இந்த ராசிக்காரங்க வாயை கொடுத்து வம்புல மாட்டிக்காதீங்க - கவனம்

இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பண வரவு வரும் யாருக்கு செலவு வரும் பிரச்சினை வரும் என்று யோசிக்கிறீர்களா? உங்களின் எல்லா கேள்விகளுக்கும் இன்றைய ராசி பலன் விடை தருகிறது மேஷம் முதல் மீனம் வரை 12 ராச

இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பண வரவு வரும் யாருக்கு செலவு வரும் பிரச்சினை வரும் என்று யோசிக்கிறீர்களா? உங்களின் எல்லா கேள்விகளுக்கும் இன்றைய ராசி பலன் விடை தருகிறது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை படிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு பிள்ளைங்களால தண்டச் செலவுங்க வந்து கையை கடிக்கலாம். எச்சரிக்கையா இருங்க. பிசினஸ்ல சின்ன சின்ன மாறுதல் செஞ்சிட்டா வியாபாரம் களைகட்டி லாபம் கூடிடும். அதோட பிசினஸ்ல பார்ட்னரோட இருந்த சின்ன சின்ன மனஸ்தாபமும் நீங்கிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்க தேவையில்லாத பிரச்சனையை சந்திக்க நேரும். அதனால கொஞ்சம் கவனமா இருந்துக்குறது நல்லது.

ராசியான நிறம்: க்ரீம்

ராசியான எண்: 7

ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு கூடப் பொறந்தவங்களால அநாவசிய பிரச்சனைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால வீட்டுலயும் நிம்மதி காணாமபோயிடும். அதனால எச்சரிக்கையா இருக்க பாருங்க. முன்கோபத்தை கொஞ்சம் குறைச்சி கிட்டா வர்ற பிரச்சனையில இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்குது. அதனால எதுலயும் நிதான போக்கோடவே நடந்துக்கோங்க. பிசினஸ்லயும் ஓரளவுக்கு இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பணவரத்தும் இன்னிக்கு சுமாராதான் இருக்கும். ஹெல்த் கண்டிஷன் இன்னிக்கு சுமார் தான், கவனமா இருக்க பாருங்க.

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 4

ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு உங்களுக்கு தெய்வ காரியத்துல ஈடுபாடு அதிகரிச்சிடும். பிசினஸ்லயும் லாபம் கொட்டும். எந்த வேலையையும் ரொம்பவே உற்சாகத்தோட செய்வீங்க. குடும்பத்துலயும் சுபச்செலவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. வீட்டுப் பெண்களுக்கு ரொம்ப நாள் ஆசை இன்னிக்கு நிறைவேறிடும். உங்களோட பொருளாதார நிலையும் ரொம்ப சிறப்பா இருக்கும்.

ராசியான நிறம்: பச்சை

ராசியான எண்: 15

ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

கடகம்

கடகம்

இன்னிக்கு பூர்வீக சொத்துப் பிரச்சனையில உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பிள்ளைங்களால சின்ன சின்னதா மனஸ்தாபங்கள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருக்க பாருங்க. குடும்பத்துல இருக்குறவங்களை அனுசரிச்சி போறது நல்லது. கவர்மெண்ட்ல இருந்து எதிர்பாத்த ஹெல்ப் கிடைக்குறதுக்கு சந்தர்ப்பம் உண்டாகும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலைச்சுமை குறைஞ்சிடும். பிசினஸ்ல இருந்த பிரச்சனைங்க கொஞ்சம் குறையும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வெளியூர் பிரயாணத்தை அவாய்ட் பண்ணிடறது நல்லது.

ராசியான நிறம்: வெள்ளை

ராசியான எண்: 18

ராசியான நேரம்: காலை 7.45 - 12 மணி

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு எதிர்பாக்காத இடத்துல இருந்து ஹெல்ப் கிடைக்கும். கூடப்பொறந்தவங்களால நல்லது நடக்கும். புதுசா வேலை தேடுறவங்களுக்கு வேலை கிடைக்க சந்தர்ப்பம் அமையும். கொரோனா பீதி இருக்குறதுனால, பிசினஸ் விசயமா வெளியூர் போற ஐடியா இருந்தா அதை தள்ளிப்போடுங்க. உங்க பேங்க் பேலன்ஸும் கூடிடும். இன்னிக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துலயும் சந்தோஷம் கூடிடும். உங்க ஹெல்த் கண்டிஷனும் புதுப்பொலிவோட மிளிரும்.

ராசியான நிறம்: சிவப்பு

ராசியான எண்: 9

ராசியான நேரம்: மாலை 4 மணி - இரவு 7 மணி

கன்னி

கன்னி

இன்னிக்கு உங்களுக்கு பண வரத்து அதிகமா இருந்தாலும், குடும்பத்துல சுபச் செலவுங்க வர்றதுனால பண நெருக்கடிங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. சொந்தக்காரங்க மூலமா நல்ல விஷயம் நடக்கலாம். விலை கூடுன பொருள் வாங்குறதுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். புதுசா எடுக்குற முயற்சிங்களுக்கு இடைஞ்சல், தடங்கள் ஏற்படலாம். தெய்வ காரியங்கள்ல ஈடுபாடு கூடிடும்.

ராசியான நிறம்: பச்சை

ராசியான எண்: 15

ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

துலாம்

துலாம்

இன்னிக்கு, சொந்தக்காரங்களோட இருந்தவந்த மனஸ்தாபம், பகை காணாம போயி ஓத்துமையா இருப்பீங்க. குடும்பத்துலயும் எல்லோருமே ஒத்துமையா சந்தோஷமா இருப்பாங்க. சில பேருக்கு உத்தியோகத்துல ட்ராண்ஸ்பர் கிடைச்சாலும், கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல யோசிச்சி முடிவெடுங்க. பழைய பாக்கியும் வசூலாகிடும். பிசினஸை டெவலப் பண்றதுக்கு நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு வெற்றி கிடைச்சிடும். பொருளாதார நிலைமையும் இன்னிக்க அற்புதமா இருக்கும்.

ராசியான நிறம்: ஆரஞ்ச்

ராசியான எண்: 14

ராசியான நேரம்: பிற்பகல் 12 மணி - இரவு 9 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு உங்க குடும்பத்துல சந்தோஷம் கொடுக்குற தரமான சம்பவங்கள் நடக்கக்கூடும். பிள்ளைங்களும் பொறுப்போட நடந்துக்கிட்டு, படிக்குறதுல ரொம்ப ஆர்வம் காட்டுவாங்க. உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு அவங்க டேலண்டுக்கு ஏத்தமாதிரி ப்ரமோஷன் கிடைச்சிடும். புதுசா வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. பெத்தவங்களோட அன்பும் அரவணைப்பும் இன்னிக்கு உங்களுக்கு கிடைச்சிடும். நல்ல செய்திங்க வந்து உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துடும்.

ராசியான நிறம்: மெரூன்

ராசியான எண்: 25

ராசியான நேரம்: காலை 4.20 பிற்பகல் 12 மணி

தனுசு

தனுசு

இன்னிக்கு வீட்டுல இருக்குறவங்க கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்து போனீங்கன்னா பிரச்சனைங்க சால்வ் ஆகுறதுக்கு வாய்ப்பிருக்கு. செலவுங்களும் கட்டுக்கடங்காம போயி கையை கடிக்குறதோட பேங்க் பேலன்ஸும் குறைஞ்சிடும். அதனால சிக்கனமா செலவழிச்சா கடன் வாங்காம தப்பிச்சிடலாம். வண்டி வாகனத்துனால தண்டச் செலவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வெளியூர் பிரயாணத்தை அவாய்ட் பண்றது நல்லது.

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 4

ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

மகரம்

மகரம்

இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, பிசினஸ்ல மத்தவங்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீங்க. இல்லேன்னா பெருசா இழப்பு ஏற்படுறதை தவிர்க்க முடியாது. புது இண்வெஸ்ட்மெண்ட்டையும் அவாய்ட் பண்ணிடுங்க. சுபகாரிய பேச்சுவார்த்தையையும் தள்ளிப்போடுங்க. இன்னிக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டு ஹெல்த் கண்டிஷனையும் பாதிக்கும். எச்சரிக்கையா இருக்க பாருங்க.

ராசியான நிறம்: ப்ளூ

ராசியான எண்: 2

ராசியான நேரம்: காலை 7.15 மணி - மாலை 2.05 மணி

கும்பம்

கும்பம்

இன்னிக்கு சாயந்திரத்துக்கு மேல சந்திராஷ்டமம் வர்றதுனால, எச்சரிக்கையா இருக்க பாருங்க. குடும்பத்துலயும், பிள்ளைங்களும் ஒத்துமையா இருப்பாங்க. வீட்டு பெண்கள் துணி மணி நகை நட்டு வாங்குறதுல ரொம்பவே ஆர்வமா இருப்பாங்க. பிசினஸ்ல புதுசா அறிமுகம் ஆகுற நபர்னால லாபம் கூடிடும். குடும்பத்தோட வெளியூர் போற ஐடியா இருந்தா அதை தள்ளிப்போடுறது நல்லது. இன்னிக்கு மவுன விரதம் இருந்தா மனசையும் ஹெல்த்தையும் நல்லபடியா வச்சிக்கிடலாம்.

ராசியான நிறம்: இளம் சிவப்பு

ராசியான எண்: 6

ராசியான நேரம்: பிற்பகல் 1 மணி - மாலை 5 மணி

மீனம்

மீனம்

இன்னிக்கு விடியல் காலையிலயே சுபச் செய்திங்க உங்க காதுக்கு வந்து சேரும். அதனால மனசளவுல ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க. கூடப்பொறந்தவங்களாலயும், ஃப்ரண்ட்ஸுங்க மூலமாவும் நல்ல விஷயங்கள் நடக்குறதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. நிச்சயதார்த்தம், கல்யாணம் பத்தி பேசுறதுக்கு இன்னிக்கு அருமையான நாள்.

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 5

ராசியான நேரம்: பிற்பகல் 2.45 - 4 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion