சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...

மே மாதத்தின் இறுதி நாளை எட்டப்போகிறோம். மே 30ஆம் தேதி சனிக்கிழமை. சனிபகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில் சில ராசிக்காரர்களுக்கு பண வருமானம் வரும். சில ராசிக்காரர்களுக்கு செலவுகள் வரும்.

மே மாதத்தின் இறுதி நாளை எட்டப்போகிறோம். மே 30ஆம் தேதி சனிக்கிழமை. சனிபகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில் சில ராசிக்காரர்களுக்கு பண வருமானம் வரும். சில ராசிக்காரர்களுக்கு செலவுகள் வரும். சிலருக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சிலருக்கு பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்படும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் யாருடைய வாழ்க்கையில் சனியின் ஆசியால் சந்தோஷம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, இன்னிக்கு கல்யாணம் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல விதமா நடக்கும். ரொம்ப நாளா இழுபறியா இருந்து வந்த பேங்க் லோன் இன்னிக்கு கிடைக்க சந்தர்ப்பம் கூடிவரும். நகை நட்டுன்னு வாங்கி சந்தோஷப்படுவீங்க. பண வரத்தும் அமோகமா இருக்கும். சொந்தக்காரங்க மூலமாவும், பிள்ளைங்க வழியிலும் மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற செய்திகள் உங்க காதுக்கு வரும். பிசினஸ்ல நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 29

சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்க மூலமா நன்மைகள் நடந்துடும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா எதிர்பாத்த உதவி கிடைக்கும். பிசினஸ்ல கூட்டாளிங்களை கொஞ்சம் அனுசரிச்சி போனா நட்டம் வராம தவிர்த்திடலாம். வெளியூர் பிரயாணத்தை அவாய்ட் பண்ணிட்டா வீண் பிரச்சனைங்க முளைக்காம தப்பிக்கலாம். மொத்தத்துல இன்னிக்கு உங்களுக்கு சுகமான நாளா அமையும். விரைய செலவுகளை குறைங்க பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ கலர்

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல இருந்து வந்த பிரச்சனை தீரும். கடன் பிரச்சனை கட்டுக்குள்ள இருக்கும். பிசினஸ்ல கூட்டாளியோட ஒத்துப்போனா வியாபாரம் பெருகி லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல வேலைச்சுமை குறையும். இன்னிக்கு திடீர்னு வர்ற பணத்தால சந்தோஷம் கூடிடும். குடும்பத்துலயும் சந்தோஷமா இருப்பாங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அமோகமா இருக்கும். வேலைங்க சீக்கிரம் முடியக்கூடும். இன்னிக்கு உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 8:00 மணிவரை

கடகம்

கடகம்

கடக ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல நல்ல முன்னேற்றமும் கூடவே லாபமும் கிடைக்கும். சமூகத்துல பெரிய மனுஷங்களோட அறிமுகம் கிடைக்கும். குடும்பத்துல எல்லோரும் உற்சாகமா இருப்பாங்க. மனசளவுலயும், ஹெல்த் அளவுலயும் புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும். ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்கும். மேரேஜ் லைஃப்ல ரொம்பவே சந்தோஷமா இருப்பீங்க. உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற அந்நியோன்யம் கூடிடும். திடீர் பணவரத்து வந்து உங்களை குஷிப்படுத்திடும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 42

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 7:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்க குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். வீட்டுத் தேவைகளும் குறையும். கொடுத்த கடனும் இன்னிக்கு வசூலாகிடும். பெத்தவங்க கூட இருந்து வந்த மன வருத்தங்கள் மறையும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் அற்புதமா இருக்கும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரியால நல்லது நடந்துடும். மனசுல சின்னச் சின்ன குழப்பம் வந்து எட்டி பாக்கும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வளவு நல்ல நாளா இல்லை. ஹெல்த் கண்டிஷன்ல் கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 7:45 மணிவரை

கன்னி

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்க கூட பேசும்போது கொஞ்சம் கனிவா தன்மையா பேசி பழகுறது நல்லது. உத்தியோகத்துல சீனியர் அதிகாரியோட ஒத்தாசை கிடைக்கும். இன்னிக்கு சுபகாரிய பேச்சுவார்த்தையை ஒத்திப்போடுறது நல்லது. பிசினஸ்ல வருமானத்தை விட செலவுகள் ஜாஸ்தியா இருக்கும். குடும்பத்துல இருந்துவந்த கருத்து வேறுபாடும் இன்னிக்கு சால்வ் ஆகிடும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : முற்பகல் 11:45 முதல் இரவு 9:00 மணிவரை

துலாம்

துலாம்

துலா ராசி அன்பர்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பத்து மூலமா உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அதனால உங்க பேங்க் பேலன்ஸும் கூடிடும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் நல்ல லாபத்தை கொடுக்கும். ஆஃபீஸ்ல வேலையில கவனமா இருக்க பாருங்க. வருமா வராதான்னு இருந்த பணம் இன்னிக்கு வந்துடும். பிசினஸிலும் இன்னிக்கு லாபம் கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் நண்பகல் 1:30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல வியாபாரம் பெருகி நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துல ஒத்துமை கூடிடும். இன்னிக்கு சிலர் புது வேலைக்கு முயற்சி பண்ணினா கிடைக்கும். மனசுக்கு மகிழ்ச்சி கொடுக்குற இனிப்பான செய்திகள் தேடி வரும். இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. அதனால தாராளமா செலவழிப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 6:00 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல புது கூட்டாளிகள் கிடைப்பாங்க. ஃப்ரண்ட்ஸுங்களை சந்திச்சி மனசு விட்டு பேசி சந்தோஷப்படுவீங்க. மனசு சந்தோஷப்படுற மாதிரியான தரமான சம்பவங்கள் நடந்துடும். நீங்க நினைச்ச காரியம் நடக்குறதுல தடை, தாமதம் வந்து சங்கடத்தை கொடுத்துடும், சமாளிக்க ரெடியா இருங்க. இன்னிக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரியான சம்பவங்கள் நடந்துடும்.

ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் நடக்குறதுனால வண்டி வாகனத்துல போகும்போது கூடுதல் கவனத்தோட இருக்குறது நல்லது. பிசினஸ்ல கொஞ்சம் எச்சரிக்கையோட இருந்தா நட்டம் வராம தவிர்த்திடலாம். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்லயும் சின்னச் சின்னதா பாதிப்புகள் வரலாம். செய்யுற வேலையிலயும் சின்னதா இடைஞ்சல் உண்டாகலாம். கவனமா இருந்துக்குறது நல்லது. இன்னிக்கு எதுலயும் நிதான போக்கோட இருக்குறது நல்லது.மேரேஜ் லைஃப்ல சின்னதா வாக்குவாதம் உண்டாக வாய்ப்பிருக்குது. அதனால கோவப்படாம இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடிடும். மேரேஜ் லைஃப் ரொம்ப ஸ்ட்ராங்காகிடும். உங்க ஒய்ஃப் உங்களுக்கு ரொம்ப சப்போர்டிவா இருப்பாங்க. இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்க வேலையை பார்த்து உங்க முதலாளி உங்களுக்கு ப்ரமோஷன் தர்றதுக்கு வாய்ப்பிருக்கு. லவ் பண்றவங்க இன்னிக்கு தாராளமா லவ் ப்ரபோஷல் பண்ணலாம். குடும்பத்துலயும் ஒத்துமையும் சந்தோஷமும் கூடிடும். பண வரத்து அமோகம இருக்கும்கிறதுனால, உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

மீனம்

மீனம்

மீன ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல எதிர்பாக்காத திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். செலவுகளும் கண்ட்ரோல்ல இருக்கும்கிறதுனால, உங்க சேமிப்பும் கூடிடும். இதுவரைக்கும் இருந்துவந்த பிரச்சனைங்க காணாம போயி மனசுக்குள்ள நிம்மதி உண்டாகும். பிள்ளைங்க மூலமா சுபச்செய்திகள் வந்துடும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும். மேரேஜ் லைஃபும் சந்தோஷமா இருக்கும். ஒய்ஃப் கூட ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : மாலை 5:05 முதல் இரவு 7:55 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, May 30, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion