For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆடி வெள்ளிக்கிழமை இந்த ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம்...!

உங்கள் தோல்வியை வெற்றிகரமாக மாற்றுவதற்கு உங்கள் தினசரி ராசிபலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். நட்சத்திரங்களின் இயக்கங்கள் காரணமாக சவால்களும் வாய்ப்புகளும் இருக்கும்.

|

ஒரு நாளின் தொடக்கத்தை பொறுத்துதான் அந்நாள் முழுவதும் இருக்கும். ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது இன்றைய நாள் நமக்கு அதிர்ஷ்டமானதாக இருக்குமா? இன்றைய நாள் வெற்றிகரமானதாக இருக்குமா? என்கிற சந்தேகம் எல்லாருக்கும் இருக்கும். அதனை தெரிந்து கொள்ள நமக்கு உதவியாக இருப்பது நம்முடைய ராசிபலன்தான்.

Daily Horoscope For 31st July 2020 Friday In Tamil

உங்கள் தோல்வியை வெற்றிகரமாக மாற்றுவதற்கு உங்கள் தினசரி ராசிபலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். நட்சத்திரங்களின் இயக்கங்கள் காரணமாக சவால்களும் வாய்ப்புகளும் இருக்கும். உங்கள் தினசரி பலன்களை தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இன்றைய நாளின் உங்க ராசிபலன் என்ன என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மேஷம்

மேஷம்

உங்கள் கடின உழைப்பு மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் உங்கள் மேலதிகாரிகள் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். இது உங்களுக்கு மரியாதை மற்றும் பாராட்டுகளைத் தரும். இருப்பினும், இன்று உங்கள் பேச்சில் சில கடுமைகள் இருக்கும், இதனால் நீங்கள் விரும்பாவிட்டாலும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தலாம். இந்த விஷயத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை ஏற்ற இறக்கமாக இருக்கும். பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். மறுபுறம், உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உடல்நலம் சீராக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

நீங்கள் சில காலமாக வேலைக்காக ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், இன்று நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம். வணிகர்கள் தங்கள் தொழிலைத் தொடர ஒரு பொன்னான வாய்ப்பைப் பெறலாம். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் அவசர முடிவெடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மறுபுறம், இன்று மின் வணிகத்துடன் தொடர்புடைய மக்களுக்கு மிகவும் பிஸியான நாளாக இருக்கப்போகிறது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்பத்துடன் உறவுகள் நன்றாக இருக்கும். நீங்கள் திருமணமானவர் என்றால், இன்று நீங்கள் உங்கள் மனைவியிடமிருந்து ஒரு சிறப்பு பரிசைப் பெறலாம். இது தவிர, உங்கள் மனைவியின் உணர்ச்சிபூர்வமான ஆதரவு உங்கள் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும்.

 மிதுனம்

மிதுனம்

வேலை செய்பவர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும், உங்களின் சிறிய தவறு கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டவைக்கும். அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக மனம் கலங்கிவிடும். நீங்கள் சிந்திக்காமல் இதேபோல் செலவு செய்தால், விரைவில் ஒரு பெரிய நிதி நெருக்கடி உங்கள் மீது வரக்கூடும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் பலப்படுத்தப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம்.

MOST READ:நாம் விரும்பி சாப்பிடும் இந்த ஆரோக்கிய உணவுகள் நம் பற்களை எப்படி மோசமாக தாக்குகிறது தெரியுமா?

கடகம்

கடகம்

பொருளாதார சிக்கல்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. பணம் இல்லாததால் நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சினையை அமைதியாக கையாள முயலுங்கள். மாற்று வேலை தேடுபவர்கள் நல்ல வேலைக்காக இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். நீங்கள் அவசரமாக எடுத்த சில முடிவுகள் இன்று தவறான விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நாள் முழுவதும் மன அழுத்தத்துடன் இருப்பீர்கள்.

சிம்மம்

சிம்மம்

வேலையில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள் இது. நிதி சிக்கல்கள் காரணமாக, மனம் திசைதிருப்பப்படும். பணம் இல்லாததால், உங்கள் முக்கியமான சில வேலைகள் இன்று முழுமையடையாமல் இருக்கலாம். வணிகர்கள் ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும். வீட்டுச் சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிந்தவரை முயலுங்கள். ஆரோக்கியமாக இருக்க, முதலில் நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சிக்க வேண்டும்.

கன்னி

கன்னி

வேலை செய்பவர்களுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். உங்களது சில முக்கியமான பணிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும், தவிர சக ஊழியர்களுடன் நடக்கும் பிரச்சினையும் முடிவடையும். நீங்கள் வியாபாரம் செய்தால், நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு நல்ல நேரத்தை பெறுவீர்கள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும், மனரீதியாகவும் நீங்கள் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

துலாம்

துலாம்

ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள், ஒவ்வொரு முடிவையும் கவனமாக எடுங்கள். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்கள் வேகம் சற்று மெதுவாக இருக்கும். உங்கள் பல பணிகள் இன்று முழுமையடையாமல் இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் வியாபாரம் செய்தால், இன்று எந்த ஆவணத்தையும் படிப்பதற்கு முன், அதை சரியாகப் படியுங்கள், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். இன்று வரவு மீறிய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.

MOST READ:உருளைக்கிழங்கு சமையலறையை தாண்டி உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் அற்புதங்கள் என்ன தெரியுமா?

விருச்சிகம்

விருச்சிகம்

தேவையானதை பேசுங்கள், இல்லையெனில் இன்று உங்கள் நாள் தேவையற்ற விஷயங்களைச் செய்வதில் வீணாகும். உங்கள் அதிக தன்னம்பிக்கை உங்கள் சிரமங்களை அதிகரிக்கும். வர்த்தகர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் எதிரிகள் உங்களுக்கு கடுமையான போட்டியை வழங்குவார்கள். மேலும், உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று வாயு, அமிலத்தன்மை அல்லது அஜீரணம் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.

தனுசு

தனுசு

இன்று மிகவும் சோதனைகள் நிறைந்த நாளாக இருக்கும், தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்க்கவும் இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். தேவையற்ற பேச்சிலிருந்து விலகி இருங்கள். பொருளாதார முன்னணியில் இன்று உங்களுக்கு நல்லதாக இருக்காது. வீட்டு உறுப்பினர் ஒருவரின் ஆரோக்கியம் குறைந்து வருவதால் நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள், அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது, உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மகரம்

மகரம்

வேலையில் இருப்பவர்கள் இன்று சோம்பேறித்தனத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் பணிகளைப் பற்றி விழிப்புடன் இருங்கள், சுறுசுறுப்பாக வேலை செய்யவும். முக்கியமான முடிவெடுக்க சிரமப்படுவீர்கள், மனதில் இருப்பதை உங்கள் அன்புக்குரியவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பணப்புழக்கம் இன்று வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும் வரவு அதிகமாக இருப்பதை போல செலவும் குறைவாக இருக்கும். இன்று வாகனத்தைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.

கும்பம்

கும்பம்

இன்று சில முக்கியமான வேலைகளை முடிப்பீர்கள். இன்று, ஒரு பெரிய பிரச்சினை தீர்க்கப்படும். வேலை செய்பவர்கள் இன்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும். இது தவிர, உங்கள் எந்த வேலைக்கும் நீங்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்கக்கூடாது. வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும், மேலும் அவர்களுடன் உங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்படலாம். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது.

MOST READ:இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில பயத்துக்கு இடமே இல்லையாம்... தைரியம் இவங்க இரத்தத்துலயே இருக்காம்...!

மீனம்

மீனம்

வேலையின் அதிக சுமை காரணமாக, நீங்கள் அதிக அழுத்தத்தை உணர வாய்ப்புள்ளது. அமைதியான மனதுடன் உங்கள் வேலையை முடிக்க முயற்சித்தால், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். நீங்கள் வியாபாரம் செய்தால், இன்று உங்கள் வார்த்தைகளை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் உங்கள் கெட்ட வார்த்தைகளால், கையில் இருக்கும் வேலையை எளிதாக அழிக்க முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் குடும்பத்தினரிடமிருந்து நீங்கள் முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதலர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 31st July 2020 Friday In Tamil

Check out the daily horoscope for 31st July 2020 Friday in Tamil.
Story first published: Thursday, July 30, 2020, 18:59 [IST]
Desktop Bottom Promotion