Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
இந்த 3 ராசிக்காரங்க இன்னைக்கு ரொம்ப கவனமா இருக்கணுமாம்... ஏன் எதுக்குனு படிச்சுப் பாருங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அதன்படி அன்றைய தினத்தைத் திட்டமிட்டால் நன்மைகளே உண்டாகும்.

மேஷம்
வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். தொழில் முனைவோருக்கு கூடுதல் பணிச்சுமை உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் மேன்மையான சூழல்கள் உருவாகும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
செய்கின்ற வேலையில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் பேசுகன்ற பொழுது, பேச்சில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை. வாகனப் பயணங்களில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களினால் தேவையில்லாத மன வருத்தங்கள் உண்டாகும். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களால் பணிகளில் சின்ன சின்ன தடங்கல்னய் ஏற்படும். தொழிலில் புதிய பல யுக்திகளைக் கையாள முயற்சி செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான புதிய பொருள்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் சம்பந்தப்பட்ட உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியுாகத்தில் உள்ள மறைமுக எதிரியைக் கண்டறிந்து, அதை களைவீர்கள். உங்களுடைய செயல்வேகங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
குடும்பத்தில் மிகவும் கலகலப்பான சூழல் உண்டாகும். உங்களுடைய வாக்குத் திறமையினால், பெரும் லாபம் உண்டாகும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். பெற்றோர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கூடி வரும். குடும்ப உறுப்பினர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
தாய்வழி உறவினர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். வீடு மற்றும் மனைகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உங்களுடைய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய எண்ணங்களில் தெளிவு பிறக்கும். உங்களுடைய பயணங்களால் தொழிலில் ஆதாயங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய தேவையில்லாத சந்தேக எண்ணங்களினால் நெருங்கிய நண்பர்களின் நட்பை இழக்க நேரிடும். தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் எஞ்சியிருக்கும் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய புதிய சிந்தனைகளினால் உங்களுக்கு பல மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய உறவினர்களால் நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொதுத் தொண்டில் ஈடுபடுகிறவர்களுக்கு வெற்றி உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சளாகவும் இருக்கும்.

தனுசு
தொழில் சம்பந்தமான புதிய புதிய முயற்சிகளினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு நெருங்கியவர்களிடம் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத தனவரவுகள் உங்களுக்கு வந்து சேரும். பணி சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

மகரம்
வீட்டில் மனைவியினுடைய தேவைகளை அறிந்து கொண்ட அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களில் புதுவகையான மாற்றங்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் இருநு்து வந்த பகைமையை மறந்து நட்பு கொள்வார்கள். உங்களுடைய வெளிவட்டாரங்களில் செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். பொன் மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
தொழிலில் புதுவகையான திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். வீட்டில் உள்ளவர்களால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். புதிதாக அறிமுகம் ஆகின்ற நபர்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான முடிவுகள் பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்
உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதுக்குள் இருந்து வந்த சங்கடங்கள் தீர்ந்து மனதில் தெளிவு பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications