Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
முதல் உலகப்போரின் போது தோன்றிய தொற்றுநோய்கள்... போரை விட இந்த நோய்களே அதிக மக்களை கொன்றதாம்...!
இந்த உலகத்தின் முதல் பேரழிவு என்றால் 1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப்போர்தான். இந்த கொடூரமான போரில் உலகம் முழுவதும் கிட்டதட்ட இரண்டு கோடி பேர் கொல்லப்பட்டார்கள்
இந்த உலகத்தின் முதல் பேரழிவு என்றால் 1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப்போர்தான். இந்த கொடூரமான போரில் உலகம் முழுவதும் கிட்டதட்ட இரண்டு கோடி பேர் கொல்லப்பட்டார்கள். இந்த போரின் போது உடல் காயங்கள் காரணமாக பல அப்பாவி ஆத்மாக்கள் இழந்தாலும் மோசமான வாழ்க்கை நிலைமைகள், உணவு பற்றாக்குறை மற்றும் முகாம்களில் ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகள் காரணாமாக பல தொற்றுநோய்கள் ஏற்பட்டது.

போரால் ஏற்பட்ட காயங்களை விட அங்கு ஏற்பட்ட தொற்றுநோய்களால்தான் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போரிலிருந்து காயமோ அல்லது தொற்றுநோயோ இல்லாமல் தப்பிப்பது வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இன்று உலகையே அச்சறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா போல பல தொற்றுநோய்கள் தோன்றியது. இந்த பதிவில் முதல் உலகப்போரின் போது தோன்றிய முக்கியமான தொற்றுநோய்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ட்ரென்ச் பாதம்
இந்த தொற்றுநோயால் வீரர்களின் கால்கள் சிவப்பு அல்லது நீல நிறமாக மாறியது. போரின் ஆரம்ப கட்டங்களில் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது மற்றும் ஈரமான, குளிர் மற்றும் சுகாதாரமற்ற சூழலால் இது ஏற்பட்டது. ஆண்கள் கால்களை நகர்த்தவோ அல்லது சாக்ஸை அகற்றவோ முடியாமல் நீண்ட நேரம் நீரில் மூழ்கிய அகழிகளில் நிற்பார்கள். நிலை மோசமடைந்துவிட்டால், அது கால்கள் உணர்ச்சியற்றதாகி, குடலிறக்கம் மற்றும் பெரும்பாலும் ஊனம் ஏற்பட வழிவகுத்தது. இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு, வீரர்கள் தங்கள் காயங்களை வெப்பமான நீரில் நீண்ட நேரம் ஊறவைப்பது மற்றும் ஒரு நாளைக்கு பல முறை தங்கள் சாக்ஸை மாற்றுவது என்றுதான் கூறப்பட்டது. இந்த தொற்றால் பிரிட்டன் இராணுவத்தில் 75,000 வீரர்களும், அமெரிக்க இராணுவத்தில் 2,000 வீரர்களும் பாதிக்கப்பட்டனர்.

ட்ரென்ச் காய்ச்சல்
ட்ரென்ச் காய்ச்சல் குயின்டன் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது, உடலில் இருக்கும் பேன்களில் காணப்படும் பார்டோனெல்லா குவிண்டனா என்ற பாக்டீரியத்தால் ஏற்பட்டது. உடல் பேன்கள் துணிகளின் சீம்களில் ஒட்டிக்கொண்டு படையினரின் ஆடைகளில் இனப்பெருக்கம் செய்து வளரும். பேன்களிலிருந்து விடுபடுவதற்காக, வீரர்கள் தங்கள் ஆடைகளின் மடிப்புகளில் தீப்பிழம்புகளை இயக்குவார்கள். இது படையினரிடையே எளிதில் பரவக்கூடியது மற்றும் ஐந்து நாட்களுக்கு நீடித்தது.தலைவலி, அதிக வெப்பநிலை, சருமத்தில் புண்கள், சோர்வு போன்றவை இதன் அறிகுறிகளாக இருந்தது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை வீரர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். படிப்படியாக பரவிய இந்த தொற்றுநோய் இறுதியில் 10 இலட்சத்திற்கு மேற்பட்டோரை தாக்கியது. இந்த நோயால் ஒரு வீரர் பாதிக்கப்பட்டால் அவர் மூன்று மாதம் ஓய்வெடுக்க வேண்டும், இதனால் அந்நாடு மிகப்பெரிய பலத்தை இழக்கும்.

டைபாய்டு மற்றும் டைபஸ் காய்ச்சல்
பெயர்கள் ஒரே மாதிரி இருந்தாலும் இவை இரண்டும் வெவ்வேறு நோய்களாகும். டைபாய்டு காய்ச்சல் என்பது சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியாவால் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று மற்றும் இது முதலாம் உலகப் போரின் கொடிய நோய்களில் ஒன்றாகும். இதன் அறிகுறிகளில் வியர்வை, வயிற்றுப்போக்கு மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவை அடங்கும். டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் நீரிழப்புக்கு ஆளாகி, வேதனையான வலியைத் தாங்க வேண்டியிருந்தது.டைபஸ் காய்ச்சல், கியோல் காய்ச்சல் அல்லது கப்பல் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது, மறுபுறம், பெடிகுலஸ் ஹ்யூமனஸ் எனப்படும் உடல் பேன்களின் மூலம் வீரர்கள் மத்தியில் பரவியது. மோசமான சுகாதாரம் காரணமாக இந்த நோய் வந்தது. போரின் போது, டைபஸ் காய்ச்சல் காரணமாக ஏராளமான இறப்புகள் நிகழ்ந்தன, மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாததால், இறப்பு விகிதம் 10 முதல் 80 சதவீதம் வரை மாறுபடுகிறது. ரஷ்யா போன்ற நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 82,000 வழக்குகளைப் பதிவு செய்தது, மேலும் 1916 பின்வாங்கிய பின்னர் இந்த எண்ணிக்கை 154,000 ஆக உயர்ந்தது.

இன்ப்ளூயன்ஸா
இது ஒரு பேரழிவை ஏற்படுத்திய நோயாகும், இதன் விளைவாக போரைவிட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. மக்கள் இதை ஸ்பானிஷ் காய்ச்சல் அல்லது லா கிரிப் என்றும் அழைத்தனர், இது 1918 ல் போருக்குப் பின்னர் உடனடியாக ஒரு பெரிய தொற்றுநோயாக இருந்தது, ஐரோப்பா முழுவதும் பரவியது. 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கொடிய வகை நிமோனியாவை உருவாக்கும் மற்றும் தலைவலி, வலி தசைகள், ஒரு தொடர்ச்சியான, வறட்டு இருமல், காய்ச்சல், பலவீனம், தொண்டை புண் மற்றும் இரத்த விஷம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். யாராவது நோய்த்தொற்று ஏற்பட்டவுடன், அவர்கள் மூன்று நாட்களுக்குள் வேதனையுடனும், உடலின் வீக்கத்துடனும் இறந்துவிடுவார்கள். எந்த சிகிச்சையும் இல்லாததால், நோய் பரவுவதைத் தடுக்க மக்கள் மத்தியில் துணி முகமூடிகள் விநியோகிக்கப்பட்டன.

மலேரியா
முதல் உலகப் போரின் போது பல வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். 18 முதல் 48 வயதிற்குட்பட்டவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டார்கள் மேலும் பலர் இதனால் இறந்தார்கள். பிரிட்டிஷ், பிரஞ்சு மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரிய துருப்புக்கள் ஒன்றாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். மாதத்திற்கு கிட்டதட்ட 80,000 பேர் இதனால் இறந்ததாக கூறப்படுகிறது. மருந்து மற்றும் சிகிச்சை வசதிகள் இல்லாதது போரின் போது குணப்படுத்த முடியாத தொற்றுநோயாக மாறியது. இது இயற்கையில் ஒட்டுண்ணித்தனமானது மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மோசமடைந்தது. போருக்குப் பின்னர் வீரர்கள் சகஜமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறியதால் இறப்புகள் குறைந்தது.

சர்க்கரை நோய்
முதல் உலகப்போர் முடிந்த பிறகு 20 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த காலக்கட்டத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மரணத்தில் முடிந்தது. நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வீரர்கள் கடுமையான உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது, இது அவர்களின் உணவு உட்கொள்ளலை அதிக அளவில் மட்டுப்படுத்தியது. சிகிச்சை இல்லாததால் நோய் கண்டறியப்பட்டதும் மரணமே முடிவாக இருந்தது.

இதய நோய்
முதல் உலகப்போரின் போது இருந்த இதய நோய் இப்போதிருக்கும் இதய நோயை விட வித்தியாசமானது. போர்க்காலத்தில் இதயக் குறைபாடுகளைக் கண்டறிவது மிகவும் கடினம். பெரியவர்களில் பரம்பரை இதய நோய், இது இதயத்தின் நான்கு முக்கிய வால்வுகளை சேதப்படுத்தியது, பொதுவானது மற்றும் இதய பிரச்சினைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சேவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

வெனரல் நோய்
முதல் உலகப்போர் பாலியல் நோய்கள் பரவும் இடமாக மாறியது. இந்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை போரின் போது பெருமளவில் வளர்ந்து இறுதியில் பாதிக்கப்படாத மக்களிடையே பரவியது. மிகவும் பொதுவான பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் கோனோரியா மற்றும் சிபிலிஸ் ஆகும், அவை துருப்புக்களிடையே விரைவாக பரவின மற்றும் அவர்களின் சண்டை திறன்களை பலவீனப்படுத்தின. அந்த நேரத்தில், வெனரல் நோய்க்கான சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது, நேரத்தை எடுத்துக்கொள்வது மற்றும் பெரும்பாலும் பயனற்றது. மற்ற வீரர்களுடனோ அல்லது பொதுமக்களுடனோ திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக படையினரின் மனைவிகளுக்கும் வெனரல் நோய் பரவியதாக நம்பப்பட்டது.



Click it and Unblock the Notifications











