காந்தி மாதிரி இன்னைக்கு ரொம்ப பொறுமையா இருக்க வேண்டிய ராசிகள் எவை தெரியுமா?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

horoscope

12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். 12 ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் அது இருக்கும் இடத்தின் தாக்கத்தைப் பொறுத்தும் பலன்களைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுடைய புத்திக்கூர்மை அதிகரிக்கும். அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் சில விரயச் செலவுகள் ஏற்படும். புதுப்புது தொழில்நுட்ப வித்தைகளை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். பிறருடைய செயல்பாடுகளை குறை சொல்வதைத் தவிர்க்கவும். உங்களுடைய வேலையில் முழு கவனத்தைச் செலுத்துங்கள். தந்தையுடைய செயல்பாடுகளை குறை சொல்வதைத் தவிர்த்து விடுங்கள். விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

தொழிலில் உங்களுக்கு பெரும் லாபம் உண்டாகும். வீட்டில் உள்ள குழந்தைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சி செய்வீர்கள். முக்கிய பிரமுகர்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய பேச்சு வாதத் திறமையினால் லாபம் கிடைக்கும் அரசாங்கத் தரப்பில் இருந்து ஆதாயங்கள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளால் நல்ல பெயர் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத இடைஞ்சல்கள் உண்டாகும். உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவினால் குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். தானியங்களின் வாயிலாக பொருளாதார லாபங்கள் உண்டாகும். வீட்டில் குழந்தைகளின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய உயர்ந்த எண்ணங்களினால் தொழிலிலும் பல மாற்றங்கள் உண்டாகும். மனதில் சோர்வுகள் உண்டானதால் வேலையில் கொஞ்சம் கவனமின்றி தேவையில்லாத அவச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். நீங்கள் எதிர்பார்க்காத உதவிகளின் மூலமாக, உங்களுக்கு தொழில் மேன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

கடகம்

கடகம்

உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். வியாபாரங்களி்ல இதற்கு முன்னால் உங்களிடம் இருந்து விலகிச் சென்றவர்கள் இப்போது மீண்டும் நெருங்கி வர ஆரம்பித்து விடுவார்கள். எடுத்த காரியங்கள் கொஞ்சம் இழுபறியாக இருப்பதால் அலைச்சலும் பதட்டமும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சின்ன சின்ன மறதியினால் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

வேலை செய்கின்ற இடங்களில் உடன் பணிபுரிகிற சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்து, அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வீட்டுக்குத் தேவையான புதிய பொருள்களை வாங்கி, வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள். மனதுக்குள் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். தொழிலில் புதிய புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். செய்கிற வேலைகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் உள்ளவர்கள் விரும்பிய பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய நட்பு வட்டம் பெருக ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக இருநு்து வந்த சிக்கல்கள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் உங்களுக்கு சாதகமான முடிவைத் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். செய்கின்ற செயல்களில் கொஞ்சம் நிதானம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். உங்களுடைய முழு திறமையும் வெளிப்படும். எதிர்ப்புகள் விலக ஆரம்பிக்கும். உங்களுடைய மனோ தைரியம் அதிகரிக்கும். நண்பர்களுடைய உதவியினால் தொழிலில் முன்னேற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுடைய சாதுர்யமான செயல்களினால் உங்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். உடல் சோர்வு வந்து போகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலமாக உங்களுடைய மதிப்பு பொதுவெளியில் அதிகரிக்கும். மனதுக்குள் தோன்றுகின்ற பலவிதமான எண்ணங்களினால் மனக்கவலை ஏற்படும். புதிய பதவி மற்றும் பொறுப்புகள் கிடைக்கும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

தந்தை வழியிலான உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளைப் பெறுவீர்கள். சர்வதேச வணிகத்தில் ஈடுபடுகிறவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் அடைவீர்கள். அரசு அதிகாரிகளின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

செய்யும் செயல்களில் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டும். உறவினர்களிடம் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். புதிதாக எதையேனும் செய்ய முயற்சித்தால் அதை நன்கு ஆராய்ந்து சிந்தித்து செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

கலை சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். அதனால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். எந்த காரியமாக இருந்தாலும் முழு தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்குவீர்கள். முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களின் மூலமாக சின்ன சின்ன பிரச்னைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசயாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

செய்கின்ற செயல்களில் உங்களுடைய வேகம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். பாராட்டுக்கள் வந்து குவியும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அந்த துறை சார்ந்த அறிவு அதிகரிக்கும். சமயக் கருத்துக்கள் தொடர்புடைய விழாக்களில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக ஈடுபாடும் எண்ணங்களும் அதிகரிக்கும். வியாபாரங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். நிலுவையில் இருந்த கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும். பணியில் ஒருவிதமன குழப்பமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, October 2, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion