கள் கொடுக்கும்போது அதனை நீங்கள் பயன்படுத்தாமல் கோவிலுக்கே கொடுத்துவிடுங்கள்.

தனுசு
உங்கள் ராசிப்படி தீபாவளி அன்று வெற்றிலையில் ஸ்ரீ என்னும் எழுத்தை குங்குமத்தால் எழுதி அதனை உங்கள் வீட்டு லாக்கரில் வைக்கவும். அடுத்த நாள் இந்த வெற்றிலையை எடுத்து ஒரு பசுமாட்டிற்கு கொடுத்து விடவும்.

மகரம்
நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு உங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றால் தீபாவளி அன்று சிவப்பு வண்ண இனிப்புகளை வைத்து விஷ்ணுவை வழிபடவும். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

கும்பம்
தீபாவளி அன்று இரவு தேங்காயில் நெய் ஊற்றி விளக்கேற்றி அதனை வைத்து லக்ஷ்மியை வழிபடவும், இது உங்களின் பொருளாதார நிலையை உயர்த்தும்.

மீனம்
உடனடியாக பணத்தைப் பெற லக்ஷ்மி தேவியின் கோவிலுக்கு நறுமண பொருட்களை தானம் செய்யுங்கள். . தீபாவளி நாளிலிருந்து, இந்த நடைமுறையை தவறாமல் பின்பற்றுங்கள், இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் விரைவில் செல்வந்தராக இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications