உங்க ராசியை சொல்லுங்க... உங்களைப் பற்றிய ஓர் ரகசியத்தை நாங்க சொல்றோம்....

ஜோதிடத்தில் உள்ள ராசிகளை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு ராசிக்காரரின் குணாதிசயங்களுள் சில பொதுவாக இருக்கும். சில வித்தியாசமாக, நம்பமுடியாததாக இருக்கும்.

உலகில் உள்ள ஒவ்வொருவரின் மனதிலும் வெளியே சொல்ல விரும்பாத ஓர் விஷயம் இருக்கும். அந்த விஷயத்தை தான் ரகசியம் என்று சொல்வார்கள். சிலர் தங்களை வேறொருவராக சித்தரித்து இருப்பார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் வேறுபட்டிருப்பார்கள்.

Deepest Secret Of Each Zodiac Sign

ஜோதிடத்தில் உள்ள ராசிகளை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு ராசிக்காரரின் குணாதிசயங்களுள் சில பொதுவாக இருக்கும். சில வித்தியாசமாக, நம்பமுடியாததாக இருக்கும். அந்த வித்தியாசமான குணாதிசயத்தை அவர்கள் அதிகம் வெளிக்காட்டாமல் வைத்திருப்பார்கள். அப்படி ஒவ்வொரு ராசிக்குள்ளும் மறைந்திருக்கும் ரகசியமான பண்புகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

ஒருவரை ஏமாற்றி காணும் வெற்றி நிலைத்திருக்காது என்பதை மேஷ ராசிக்காரர்கள் நன்கு அறிவார்கள். இம்மாதிரியான வெற்றியைக் காணக்கூடாது என்று இவர்கள் தங்களைக் கட்டுப்படுத்தினாலும், வெற்றி அடைவதற்கு மற்றவர்களை ஏமாற்றுவார்கள். ஆனால் இந்த எண்ணம் குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அனைவரும் பெருமையாகவும், அமைதியாகவும் செயல்படலாம். ஆனால் ஆழ்மனதில் இவர்கள் பாதுகாப்பற்றவர்களாக மற்றும் நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஒருவரை மனதளவில் மிகவும் பிடித்து நம்பிக்கையானவர் என்ற எண்ணம் வந்துவிட்டால், அவர்களிடம் தங்களின் அனைத்து விஷயங்களையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்வார்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் 100% உண்மையான சுயரூபத்தை யாருக்கும் வெளிப்படுத்த மாட்டார்கள். ஏனெனில், இவரால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதை விரும்பமாட்டார்கள். இதனாலேயே, இவர்கள் யாருடனும் அவ்வளவு நெருக்கமாக பேசி பழகமாட்டார்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் உண்மையில் நண்பர்களை விரும்புவதில்லை. ஏனெனில் இவர்கள் அனைவரையும் விட உயர்ந்தவர்களாக உணர்கிறார்கள். இருப்பினும், தங்கள் நண்பர்களுடனான உறவை அவர்கள் ஒருபோதும் துண்டிக்க மாட்டார்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களிடம் உள்ள ரகசியமான குணாதிசயம் என்றால் அது அனைவரிடமும் பொறாமை கொள்வார்கள். இந்த குணத்தால் மற்றவர்களிடம் உள்ளதைப் பெற முயற்சிப்பார்கள். மேலும் எந்த ஒரு இடத்திலும் அவர்கள் மீது கவனத்தை ஈர்க்க விரும்புவார்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் போலியாக பாராட்டுவதில் சிறந்தவர்கள். எனவே இவர்கள் சொல்வதை ஒருபோதும் நம்பாதீர்கள். ஆம், இவர்கள் ஒருவரைப் பாராட்டலாம். ஆனால் அந்த பாராட்டு இதயத்தில் இருந்து வந்திருக்காது. ஒருவேளை ஒருவரைப் புகழ்ந்தால், அது மரியாதைக்கு அப்பாற்பட்டது. மற்றொரு விஷயம், இந்த ராசிக்காரர்கள் அளவுக்கு அதிகமாக சிந்திப்பார்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் ஒருவரை நன்கு கையாளக்கூடியவர்கள். இவர்கள் விரும்புவதைச் செய்வதற்கு இவர்களின் மென்மையான பேச்சு ஒரு பெரிய பலமாக இருக்கிறது. இவர்களிடம் உள்ள மற்றொரு ரகசியம், இவர்கள் தனியாக இருப்பதற்கு பயப்படுவார்கள். ஆனால் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தேளைப் போன்று பழி வாங்கும் தன்மை கொண்டவர்கள் மற்றும் இவர்களிடம் பல ரகசியங்கள் இருக்கும். எனவே இவர்களின் முகத்தை வைத்து நம்பிவிடாதீர்கள். இவர்களிடம் ஒருமுறை பேச்சு கொடுத்தால், உங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் பேச வைத்துவிடுவார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள முடியாது.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் காதல் என்று வரும் போது, அளவுக்கு அதிகமாக நேசிப்பார்கள். ஆனால் திருமணம் என்றால் ஓடிவிடுவார்கள். ஏனெனில் இவர்கள் தங்கள் இளமைக் காலத்தில் வாழ்க்கையை இனிமையாக அனுபவிக்க வேண்டுமென விரும்புவார்கள். திருமணம் செய்தால் பொறுப்புகள் அதிகரிக்கும். எனவே இவர்களை காதலிப்பவர்கள், பொறுமையாக இருக்க வேண்டும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் செய்த தவறை மன்னிக்கமாட்டார்கள் மற்றும் மறக்கவும் மாட்டார்கள். தனக்கு கெடுதல் செய்தவர்களை வாழ்க்கையில் இருந்து துண்டித்துவிடுவார்கள். மேலும் இவர்கள் தங்கள் பலவீனம் வெளியே வரக்கூடிய சூழ்நிலைகளைத் தவிர்ப்பார்கள். இவர்கள் தங்களை வலுவாகவும் குறைபாடற்றவர்களாகவும் வெளிக்காட்ட விரும்புவார்கள். ஆனால் அவர்கள் உள்ளே ஒரு கோழை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களிடம் உள்ள ரகசியமான ஓர் குணாதிசயம், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நன்கு செயல்பட தெரிவதில்லை. அதை சொன்னால் அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இருப்பினும் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் இணைந்திருக்க முயற்சி செய்வார்கள். ஆனால் அதில் தோல்வியைக் காண்பார்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அவர்கள் சில நேரங்களில் தங்களின் சோக கதைகளுக்கு மசாலா சேர்ப்பார்கள். இவர்கள் உண்மையாக நடந்து கொள்வார்கள். ஆனால் மற்றவர்களின் அனுதாபத்தைப் பெற நினைப்பார்கள். மேலும், இவர்கள் மென்மையான இதயத்தைக் கொண்டவர்கள். இவர்களின் மனதை மற்றவர்கள் அவ்வளவு எளிதில் தொட அனுமதிக்கமாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion