Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்க படாதபாடு பட போறாங்க தெரியுமா? உங்க ராசியும் இதுல இருக்கா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
தினமும் காலையில் ராசிப்பலனை பார்த்ததால்தான் நமக்கு அன்றைய நாள் முழுமையான நாளாக இருக்கும். நம்முடைய ஒவ்வொரு ராசிக்கும் என அதிர்ஷ்ட நட்சத்திரங்களும், கிரகங்களும் இருக்கும். அவற்றின் நிலையை பொறுத்துதான் நம்முடைய வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நாளில் என்ன நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்தால் முடிந்தளவு அந்த நாளின் ஆபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது என்பது கிரக நிலைகளை கணித்து முன்கூட்டியே ஜோதிட சாஸ்திரத்தால் கூற முடியும். அதன்படி உங்கள் ராசிப்படி இன்றைய நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கும் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இன்று உங்களின் கோபம்தான் உங்களுக்கு முக்கிய எதிரியாக இருக்கும், எனவே அதனை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள் குறிப்பாக பண விஷயத்தில். மாலை நேரத்தில் உங்களின் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் வந்து சேரும். உங்கள் வாழ்க்கைத்துணையிடம் இருந்து உங்களுக்கு போதுமான கவனம் கிடைக்காது. இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 3 ஆகும்.

ரிஷபம்
இன்று உங்களின் வேலை உங்களுக்கு அதிக ஓய்வை வழங்குவதாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப வருவதால் நிதி நிலை அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தின் பிரச்சினைகள் உங்கள் கவனத்தை திசைதிருப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத்துணை இன்று உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது சொந்தமாக முடிவெடுக்க முயற்சியுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 2 ஆகும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு சோதனைகள் நிரம்பிய நாளாக இருக்கும். உங்கள் குடும்ப பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். எந்த முக்கியமான முடிவெடுக்கும் முன்னரும் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் ஆலோசித்து விட்டு அதற்கு பிறகு எடுப்பது நல்லது. அன்பின் முக்கியத்துவம் என்ன என்பதை இன்று புரிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட எண் 1 ஆகும்.

கடகம்
இன்று உங்களின் நம்பிக்கை உங்களின் நாளை பிரகாசமான நாளாக மாற்றும். உங்கள் நம்பிக்கை உங்களின் எதிர்பார்ப்புகளை இன்று பூர்த்தி செய்யும். குழந்தைகளின் தேவைகளை பூரித்து செய்ய முயற்சி செய்யுங்கள். வயதில் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்பது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 4 ஆகும்.

சிம்மம்
பிஸியான வேலைகள் இருந்தாலும் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த மறந்து விடாதீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் அல்லது நகைகள் வாங்குவதற்கு இது சிறந்த நாளாகும். உங்கள் உறவுகளில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் இன்று தீர்ந்துவிடும். உங்களின் வசீகரம் இன்று அனைவரின் கவனத்தையும் உங்கள் பக்கம் திருப்பும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 4 ஆகும்.

கன்னி
உங்களுக்கு இன்று உடல் வலி ஏற்படும் நாளாக இருக்கும். உங்கள் உடலுக்கு அதிக வேலை கொடுக்கும் செயல்களை இன்று செய்யாதீர்கள். முடிந்தளவு ஓய்வு எடுக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் படைப்பாற்றலை சரியாக பயன்படுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு இலாபகரமான நாளாக இருக்கும். பெண் தோழிகள் மூலம் இன்று சில நல்ல காரியங்கள் நடக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து இன்று அழைப்பு உங்களை தேடி வரும். உங்களின் இன்றைய அதிர்ஷ்டமான எண் 1 ஆகும்.

துலாம்
இன்று யார் மீதும் வெறுப்பைக் காட்டாதீர்கள், அன்பின் முக்கியத்துவம் என்னவென்று இன்று நீங்கள் உணரவேண்டும். நிலுவையில் இருக்கும் கடன்கள் மற்றும் பணப்பிரச்சினைகள் உங்களின் வாழ்க்கையில் சோதனைகளை ஏற்படுத்தும். உங்களின் பிரச்சினைகளை இன்றே முடியுங்கள், இல்லையென்றால் அதுவே உங்களின் தாமதமாகிவிடும். உங்களின் தேவைகளை இன்று உங்கள் வாழ்க்கைத்துணை பூர்த்திசெய்ய மாட்டார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட எண் 2 ஆகும்.

விருச்சிகம்
இன்று உங்களின் கடந்த கால செயல்களுக்காக நீங்கள் விரக்தி அடைவீர்கள். உங்களின் எதிர்கால திட்டங்கள் பற்றியும், முதலீடுகள் பற்றியும் ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வாரத்தைகளை கவனமாக கையாளுஙகள். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண் 5 ஆகும்.

தனுசு
உங்களின் வீட்டுப் பிரச்சினைகள் இன்று உங்களை கோபப்படுத்தும். உடல் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளவும். எரிச்சலூட்டும் சூழ்நிலைகளில் இருந்து விலகி இருப்பதே நல்லது. எதிர்பாராத செலவுகள் உங்களின் பணப்பிரச்சினையை அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் எதிர்கால திட்டங்களை தீட்ட இது சிறந்த நாளாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 2 ஆகும்.

மகரம்
நீண்ட நாள் நோய்களில் இருந்து இன்று விடுபடுவீர்கள். உங்களின் நிதி சிக்கல்கள் உங்களின் சிந்திக்கும் திறனை பாதிக்கும். உங்களின் ஆற்றலும், உற்சாகமும் நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளை வழங்கும். உங்களின் அன்பே இன்று உங்களை பாதுகாக்கும் ஆயுதம் ஆகும். மனைவியை அதிகம் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 6 ஆகும்.

கும்பம்
இன்று அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். இன்று உங்களின் பணவரவு சிறப்பானதாக இருக்கும், ஆனால் அதனை செலவழிக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களை ஈர்ப்பதற்கு இது மிகசிறந்த நாளாகும். இன்று உங்களின் ஆக்கபூர்வமான செயல்கள் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளை வழங்கும். பழைய சம்பவங்களுக்காக இன்று உங்கள் வாழ்க்கைத்துணையுடன் சண்டை போடுவீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட எண் 9 ஆகும்.

மீனம்
இன்று பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை நிறைந்த நாளாக இருக்கும். எந்தவொரு முக்கியமான முடிவை எடுக்கும் முன்னரும் மூத்தவர்களின் அறிவுரையை கேட்பது நல்லது. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்படும் சண்டை உங்கள் மனநிலையை பாதிக்கும். கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள இது சிறந்த நாளாகும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 7 ஆகும்.



Click it and Unblock the Notifications