For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துலாம் ராசிக்காரங்களுக்கு சந்திராஷ்டமம் கவனமாக இருங்க...

இன்று மார்ச் 3 ஆம் நாள் சந்திரன் ரிஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம்.

|

இன்று மார்ச் 3 ஆம் நாள் சந்திரன் ரிஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். முகத்தில் பொலிவு கூடும். பேச்சில் இனிமை பிறக்கும். உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். சிக்கனமாக செலவு பண்ணுங்க பணத்தை மிச்சப்படுத்தலாம். நண்பர்கள் உதவி செய்வார்கள். இன்று குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். மாணவர்கள் கல்வித்திறன் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

ராசியான நிறம் : பர்ப்பிள்

ராசியான எண் : 12

ராசியான நேரம் : மதியம் 12.45 மாலை 6 மணி

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகமாகும். எதையும் தைரியமாக துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலங்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நன்மையில் முடியும். மாணவர்கள் இன்று தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் புளு

அதிர்ஷ்ட எண் 15

அதிர்ஷ்ட நேரம் மாலை 4 மணி இரவு 9.20 மணி

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் சுப விரைய செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் நெருக்கடிகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறாமல் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சின்னச் சின்ன கோளாறுகள் ஏற்படும். உங்களின் இன்றைய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

அதிர்ஷ்ட நம்பர் 30

அதிர்ஷ்ட நேரம் காலை 11.45 மாலை 6.30

கடகம்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்க ராசிக்கு இன்று பணவரவு அபரிமிதமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். மாணவர்களுக்கு இன்றைய தினம் ரொம்ப நல்ல நாள். ஆன்மீக பயணம் அற்புதங்களை ஏற்படுத்தும். இன்று உங்களுக்கு ரொமான்ஸ் ஆன நாள் உங்க வாழ்க்கை துணையோடு நீங்க நிறைய நேரம் செலவு செய்வீர்கள்.

ராசியான நிறம் ப்ரௌன்

ராசியான எண் 7

ராசியான நேரம் காலை 6.15 மணி காலை 11.30 மணி

சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நினைத்த காரியங்கள் நிறைவேறும். அலுவலகத்தில் வேலைகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள். காரியங்களில் வெற்றி கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர சகோதரிகள் வழியே சுப செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாகும். தேர்வுகளை உற்சாகமாக எதிர்க்கொள்வீர்கள்.

ராசியான நிறம் ஆரஞ்ச்

ராசியான எண் 3

ராசியான நேரம் பிற்பகல் 2.40 மணி மாலை 4 மணி

கன்னி

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்களின் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மாணவர்களுக்கு கல்வியில் சந்தோஷம் பிறக்கும். உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும்.

உங்க ராசியான நிறம் பிங்க்

ராசியான நம்பர் 2

ராசியான நேரம் மதியம் 1.30 இரவு 8 மணி

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தூரப் பயணங்களில் கவனமுடன் செல்வது நல்லது. பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். மன அமைதியே இன்றைக்கு ரொம்ப நல்லது.

ராசியான நிறம் ப்ளூ

ராசியான எண் 16

ராசியான நேரம் மதியம் 1.30 பிற்பகல் 3.30 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகமாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

ராசியான நிறம் அடர் பச்சை

ராசியான எண் 24

ராசியான நேரம் காலை 9 மணி இரவு 8.30 மணி

தனுசு

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். நோய்கள் நீங்கும். கடன் பிரச்சினை தீரும். இன்று உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பெண்களுக்கு இன்று சந்தோஷமான நாள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உடனான சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ராசியான நிறம் வெள்ளை

ராசியான எண் 8

ராசியான நேரம் பிற்பகல் 12 மணி இரவு 7 மணி

மகரம்

மகரம்

சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல், பணவிரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரமான உணவுகளை சாப்பிடாதீங்க.

ராசியான நிறம் மஞ்சள்

ராசியான நிறம் 9

ராசியான நேரம் பிற்பகல் 2 மணி இரவு 7 மணி

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சுகமான நாளாக அமையும். உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. இன்று அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும் கவனமாக இருங்கள்.

ராசியான நிறம் மெரூன்

ராசியான எண் 6

ராசியான நேரம் காலை 8 மணி பிற்பகல் 2.15 மணி

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்க தைரியம் அதிகமாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ராசியான நிறம்: பிங்க்

ராசியான எண் 32

ராசியான நேரம் பிற்பகல் 3.30 இரவு 8 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 3rd March 2020 Tuesday In Tamil

Check out the daily horoscope for 3rd march 2020 tuesday in tamil. Read on...
Story first published: Monday, March 2, 2020, 23:53 [IST]
Desktop Bottom Promotion