For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரர்களது திருமண வாழ்க்கை மிகவும் கசப்பா இருக்கும் - தெரியுமா?

இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், யாருக்கு செலவு அதிகமாக இருக்கும், எந்த ராசிக்காரரின் திருமண வாழ்க்கை கசப்பாக இருக்கும், யார் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பன போன்ற பல கே

|

ஜோதிடத்தின் மூலம் ஒருவரின் எதிர்காலத்தைக் கணிக்க முடியும். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடத்தைக் கொண்டு அறியலாம். இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், யாருக்கு செலவு அதிகமாக இருக்கும், எந்த ராசிக்காரரின் திருமண வாழ்க்கை கசப்பாக இருக்கும், யார் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை இன்றைய ராசிப்பலனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! பணத்தைப் பொறுத்தவரை, இன்றைய நாள் நன்றாக இருக்கும். திடீர் செலவுகள் அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு இன்று சில புதிய நண்பர்கள் கிடைக்கலாம். வேலையைப் பற்றி பேசுகையில், உங்கள் நம்பிக்கை இன்று மிகவும் வலுவாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு ஒரு கடினமான பணி வழங்கப்பட்டால், அதை நீங்கள் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் உயர் அதிகாரிகள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். இது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உங்கள் துணையுடனான நீண்டகால சர்ச்சை இன்று முடிவடையும். உங்கள் ஆரோக்கியம் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் நேர்மறையான ஆற்றலால் சூழப்பட்டிருப்பதை உணர்வீர்கள். உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும் இன்று வெற்றிகரமாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கித் தவிக்கும் எந்தவொரு பிரச்சனையும் இன்று தீர்க்கப்படலாம். இன்று எந்த விஷயத்திலும் அலட்சியமாக இல்லாமல் இருப்பது நல்லது. உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். இன்று நீங்கள் அவர்களுடன் கோவிலுக்கு செல்லலாம். உங்கள் துணையின் அன்பான நடத்தை இன்று ஆனந்தத்தை அளிக்கும். உங்கள் இருவருக்கும் இடையிலான உறவு வலுவாக இருக்கும். உங்கள் இருவருக்கும் இடையேயான அன்பு ஆழமடையும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 35

அதிர்ஷ்ட நேரம் : காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஒரு வாய்ப்பைப் பெறுவீர்கள். ஆனால் வேலையில் பிஸியாக இருப்பதால், வாய்ப்பை இழக்க நேரிடும், ஆனால் ஏமாற்றமடையத் தேவையில்லை. இன்று உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால், நாளை உங்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கக்கூடும். இன்று உங்கள் வேலைக்கு அதிக முன்னுரிமை அளிப்பதே நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் இருக்கும். உங்கள் பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். திருமணமானவராயின், இன்று உங்கள் துணையின் முழு அன்பையும் அனுபவிப்பீர்கள். பல நாட்களுக்குப் பிறகு, நீங்கள் இருவரும் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவீர்கள். ஆரோக்கியம் பற்றி பேசும் போது, உடலின் எந்தப் பகுதியிலும் இன்று வலி ஏற்படலாம். பணம் தொடர்பான விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2.05 மணி முதல் மாலை 4.20 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று அலுவலக பணியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், முழு செறிவுடன் வேலை செய்ய வேண்டும். இது உங்கள் வழியில் வரும் அனைத்து தடைகளையும் நீக்கும். நீங்கள் விரும்பினால், உங்கள் உயர் அதிகாரிகளின் உதவியையும் பெறலாம். வியாபாரம் செய்பவராயின், இன்று நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் வணிகத்தை வளர்க்க நீங்கள் கடுமையாக உழைத்தால், விரைவில் சரியான முடிவுகள் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இன்று நீங்கள் ஒரு பெரிய லாபத்தைப் பெறலாம். வீட்டில் அமைதியை நிலைநாட்ட பரஸ்பர வேறுபாடுகளை சமாளிக்க முயற்சி செய்யுங்கள். ஆவேசமாக நடந்து கொள்வதற்கு பதிலாக, அனைவரையும் அன்போடு நடத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12.20 மணி முதல் மதியம் 3 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! தொடர்ச்சியான வேலை காரணமாக நீங்கள் இன்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பீர்கள். விடுமுறை எடுத்து உங்கள் வீட்டில் ஓய்வெடுப்பது அல்லது நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுவது நல்லது. இது உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இன்று பேசும் போது, உங்கள் வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்துங்கள். இல்லையெனில், ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கக்கூடும். அன்பைப் பற்றி பேசினால், துணையின் புகார்களை நீக்க இன்று அவர்களுக்கு ஒரு அன்பளிப்பை வழங்கலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இன்று உங்கள் வாழ்க்கை துணையின் உடல்நிலை குறித்து நீங்கள் கொஞ்சம் கவலைப்படுவீர்கள். நீங்கள் அவர்களை நன்றாக கவனித்துக் கொள்வது நல்லது. பணத்தின் அடிப்படையில் நாள் சிறப்பாக இல்லை.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 8.20 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களின் திருமண வாழ்க்கையில் விஷயங்கள் சாதகமாக நடப்பதாகத் தெரியும். கடந்த சில நாட்களாக, வாழ்க்கைத் துணையின் அணுகுமுறை காரணமாக நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு மிகவும் வருத்தப்பட்டீர்கள். ஆனால் இன்று அவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் காண்பீர்கள். நீங்களும் உங்கள் கோபத்தை தூக்கி எறிந்துவிட்டு, அன்போடு அவர்களை நோக்கி கையை நீட்ட வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலையைப் பொறுத்தவரை, உங்கள் கடின உழைப்பால் நீங்கள் விரைவில் உயரத்தை அடைவீர்கள். இன்று சரியான திசையில் நீங்கள் செல்வதாக உணருவீர்கள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 23

அதிர்ஷ்ட நேரம் : காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று மற்றவர்களை மகிழ்விக்க அதிக செலவு செய்ய வேண்டாம். வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தால், பணத்தை சிந்தனையுடன் செலவிடுங்கள். இன்று உங்கள் சிறிய தவறு உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இன்று பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருங்கள். யாரையும் அதிகம் நம்ப வேண்டாம். இன்று குடும்ப வாழ்க்கையில் சரியான முடிவுகளைப் பெறமாட்டீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் நடத்தை இன்று நன்றாக இருக்காது. நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 12

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9.15 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று, நீங்கள் உங்கள் கவனத்தை வேலையிலிருந்து திசை திருப்பலாம். இன்று நீங்கள் வேடிக்கைக்கான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். இன்று ஒரு நல்ல செய்தியைப் பெறலாம். இதன் காரணமாக வீட்டின் சுற்றுச்சூழல் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவுகள் தீவிரமடையும். அலுவலகத்தில் உள்ள உங்கள் சகாக்களுடன் கொஞ்சம் சமூகமாக இருங்கள். அனைவரையும் மரியாதையுடன் நடத்துங்கள். இன்று அன்பு விஷயத்தில், துணையுடன் காதல் அதிகமாக இருக்கும். இன்று கூர்மையான பொருளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 17

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று மதப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அமைதிக்காக நீங்கள் ஏதேனும் ஒரு மத இடத்திற்குச் செல்லலாம். மேலும் சில ஏழை மக்களுக்கு நீங்கள் உதவலாம். பணத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் ஒரு பழைய சொத்தை விற்க முடிவு செய்யலாம். சரியாக வாங்குபவரை நீங்கள் தேர்வு செய்தால், நிச்சயமாக பயனடைவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் சகோதரர்களுடனான தற்போதைய வேறுபாடுகள் இன்று சரியாகும். நீங்கள் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் சச்சரவு இருக்கும். இன்று உங்கள் துணையின் நடத்தை உங்களை உணர்ச்சிவசப்படுத்தக்கூடும். எனவே உங்கள் நடத்தையை சரியாக வைத்து விஷயத்தை அமைதியாக கையாளுவது நல்லது. இன்று உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம் : காலை 8.25 மணி முதல் மதியம் 12 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால், இன்று உங்களின் கடின உழைப்பு வெற்றி பெறுவதாகவும், உங்கள் வேலை மிக வேகமாக முன்னேறி வருவதாகவும் நீங்கள் உணருவீர்கள். சேவைத் துறையில் உள்ளவர்களுக்கு இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் உயர் அதிகாரிகள் உங்களை ஊக்குவிப்பார்கள். இது உங்களை நன்றாக உணர வைக்கும். பணம் தொடர்பான விஷயங்கள் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் விலைமதிப்பற்ற பொருளை ஷாப்பிங் செய்யலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் துணை உங்களை ஆதரிப்பார். உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்று பேசும் போது, உங்கள் துணை உங்களைப் பற்றி எதையும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆரோக்கியம் பற்றி கூறுவதானால், சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். அதிக நேரம் பசியுடன் இருப்பது உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 11

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களின் வலுவான மன உறுதி மற்றும் நம்பிக்கை காரணமாக ஒவ்வொரு பணியையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்கள் திறமையை அலுவலகத்தில் உள்ளவர்கள் இன்று முழுமையாக அறிவார்கள். உயர் அதிகாரிகள் உங்கள் சிறந்த செயல்திறனில் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், உங்கள் கடின உழைப்பைப் பாராட்டுவார்கள். உங்களுக்கு இன்று ஒரு பெரிய மரியாதை கிடைக்கும். பணம் தொடர்பான விஷயங்கள் வலுவாக இருக்கும். திடீரென்று நீங்கள் பண பலனைப் பெறலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உடல்நலம் பற்றிப் பேசினால், இன்று நீங்கள் உங்கள் அன்றாட வழக்கத்தில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்யலாம், இது விரைவில் உங்களுக்கு பயனளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 20

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்றைய தினம் உங்களுக்கு நல்லதாக இருக்காது. உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். உங்கள் துணையுடனான வேறுபாடுகள் ஆழமடையக்கூடும். இன்று, நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் திருமண வாழ்க்கை கசப்பாகிவிடும். பண நிலைமை இன்று விசேஷமாக இருக்காது. இன்று நீங்கள் எதிர்பார்த்த நிதி நன்மையை நீங்கள் பெற முடியாது. நீங்கள் உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமாக உணருவீர்கள். உங்கள் மனதில் விரக்தியின் உணர்வுகள் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்த வேலையிலும் அதிகம் கவனம் செலுத்தமாட்டீர்கள். இன்று நீங்கள் எந்த முக்கியமான முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அலுவலகத்தில் உள்ள உங்கள் முதலாளி அதை உங்களிடம் சுட்டிக்காட்டலாம் அல்லது எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்கலாம். அவர்கள் புகார் செய்யுமளவு வாய்ப்பளிக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : காலை 9.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 30th December 2019 Monday In Tamil

Check out the daily horoscope for 30th december 2019 monday. Read on...
Story first published: Monday, December 30, 2019, 0:10 [IST]
Desktop Bottom Promotion