Latest Updates
-
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்..
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
ஒருவரது ராசியானது வாழ்க்கையின் சந்தோஷத்திற்கு தேவையான அனைத்து விடைகளையும் கொண்டுள்ளது. அதிலும் ஒவ்வொரு நாளும் ராசிப் பலன்களை பார்த்துவிட்டு, அன்றைய தினத்தை ஆரம்பித்தால், வரவிருக்கும் பல பெரிய பிரச்சனை
வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத் தான் செய்யும். எனவே அடுத்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் உங்களின் ராசி நட்சத்திரங்களைக் கொண்டு அவற்றை அறியலாம் என்பது எவ்வளவு சிறந்த ஒன்றாக உள்ளது. ஒருவரது ராசியானது வாழ்க்கையின் சந்தோஷத்திற்கு தேவையான அனைத்து விடைகளையும் கொண்டுள்ளது. அதிலும் ஒவ்வொரு நாளும் ராசிப் பலன்களை பார்த்துவிட்டு, அன்றைய தினத்தை ஆரம்பித்தால், வரவிருக்கும் பல பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது ஒவ்வொரு ராசிக்காரர்களின் ராசிக்குமான தினப் பலனைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று வேலை நன்றாக இருக்கும். நீங்கள் நேர்மறையாக உணர்வீர்கள். இதனால் உங்களின் தன்னம்பிக்கை மேம்படுவதோடு, உங்களில் இலக்குகளையும் வேகமாக அடைவீர்கள். இன்று குடும்பத்தினரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உறவுகள் அல்லது திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும். பொருளாதாதர முன்னிலையில் சிறப்பாக இருக்கும். இன்று வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அதிர்ஷ்ட எண் : 29
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5.40 மணி முதல் இரவு 9.45 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று பல சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் நிதி முன்னிலையில் சிறப்பாக இருக்கும் என்பதால் வருத்தம் கொள்ள வேண்டாம். இன்று கடினமாக உழைப்பீர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து அழுத்தத்தைப் பெறுவீர்கள். சில சமயங்களில் அவர்களிடம் இருந்து மோசமான அணுகுமுறையைக் காணலாம். இன்று அதிகமாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடுமபத்தினருடனான உறவுகள் நன்றாக இருக்கும். மேலும் உங்கள் துன்ப காலத்தில் உங்களின் நண்பர்கள் ஆதரிக்க முன்வருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 31
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2.30 மணி முதல் மாலை 6.40 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று நீங்கள் அமைதியற்றவராக உணரலாம். எனவே, உங்கள் மன அமைதியைப் பேணுவது அவசியம். பொருளாதார முன்னணியில் கூட, நிதி சிக்கல்கள் இருக்கலாம். நிதி பற்றாக்குறை காரணமாக, உங்களின் சில வேலைகள் இன்று முழுமையடையாமல் இருக்கலாம். இன்று வீட்டில் சில இடையூறுகள் இருக்கும். எனவே எதையும் பேசும் முன் யோசியுங்கள். ஆனால், அனைத்து சவால்களையும் மீறி அனைத்தையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். உடன் பணி புரிவர்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அதிர்ஷ்ட எண் : 21
அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று வேலை முன்னணியில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு, இன்று வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போதைய வேலையை விட நினைப்பவர்கள், ஒன்றிற்கு பல முறை யோசித்து பின் முடிவெடுங்கள். இன்று எதிலும் அவசரமான முடிவெடுக்காதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை சாதகமாக இருக்கும். உங்களின் வாழ்க்கைத் துணை நல்ல மனநிலையில் இருப்பார். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 10.10 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று அமைதியாகவும், சீராகவும் இருக்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்ளலாம் மற்றும் உங்கள் வரம்பை மீறினால் தீங்கு நேரும். சொந்தமாக வியாபாரம் செய்பவராக இருந்தால், முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. இன்று புதிய தொழிலைத் தொங்க நினைத்தால், பல சவால்களை சந்திக்க நேரிடும். பொருளாதார முன்னணியில் நல்ல நாள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மென்மையாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டு வேலைகளில் அவர்களுக்கு உதவுவீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள மறக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 22
அதிர்ஷ்ட நேரம் : இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரை

கன்னி
நிதிகளைப் பொறுத்தவரை, இன்றைய தினம் நன்றாக இருக்கும். இன்று வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. உறவுகளில் சில பதட்டங்கள் இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளது. சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அமைதியாக இருங்கள். உங்களின் அலுவலகத்தில் பிரச்சனையை சந்தித்தால், அதுக்குறித்து உங்கள் உயர் அதிகாரிகளிடம் இன்றே பேசுங்கள். இதனால் உங்களின் பிரச்சனை தீரும். இன்றைய தினம் உறவில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியமான நாள். அன்றாட பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட சிறு மாற்றங்களால் ஆரோக்கிய பிரச்சனையை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பிங்க்
அதிர்ஷ்ட எண் : 30
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4.20 மணி முதல் இரவு 9.05 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்கார மாணவர்களுக்கு இன்று நல்ல நாள். கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு, விரும்பிய முடிவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் முக்கிய விஷயங்களைப் பற்றி விவாதிப்பீர்கள். சொந்தமாக வியாபாரம் செய்பவர்கள் இன்று சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். இன்று உங்கள் குடும்பத்தினருடன் இருக்க ஒரு சிறந்த நாள் மற்றும் உங்கள் உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். மேலும் உங்கள் துணையுடன் உங்கள் பிணைப்பும் வளரும். நிதி முன்னணியும் நன்மை பயக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நேரம் : காலை 9.55 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும், மரியாதையையும் பெறுவீர்கள். வர்த்தகர்கள் இன்று எந்த முடிவு எடுத்தாலும் பலன் கிடைக்கும். சொந்த வியாபாரத்தில் முதலீடு செய்திருப்பவர்கள், இன்று எந்த முடிவு எடுத்தாலும் சிறப்பானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது சற்று மரியாதையுடன் பேசுங்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளால் வருத்தம் கொள்வீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது உணர்ச்சி ரீதியாக மகிழ்ச்சியாக இருக்க உதவும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நேரம் : காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களின் ஆரோக்கிய பிரச்சனையால் தினமே பாழாகக்கூடும். நாள்பட்ட நோயால் பல பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். இன்று நன்கு ஓய்வெடுத்தால், விஷயங்கள் சிறப்பாக மாறும். அலுவலகத்தில் வேலைப்பளுவால் மன அழுத்தம் இன்று அதிகரிக்கும். உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருங்கள். நிதி நிலைமையைப் பொறுத்தவரை, இன்று பெரிய முதலீட்டைத் தவிர்த்திடுங்கள். நீதி மன்றங்களில் வழக்குகள் இருந்தால், முடிவுகளை எடுக்கும் முன் உங்கள் வழக்கறிஞரின் உதவியை நாடுங்கள். இன்று உங்கள் பெற்றோரிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள் மற்றும் வீட்டு வேலைகளை திறமையாக செய்வீர்கள். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு வலுவாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று உங்களின் பழைய சொத்தை விற்கலாம். இன்று நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் அனைத்து பணியும் இடையூறு இல்லாமல் முடிக்கப்படும். சொந்த வாழ்க்கையில் பதற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே வேறுபாடுகள் இருக்கும். இன்று நீங்கள் கடுமையாக பேசினால், பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நிலைமை மேலும் மோசமாகும். உங்கள் துணை நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவைத் தருவார். இன்று நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட முடியாது.
அதிர்ஷ்ட நிறம் : வெளிரிய பிங்க்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரை

கும்பம்
இன்று காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்கும் மற்றும் நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பீர்கள். திருமணமானவர்கள், வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட முடியாததால் பயணம் மேற்கொள்வீர்கள். இன்று பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வீடு மற்றும் குடும்பம் தொடர்பான வேலைகள் இன்று முடிவடையும். இன்று நிதி பிரச்சனைகள் இருக்காது. உங்களின் கடுமையான உழைப்பால் பல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் அனைத்து கவலைகளும் நீங்கி சந்தோஷமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ நிறம்
அதிர்ஷ்ட எண் : 35
அதிர்ஷ்ட நேரம் : காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக ஆரம்பமாகும். இன்று நீங்கள் அமைதியாகவும், திருப்தியாகவும் இருப்பீர்கள். இன்று முக்கியமான வேலையை முடிப்பதற்கான அதிக வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் முதலீடு செய்தவர்கள், இன்று நல்ல பலனைப் பெறுவர். மற்ற துறைகளில் இருப்பவர்களுக்கு, இன்றைய தினம் சாதாரணமாக இருக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். இன்று எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை



Click it and Unblock the Notifications