Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம்
செய்யும் தொழிலில் மேன்மையான சூழல் அமையும். தொழிலில் புதிய புதிய முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் போடும் வாய்ப்புகள் உண்டாகும். வீட்டுப் பராமரிப்பு பணிகளை தொடங்கி வெற்றிகரமாக முடிப்பீர்கள். வுலை சம்பந்தப்பட்ட அலைச்சல்கள் உண்டாகும். பல புதிய புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ் நிறம் 5, அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் அடர்ந்த பச்சை.

ரிஷபம்
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஆதரவினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர் பதவிகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தேவையில்லாத வாக்கவாதங்களின் மூலமாக மனக்கசப்புகளை சம்பாதிக்க நேரிடும். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக இருக்கக்கூடிய எண் 2. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்டத்தை தரும் நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
வாகனப் பயணங்களில் உங்களுக்குப் புதுவிதமான அனுபவங்கள் உண்டு. குழப்பமான எண்ணங்களினால் உங்களுக்கு மனச்சோர்வு உண்டாகும். தொழிலில் உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவு செய்வீர்கள். கணவன், மனைவிகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட நிறமாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கிறது.

கடகம்
பணியில் உள்ளவர்களுக்கு உங்களுக்குச் சாதகமான சூழல் உண்டாகும். உடலுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்து வந்த வீண் கவலைகள் நீங்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கப்போகிறது.

சிம்மம்
வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு கொஞ்சம் மந்தத்தன்மை உண்டாகும். புதிய நபர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். பொருள் வரவு உண்டாகும். வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கன்னி
வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கச் செய்யும். தொழில் விருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். இன்று உங்களுக்குப் திர்ஷ்டம் வழங்கும் எண்ணாக 3 ம்அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
பயணங்களில ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். பெரியோர்களின் ஆதரவினால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய வேலை சம்பந்தப்பட்ட முயற்சியில் இருந்து வந்த இழுபறி நிலை நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில்நீல நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
திருமணப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் உண்டாகிறது. உறவினர்களுடைய வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளினால் பிரபலங்களினுடைய உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கிறது.

தனுசு
நண்பர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற உறவினர்களின் நினைவுகள் வந்து போகும். வியாபாரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு புதுவிதமான மாற்றங்கள் செய்வீர்கள். எதிர்பாராத பண வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்
புத்துணர்ச்சி பொங்க பல புதிய திட்டங்களைத் தொடங்கும் முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடன் தோன்றிய மனக்கசப்புகள் அகலும். பிரிந்துபோன நண்பர்கள் ஒன்றிணைவதற்கான சூழல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பிற்கான உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுக்குத் தேவையான அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கிறது.

கும்பம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த அனுகூலமான சூழல் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்கிளனால் எண்ணியதை அடைவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். நண்பர்களுடைய உதவிகள் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கப்போகிறது.

மீனம்
குடும்பப் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் மூலம் உண்டான இன்னல்கள் குறையும். தேவையில்லாத செலவுகளை குறைக்க முயற்சி செய்வீர்கள். ஆன்மீக வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று மனதை அமைதிப்படுத்த முயல்வீர்கள். இன்று உங்களுக்குத் தேவையான அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications