சூரிய பகவானால் லாபம் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

மே மாதத்தின் கடைசி நாள். சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஞாயிறு கிழமை. இந்த நாளில் நமக்கு பணம் வருமானம் வருமா? திடீர் செலவுகள் வருமா? பிறக்கப் போகும் புதிய மாதத்தில் ஏதாவது புதிய வாய்ப்புகள் வருமா என்று ய

மே மாதத்தின் கடைசி நாள். சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஞாயிறு கிழமை. இந்த நாளில் நமக்கு பணம் வருமானம் வருமா? திடீர் செலவுகள் வருமா? பிறக்கப் போகும் புதிய மாதத்தில் ஏதாவது புதிய வாய்ப்புகள் வருமா என்று யோசிக்கிறீர்களா? இன்றைய ராசி பலன்கள் மூலம் உங்களின் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு பிசினஸ்ல உங்களோட செல்வாக்கு, அந்தஸ்து, பேர், புகழ் எல்லாம் கூடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களால சாதகமான பலன் கிடைக்கும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா உங்களுக்கு லாபம் கிடைக்கும். கல்யாணம், சுபகாரிய பேச்சுவார்த்தைகள்ல நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்னிக்கு உங்களுக்கு இனிப்பான செய்திகள் வந்து திக்குமுக்காட வைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் இரவு 10:20 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு பிசினஸ்ல இருந்துவந்த ஃபைனான்ஸ் பிரச்சனை தீரும். அதோட வியாபாரம் பெருகி லாபம் கூடுதலா கிடைக்கும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்களை அனுசரிச்சி நடந்துகிட்டா, பிரச்சனை வராம உங்களுக்கு நல்லது நடக்கும். பிள்ளைங்க மூலமா தேவையில்லாத பிரச்சனை வந்து முளைக்கும். குடும்பத்துலயும் திடீர் செலவுகள் வந்துடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : காலை 6:00 முதல் முற்பகல் 11:25 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை லாபகரமா இருக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. வேலை தேடுறவங்களுக்கு புது வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமான வழக்குகள்ல உங்க பக்கம் தீர்ப்பு கிடைக்கும். சொந்தக்காரங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். இன்னிக்கு மனசு பூரா சந்தோஷம் நிறைஞ்சிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா பேங்க் லோனுக்கு முயற்சி பண்றவங்களுக்கு லோன் ஈஸியா கிடைக்கும். வெளியூர் பிரயாணம் பண்றதுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ரொம்ப நாள் கழிச்சி பழைய ஃப்ரண்ட்ஸுங்களை சந்திச்சி பழைய நினைப்புகளை அசை போடுவீங்க. திடீர் பண வரத்து உண்டு. ஆடம்பர பொருட்களை வாங்குறதுல ஆர்வம் கூடும். பண வரத்து கம்மியா இருக்குறதனால செலவுகளை கண்ட்ரோல் பண்றது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் : 40

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் இரவு 10:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு பிசினஸ் வளர்ச்சிக்காக எடுக்குற புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கவர்மெண்ட் மூலமா எதிர்பாத்த உதவிகள் இன்னிக்கு காலதாமதம் இல்லாம உடனே கிடைக்கும். கல்யாணம், சுபகாரிய முயற்சிகள்ல இருந்து வந்த தடங்கல், இடைஞ்சல் விலகிடும். பிள்ளைங்க மூலமா சுபச்செய்திகள் உங்க காதுக்கு வந்துடும். மொத்தத்துல இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப சிறப்பா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:20 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு பிசினஸ்ல லாபம் பெருகிடும். கடன் பிரச்சனையும் காணாம போகும். பெத்தவங்களோட ஆறுதலான வார்த்தைங்க உங்க மனசுக்கு புது நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கும். குடும்பத்துல சொந்தக்காரங்க வர்றதுனால தேவையில்லாத வீண் பிரச்சனைங்க முளைக்கலாம். எச்சரிக்கையா இருங்க. ஹெல்த் கண்டிஷன்ல சின்னதா பாதிப்பு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு உத்தியோகம் சம்பந்தமா வெளியூர் போறதுனால உங்களுக்கு ஆதாயமும் லாபமும் கிடைக்கும். கணவன் மனைவுக்கு நடுவுல ஒத்துமை கூடிடும். லவ் பண்றவங்களுக்கு அருமையான நாளா இருக்கும். உத்தியோகத்துல எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். ஹெல்த் கண்டிஷன்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். மொத்தத்துல இன்னிக்கு மன மகிழ்ச்சியோட சுத்தி வருவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு பிசினஸ்ல புதுசா கூட்டாளிங்க வந்து சேருவாங்க. பிள்ளைங்க மூலமா நல்லது நடந்துடும். புதுசா வண்டி வாகனம் வாங்குறதுக்கு முயற்சி பண்ணலாம். பூர்வீக சொத்து பத்துனால நல்ல லாபம் கிடைக்கும். கூடப்பொறந்தவங்க உங்களுக்கு சாதகமா இருப்பாங்க. குடும்பத்துலயும் எல்லோரும் ஒத்துமையா இருப்பாங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:20 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க. ரொம்ப நாளா இழுபறியா இருந்து வந்த பழைய கடன் பாக்கியும் இன்னிக்கு வசூலாகிடும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு ரொம்பவே அற்புதமா இருக்கும். சுபகாரிய முயற்சிகள்ல தடங்கல், இடைஞ்சல் ஏற்படலாம். ரொம்ப நெருங்கின சொந்தக்காரங்க கூட மனஸ்தாபம் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:05 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு பிசினஸ்ல ஓரளவுக்கு முன்னேற்றம் கிடைக்கும். மனசுல ரெண்டு மூணு நாளா இருந்து வந்த கலக்கம், குழப்பம் விலகிடும். இன்னிக்கு காலை 10:30 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் இருக்குறதுனால, புதுசா எந்த முயற்சியும் எடுக்காம கொஞ்சம் தள்ளி வைக்குறது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் கிட்ட தேவையில்லாததை பேசி மனசை சங்கடப்படுத்தாதீங்க. இன்னிக்கு நீங்க எடுத்த வேலையை செஞ்சி முடிக்குறதுக்கு முன்னால போதும் போதும்னு ஆயிடும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு உங்க ராசிக்கு காலையில 10:30 மணிக்கு மேல சந்திராஷ்டமம் வர்றதுனால, உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்களோட தேவையில்லாம வீண் வாக்குவாதம் பண்ணாம சொல்றதை கேட்டு நடந்துகிட்டா உங்களுக்கு நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனையில எச்சரிக்கையா இருந்துக்கோங்க. யாருக்கும் முந்திகிட்டு ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. மத்தவங்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 11:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு பிசினஸ்ல சின்னச் சின்னதா மாற்றங்களை செஞ்சிட்டா வியாபாரம் பெருகி கொழுத்த லாபத்தை பார்க்கலாம். ஃப்ரண்ட்ஸுங்களோட ஐடியா புது நம்பிக்கையை கொடுத்துடும். சொந்தக்காரங்களால நல்லது நடந்துடும். இன்னிக்கு பண வரத்து அமோகமா இருக்கும்கிறதுனால, பொருளாதார ரீதியாக இருந்து வந்த நெருக்கடிகள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : பிற்பல் 3:00 முதல் மாலை 6:30 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, May 31, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion