ராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா?

உங்க ராசி நட்சத்திரத்தின் படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா? உங்க அதிர்ஷ்டம் எப்படி இன்றைய ராசிபலனை படித்து தெரிஞ்சுக்கங்க.

இன்றைக்கு ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? இன்றைக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதோ என்று நினைக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களைப் படியுங்கள் உங்க அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், நல்ல செய்தி ஒன்று உங்கள் வீடு தேடி வரும். இதனால் உங்களை அலைச்சல் முடிவுக்கு வரும். வியாபாரியாக இருந்தால், இன்றைக்கு உங்களக்கு நல்ல லாபம் கிடைக்கும். இது நாள் வரைக்கும் உங்களுக்கு இருந்து வந்த நிதிச் சிக்கல் தீரும். பணவரவை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் செலவிட முடியும். இல்லற வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையும். மனைவியுடன் சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மனைவியின் பிடிவாத குணம் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். விட்டுக்கொடுத்து போனால் இல்லற வாழ்க்கை இனிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்

அதிர்ஷ்ட எண் : 23

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 8:30 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று நீங்கள் மிகவும் பலவீனமாக உணரலாம். உங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். பொருளாதார நிலை சாதாரணமாகவே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் உயரதிகாரிகளுக்கு மதிப்பு தரவேண்டியது கட்டாயம். ஆர்வ மிகுதியில் ஏதாவது செய்துவிட்டு பின்னர் வருத்தப்படவேண்டிய நிலை ஏற்படக்கூடும். பொறுப்புடன் நடந்துகொள்ளவும். வியாபாரிகள் கூடுதல் முயற்சி எடுத்தால் அதிக லாபம் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிற்சில சண்டை சச்சரவுகள் நிகழ வாய்ப்புண்டு. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் இனிமை தேவை. இல்லத்தரசியுடன் சில கருத்து மோதல்கள் நிகழ வாய்ப்புண்டு. அதனால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 6:45 மணிவரை

மிதுனம்

மிதுனம்

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வருவதோடு, தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வர வாய்ப்புண்டு. பொருளாதார நிலைமை மேம்படும். இன்று அதிக விலையுள்ள பொருள் ஒன்றை நீங்கள் விரும்பி வாங்க நேரிடும். குடும்ப உறப்பினர்களுடன் கூடுதல் நேரம் செலவிடுவீர்கள். பணியிடத்திலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளராக இருந்தால் சிறப்பு சலுகைகள் கிடைக்கும். தொழிலதிபராக இருந்தால் நிதி வசதிகள் கூட வாய்ப்புண்டு. குடும்பத்தில் நிம்மதி நிலைத்திருக்கும். பெற்றோரின் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்கள் மனைவியின் அன்பும் அரவணைப்பும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்கள் உடல் நலம் சீராக இருக்கும். இதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : விடியற்காலை 4:25 முதல் நண்பகல் 12:30 மணிவரை

கடகம்

கடகம்

இன்றைக்கு எதிர்பாராத பண வருவு உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்களின் நிதி நிலைமை மேம்படும். வங்கிக் கடன் பெற முயற்சித்தால் எளிதில் கிடைக்கும். பணியிடத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் உயரதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். உங்களின் திறமையை பாராட்டுவதோடு உங்களுக்கு சலுகைகள் மற்றும் பதவி உயர்வும் வழங்கலாம். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று இனிய நாளாக அமையக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கம். உங்கள் பெற்றோரின் பூரண ஆசி உங்களுக்கு கிட்டும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுது போக்குவீர்கள். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. சிற்சில பிரச்சனைகள் தோன்றி மறையலாம். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் இரவு 7:30 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்றைக்கு உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதனால் உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போகும். உங்க்ள் வேலையில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, உடனடியாக மனக்குழப்பத்தை போக்குவது கட்டாயம். இன்றைக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். மனைவியின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. உங்கள் பொருளாதார நிலைமை சீராக இருந்து வரும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. காதலர்களுக்கு இன்றைக்கு இனிமையான நாளாக இருக்கக்கூடும். காலையில் ஏற்பட்ட மனக்குழப்பத்தினால் உங்கள் உடல் நலன் பாதிக்கப்படக்கூடும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 5:40 முதல் இரவு 9:40 மணிவரை

கன்னி

கன்னி

உங்கள் வீட்டில் அமைதியான சூழல் நிலவ வேண்டுமானால், அலுவலக பிரச்சனைகளை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டியது அவசியம். குடும்பத்தின் மீது கூடுதல் அக்கறை காட்டவேண்டியது அவசியம். அதிக வேலைப்பளு காரணமாக உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அதனால் உடல் நலனில் கவனம் தேவை. இன்றைக்கு உங்கள் மனைவியின் போக்கு உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆகவே மனைவியை சரிக்கட்ட பரிசுப்பொருள் வாங்கிக் கொடுப்பது நல்லது. இதனால் உங்கள் மீது மனைவியின் அன்பு அதிகரிக்கும். உங்கள் நெருங்கிய உறவினர் ஒருவரின் நிதிச்சிக்கலை நீங்கள் தீர்க்க வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் விரும்பும் ஒருவரிடம் இருந்து அழகிய வெகுமதி ஒன்றை பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 29

சாதகமான நேரம் : மாலை 4:55 முதல் இரவு 10:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்று பணியிடத்தில் உடன் வேலை பார்ப்பவர்களால் பிரச்சனை ஏற்படக்கூடும். இதனால் கவனமாக இருந்து உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டியது கட்டாயம். வியாபாரிகள் முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திப்போடுவது நல்ல பலனைத் தரும். இல்லற வாழ்க்கை சுமூகமாக இருந்து வரும். குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சிறப்பாக கூடுதல் நேரம் செலவிட்டு பணியை முடித்தால், வார இறுதி நாட்களில் குடும்பத்தாருடன் பொழுது போக்கலாம். பொருளாதார நிலைமை மந்தமாக இருக்கும். பணத் தட்டுப்பாடு காரணமாக கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : முற்பகல் 10:05 முதல் மாலை 4:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைய நாள் உங்களுக்கு ஏற்ற நாளாக இல்லை. கடந்த காலத்தில் எடுத்த சில தவறான முடிவுகள் இன்றைக்கு உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும் கொடுக்கக்கூடும். இதனால் நிம்மதி குறையக்கூடும், அதோடு நீங்கள் தனிமையில் விடப்பட்டதாக உணர்வீகள். பழசை மறந்துவிட்டு புதிய திட்டத்தோடு வாழ்க்கையை தொடங்குங்கள். வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைமை மந்தமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்ல பலனை கொடுக்கும். பணியிடத்தில் அதிக வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படலாம். எனவே சிறிது ஒய்வு எடுத்துக்கொண்டு குடும்பத்தாருடனும், நண்பர்களுடன்ம் நேரத்தை செலவிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும். மனைவியின் அன்பு ஆறுதல் அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:55 மணிவரை

தனுசு

தனுசு

நீண்ட நாட்களுக்கு பிறகு, நீங்கள் இன்று உங்கள் மனைவியுடன் அதிக நேரம் செலவிட முடியும். இதனால் அவருடைய மனக்குறை நீங்கும். இன்றைக்கு நீங்கள் குடும்ப வாழ்க்கையிலும், பணியிடத்திலும் சம நிலையை பின்பற்றுவது நல்ல பலனைக் கொடுக்கும். மாலையில் புதிய பிரச்சனை ஏற்பட்டு உங்கள் மன நிம்மதியை கெடுக்கும். பிறரிடம் வாக்குவாதத்தில் இறங்க நேரிடும். வார்த்தையை கவனமாக பிரயோகிக்கவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பிரச்சனை பெரிதாகக்கூடும். அலுவலகத்தில் வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். மேலும் உங்கள் சகாக்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளின் நற்செயல் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இன்று நீங்கள் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். காதலர்களுக்கு ஏற்ற நாள் இது.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் மாலை 6:15 மணிவரை

மகரம்

மகரம்

மாணவர்களுக்கு இன்று சிரமமான நாளாக அமையும். படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்களை சுற்றி நடக்கும் நடப்புகளில் கவனம் செலுத்த வேண்டாம். உடல் ஆரோக்கியம் பெற யோகா, தியானம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். பணியிடத்தில் உங்கள் சகாக்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்களின் ரகசியத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். உங்கள் இருவருக்கும் இடையில் காதல் அதிகரிக்கும் நாள் இது. பொருளாதார வசதி கூடும். எதிர்பாராத பணவரவை எதிர்பார்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : நண்பகல் 1:20 முதல் இரவு 7:30 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்றைக்கு காலையிலேயே நீங்கள் ஒரு நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். இது உங்களை மேலும் உற்சாகத்தை கொடுக்கும். உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பீர்கள். இது உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். பொருளாதார நிலைமை சிறப்பாக உள்ளது. உங்கள் பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு இனிமையான நாளாக இருக்கக்கூடும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள். வேலை விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஏற்பட்ட பதற்றமும் குழப்பமும் நீங்கி மகிழ்ச்சி எட்டிப் பார்க்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 16

சாதகமான நேரம் : மாலை 6:25 முதல் இரவு 8:40 மணிவரை

மீனம்

மீனம்

இன்றைய தினம் உங்க லைப் பார்ட்டனருக்கு வாக்குறுதி எதையும் கொடுக்க வேண்டாம். உங்க திருமண வாழ்க்கையில் நீங்க சந்தோஷமாக இருப்பீர்கள். உங்க வாழ்க்கை துணைக்கு நீங்க சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். உங்களை எதிர்ப்பவர்களை நீங்க சமாளிப்பீர்கள். சுற்றுப்புற சூழ்நிலை உங்களுக்கு தொந்தரவு தரக்கூடியதாக இருக்கும். உங்க திட்டங்களை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்யலாம் ஜாக்கிரதை.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : மாலை 1:25 முதல் இரவு 8:40 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, November 8, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion