For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்களுக்கு காசு மேல காசு வந்து கொட்டப் போகுதாம்...

சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமை நாள். இந்த நாளில் எல்லோருக்கும் சுக்கிரன் அருள் கிடைக்கும். சிலருக்கு பண வருமானம் அதிகமாக வரும், திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

|

சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமை நாள். இந்த நாளில் எல்லோருக்கும் சுக்கிரன் அருள் கிடைக்கும். சிலருக்கு பண வருமானம் அதிகமாக வரும், திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். சிலருக்கு சுக்கிரன் அருளால் காதல் உணர்வும் பொங்கும். இன்றைக்கு யாருக்கு பணமும் அதிர்ஷ்டமும் கிடைக்கப் போகுது என்று பார்க்கிறீர்களா? இன்றைய ராசி பலனை படிங்க உங்க கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் நடக்குறதால, மத்தவங்க விஷயத்துல தலையிடுறதோ, வீண் வம்புக்கு போறதையோ அவாய்ட் பண்ணிடுங்க. இல்லேன்னா பிரச்சனை ஏற்படும். சாப்பாட்டு விஷயத்துலு ரொம்பவே கவனம் அவசியம். குடும்ப வாழ்க்கை இன்னிக்கு ரொம்பவே சந்தோஷமா நகரும். மனைவியோட ஆறுதல் வார்த்தை மனசுக்கு புது தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்துடும். பிசினஸ்லயும் பெருசா பணத்தை கொட்டாதீங்க. முடிஞ்சா இன்னிக்கு மவுன விரதம் இருக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : அதிகாலை 5:30 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்ப வாழ்க்கை ரொம்பவே குதூகலமா நகரும். லவ் பண்றவங்களுக்கும் லவ்வரோட சப்போர்ட் உங்களுக்கு உற்சாகத்தை கொடுத்துடும். வேலை செய்யுற இடத்துலயும் இன்னிக்கு ரொம்பவே மன மகிழ்ச்சியோட நடந்துக்குவீங்க. இன்னிக்கு உங்களுக்கு பணவரத்து சுமாரா இருக்கும். இன்னிக்கு நீங்க தொட்ட காரியம் துலங்கும். அடுத்தடுத்து வெற்றியை சந்திப்பீங்க. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல லாபம் அமோகமா இருக்கும். வேலை செய்யுற இடத்துல ஒரே மந்தமா தான் இருப்பீங்க. லவ் பண்றவங்களுக்கு லவ்வரோட ரொமான்ஸ் உற்சாகத்தையும் தெம்பையும் கொடுத்துடும். ரொம்ப நாளா வராம இழுபறியா இருந்த பணம் இன்னிக்கு பைசா பாக்கி இல்லாம உங்களுக்கு வந்துடும். இதனால நீங்க திக்குமுக்காடி போவீங்க. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் மக்கர் பண்ணும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் மாலை 6:30 மணிவரை

கடகம்

கடகம்

கடக ராசி நேயர்களே, உத்தியோகம் பாக்குற இடத்துல உதவிங்க உங்களை தேடி ஓடி வரும். உங்களோட எல்லா செயல்களுமே வெற்றியை கொண்டு வந்துடும். பண வரத்து கூடுதலா இருந்தாலும், அதுல பழைய கடனை அடைச்சிடுவீங்க. பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை எடுத்துக்குறது நல்லது. இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்குறதால ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நேரம் : இரவு 9: 00மணி முதல் இரவு 11 :00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா பெரிய மனுஷங்களோட அறிமுகம் கிடைச்சிடும். புதுசா உத்தியோகம் தேடுறவங்களுக்கு புது வாய்ப்புங்க தேடி வரும். அதை மிஸ் பண்ணாதீங்க. கல்யாணம் சம்பந்தமான பேச்சுவார்த்தை நல்லவிதமா முடிஞ்சி முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துலயும் சந்தோஷம் கூடிடும். அம்மாவோட சொந்தக்காரங்க கிட்ட ரொம்பவே தன்மையா பேசி பழகுங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 28

அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

கன்னி

கன்னி

கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு வேலை செய்யுற இடத்துல இருந்து வந்த போட்டி பொறாமை காணாம போகும். குடும்பத்துலயும் பிரச்சனைங்க தீர்ந்து போயி ரொம்பவே கலகலப்பா மாறிடும். பண வரத்தும் இன்னிக்கு அமர்க்களமா இருக்கும். லவ் பண்றவங்களுக்கு ரொம்பவே ஷ்பெஷல் நாள். இன்னிக்கு லவ் ப்ரபோஷல் பண்ணுனா தட்டி தூக்கிடலாம். இன்னிக்கு செய்யுற எல்லா முயற்சிங்களும் வெற்றியை கொடுக்கும். சிலருக்கு இன்னிக்கு நகை நட்டு வாங்குறதுக்கு யோகம் இருக்கு. மொத்தத்துல இன்னிக்கு நிறைய நல்லதுங்க நடந்துடும்.

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : காலை 06 : 00மணி முதல் காலை 11 :00 மணிவரை

துலாம்

துலாம்

துலா ராசி நேயர்களே, இன்னிக்கு எதிர்பாத்த இடத்துலு இருந்து பண உதவிகள் கிடைச்சிடும். அதனால உங்க கடன் பிரச்சனையும் முடிவுக்கு வரும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ரொம்பவே உற்சாகமான நாளா இருக்கும். சொந்தக்காரங்க மூலமா சுபச் செய்திகள் உங்க காதுக்கு வந்துடும். பிசினஸ்லயும் இது வரை இருந்து வந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். பண வரத்தும இன்னிக்கு அமோகமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வயலட்

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : முற்பகல் 10:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்குள்ளாற சந்திரன் உலாவுறதால எதுலயும் கொஞ்சம் கவனமா நடந்துக்குறது நல்லது. பிசினஸ் ரீதியா நீங்க எடுக்குற முயற்சிகள்ல நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் பிரயாணம் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு. கல்யாண சுபகாரிய பேச்சு வார்த்தையில உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்தும் இன்னிக்கு தாராளமா இருக்கும். இன்னிக்கு நீங்க செய்யுற எல்லா வேலையும் வெற்றிகரமா முடியும். குடும்பத்துலயும் மனஸ்தாபம் மறைஞ்சி ஒத்துமை ஏற்படும். ஹெல்த் கண்டிஷன் அற்புதமா இருக்கும். உங்களோட செல்வாக்கும் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல வியாபாரம் அமோகமா நடந்து லாபம் பெருகிடும். உத்தியோகத்துல கூட இருக்குறவங்களால தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கவனமா இருக்குறது நல்லது. வண்டி வாகனத்துனால தண்டச் செலவுங்க வரலாம். இன்னிக்கு பண வரத்தும் சிறப்பா இருந்தாலும், செலவுகளும் கூடவே ஓடி வரும். அதை நல்ல விதமா செலவழிக்க பாருங்க. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை எடுத்துக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல சின்னதா சலசலப்பு மனஸ்தாபம் வந்து போகும். எச்சரிக்கையா இருக்குறது நல்லது. பண வரத்தும் இன்னிக்கு ஓரளவு திருப்திகரமா இருக்கும். புதுசா சாமான்களை வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். சமூகத்துலு பெரிய மனுஷங்களோட அறிமுகம் கிடைக்கும். பிள்ளைங்களும் இன்னிக்கு பொறுப்போட நடந்துக்குவாங்க. ஹெல்த் கண்டிஷன்ல இருந்து வந்த சின்னச் சின்ன பாதிப்புகள் மறையும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 08

சாதகமான நேரம் : இரவு 7:55 முதல் இரவு 9:40 மணிவரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். ரொம்ப நாள தடங்கலா இருந்து வந்த சுபகாரிய பேச்சுவார்த்தைங்க இன்னிக்கு நல்ல விதமா முடியும். கொடுத்த கடன் தொகையும் இன்னிக்கு வசூலாகும். பண வரத்தும் இன்னிக்கு ரொம்ப சிறப்பா இருக்கும். பிசினஸ்ல ஃப்ரண்ட்ஸுங்க மூலமா லாபம் கிடைக்கும். சொந்தக்காரங்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்கோங்க. உத்தியோகத்துலயும் இன்னிக்கு சின்னதா பிரச்சனைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : முற்பகல் 10:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மீனம்

மீனம்

மீன ராசி நேயர்களே, இன்னிக்கு சுப காரிய முயற்சிகள்ல சின்னதா தடங்கல், இடைஞ்சல்னு குறுக்கீடு வரலாம்கிறதால, கூடுதல் எச்சரிக்கையோட நடந்துக்குறது நல்லது. ஒன்சைடு லவ் பண்றவங்களுக்கு லவ் சக்ஸஸ் ஆகும். எதிர்பாத்த இடத்துல இருந்து உதவி, ஒத்தாசை கிடைக்கும். கல்யாண வாழ்க்கையில மகிழ்ச்சி தாண்டவமாடும். அந்தஸ்து, செல்வாக்கு, செல்வம் எல்லாம் உங்களை தேடி வரும். திடீர் பண வரத்து இன்னிக்கு இருக்கும். அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நேரம் : இரவு 10:00மணி முதல் நள்ளிரவு இரவு 12:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 8th May 2020 Friday In Tamil

Check out the daily horoscope for 8th may 2020 friday in tamil. Read on...
Story first published: Thursday, May 7, 2020, 22:42 [IST]
Desktop Bottom Promotion