Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது?

எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம்
நண்பர்களின் வாயிலாக லாபம் அதிகரிக்கும். வீட்டுக்கு சுப செய்திகள் வந்து சேரும். போட்டிகளில் நீங்கள் எதிர்பாராத பரிசுகள் உங்களைத் தேடி வரும். திருமண வரன்கள் தேடுகிறவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளுடைய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர் பாலினத்தவர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர். விவாதங்களின் மூலமாக மற்றவர்களால் புகழப் படுவீர்கள். நண்பர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடியுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மதுனம்
குடும்பத்தில் புதிய நபர்களால் மகிழ்ச்சி பெருகும். பிறருடைய செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை தவிர்த்திடுங்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தந்தையிடம் உரையாடும்போது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்
இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் மேன்மை உண்டாகும். சபைகளில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். பொது தொண்டுகள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நினைத்த முடிவுகள் கிடைக்கும். நீர் நிலையங்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் பணியாற்றுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

சிம்மம்
நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்த பணிகளை புதிய நபர்களின் அறிமுகத்தால் செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். தொழிலில் உங்களுடைய திறமையின் மூலம் லாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மதிப்புகள் உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
எடுத்த காரியங்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணிகள் சம்பந்தப்பட்ட பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். கோபம் கொள்ளாமல் அனைவரிடமும் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளவும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கிறது.

துலாம்
கூட்டாளிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் போது, உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வாகனங்களின் மூலமாக லாபங்கள் அதிகரிக்கும். உங்களுடைய திறமையான பேச்சுக்களின் மூலமாக புகழ் பெறுவீர்கள். வீட்டிற்கு உறவினர்களின் வருகை உண்டாகும். அதனால் மனம் மகி்ழ்ச்சி அடைவீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிஙமும் இருக்கும்.

விருச்சிகம்
தெளிவில்லாத எண்ணங்களால் மனதில் தேவையில்லாத குழப்பங்கள் வந்து போகும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலமாக பணிகளில் கால தாமதங்கள் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளில் பணவரவு உண்டாகும். மாணவர்கள் புதிய திட்டங்களை வகுக்கும் முன் கொஞ்சம் கவனமாக இருங்கள். தர்ம காரிய ஸ்தாபனங்களில் உங்களுக்குத் தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
வீட்டில் பிள்ளைகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.வாகனப் பராமரிப்புக்கான செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். அரசு அதிகாரிகளிடம் நிதானமாகச் செயல்படுங்கள். உங்களுடைய செயல்பாடுகளால் முழு நிர்வாகத் திறமையையும் வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் ஏற்படும். செய்கின்ற செயலில் வேகம் அதிகரிக்கும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் சில பிரச்னைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய உடன் பிறப்புகளால் அனுகூலங்கள் உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது, கொஞ்சம் நிதானமாகச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட உபதேசங்கள் கிடைக்கும். அரசாங்கப் பணியில் இருந்து வந்த இழுபறிகள் நீங்கும். தலைமை அதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றியதால், பாராட்டப்படுவீர்கள். எடுத்த காரியங்களை நினைத்த படி, செயல்படுத்தி, வெற்றி பெறுவீர்கள். புதியவற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வீர்கள். அலைச்சல்களால் உடல் சோர்வுகள் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட இன்னல்கள் தீரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
வீட்டில் பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். சுய தொழில் புரிவதற்கான உதவிகள் கிடைக்கும். கலை சார்ந்த அறிவுத் திறமையினால், சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். கணவன், மனைவிக்கு அடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
