இன்று எந்த ராசிக்காரர்களுக்கு மோசமான நாள் தெரியுமா?

இன்றைய தினம் சந்திரன் துலாம் ராசியிலும் மாலையில் விருச்சிக ராசியிலும் சஞ்சரிக்கிறார் இந்த சஞ்சாரத்தினால் மீனம் ராசிக்காரர்களுக்கும் மாலைக்கு மேல் மேஷம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் ஆகும்.

சந்திரன் இன்றைய தினம் சந்திரன் துலாம் ராசியிலும் மாலையில் விருச்சிக ராசியிலும் சஞ்சரிக்கிறார் இந்த சஞ்சாரத்தினால் மீனம் ராசிக்காரர்களுக்கும் மாலைக்கு மேல் மேஷம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களையும் ராசியான நேரத்தையும் பார்க்கலாம்.

Daily Horoscope For 29th October 2019 Thursday

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகம் வரும் யாருக்கு திடீர் செலவு வரும். ரொமான்ஸ் உணர்வு யாருக்கு உற்சாகத்தை தரும் என்று பார்க்கலாம். நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்று ராசிபலனைப் பார்த்து தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டிலும் மாலைக்கு மேல் எட்டாம் வீடான விருச்சிகத்திலும் சஞ்சரிப்பதால் சில பிரச்சினைகளை சந்திக்கலாம். சகிப்புத்தன்மை இருந்தால் எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்கொள்ளலாம். கடினமாக உழைத்து, எதிர்காலத்தில் பலன்களை பெற முயற்சிக்கவும். பணம் விசயத்தில் சில நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதி நிலையை வலுப்படுத்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பிசினஸ் விசயத்தில் உங்களுக்கும் பார்ட்னருக்கும் இடையே சில மோதல்கள் எழக்கூடும். அதிகமாக பேசாதீங்க, வீண் வாக்குவாதம் பிரச்சினைகளை கொண்டு வரும். உங்கள் விசயத்தில் பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள், அவர்களுடன் ஒன்றாக நல்ல நேரத்தை செலவிட முடியும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:30 முதல் 9:00 வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று நீங்கள் காதல் விஷயங்களில் நல்ல முடிவுகளைப் பெறலாம். நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால், உங்கள் மனம் திறந்து பேச இதுவே சிறந்த நேரம். மேலும், நீங்கள் நேர்மறையான பதில்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களின் நிதி நிலைமை அதிகரிக்கும் அதே நேரம் அதை அடைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்களையும் உங்கள் அன்பையும் புரிய வைக்க முடியும். எப்படியிருந்தாலும், சில நேரம் வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும் வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். உங்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பான சில பிரச்சினைகள் இன்று தீர்க்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு இது சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்றைய தினம் நீங்கள் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அதிக வேலைப்பளு உங்களை சோர்வடையச் செய்யும் என்பதால் பதற்றத்தை தவிர்க்கவும். உங்கள் உடல்நலம் தொடர்பான மிகச்சிறிய விஷயத்தைக் கூட புறக்கணிக்காதீர்கள். பணம் சரளமாக புழங்கும். அதே நேரம் இன்று உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும். உங்கள் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற நீங்கள் இன்று நிறைய செலவிட வேண்டியிருக்கும். நீங்கள் வர்த்தகம் செய்தால், பெரிய முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். எந்தவொரு முக்கியமான வணிக முடிவுகளுக்கும் இந்த நேரம் பொருத்தமானதல்ல. வேலை செய்பவர்கள் உங்க உயரதிகாரி அல்லது உங்கள் முதலாளியின் முன் சரியாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் தவறுகளைச் செய்திருந்தால், அதை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேளுங்கள். தேவையில்லாமல் வாதிட்டு நேரத்தை வீணாக்காதீர்கள், அது உங்கள் மதிப்பு மரியாதையை கெடுக்கக்கூடும். திடீர் பயணங்கள் உங்களை சோர்வடையச் செய்வதோடு உங்களை பலவீனப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 12:50 மணி முதல் மாலை 5:00 மணி வரை

கடகம்

கடகம்

இன்றைய தினம் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்களின் பிணைப்பை மேலும் அதிகப்படுத்துவீர்கள். உங்களின் உணர்வுகளை புரியவையுங்கள். இன்றைய தினம் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் அது சிக்கலை ஏற்படுத்தி விடும். உங்கள் கணவன் அல்லது மனைவி உடனான தவறான புரிதல்களை விட்டொழியுங்கள். ஒருவருக்கொருவர் சரியாக புரிந்து கொண்டு வாழ்க்கையை சரியாக வாழத் தொடங்குங்கள். வேலையில் ஏற்படும் தடைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நிதி சிக்கல்கள் தீரும். உங்களுக்கு பணம் பல வழிகளிலும் வரும். தடைகளினால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும் அந்த அழுத்தத்தை போக்க நீங்க முயற்சி பண்ணுங்க வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல் 6:30 மணி வரை

சிம்மம்

சிம்மம்

உங்கள் காதல் வாழ்க்கையில், இன்று நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். உங்கள் இருவருக்கும் இடையிலான உறவைப் பற்றி உங்கள் லைப் பார்ட்டனர் மிகவும் தீவிரமாக இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக உங்களைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் திருமணம் செய்து கொண்டால், உங்கள் பார்ட்டனர் இன்று நல்ல மனநிலையில் இருப்பார். உங்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் அவர்கள் விரும்பலாம். பெற்றோருடனான உறவும் நன்றாக இருக்கும், தேவைப்பட்டால் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆன்மீகப் பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும் மற்றும் நீங்கள் மாலை நேரத்தில் உங்கள் குடும்பத்தினருடன் ஒரு ஆன்மீக தலத்திற்கு செல்லலாம். பணியிடத்தில் நிலைமை சாதகமாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து சில முக்கியமான ஆலோசனைகளைப் பெறலாம், அது உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கும். நீங்கள் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால் உங்கள் திட்டம் வெற்றிகரமாக முடிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை

கன்னி

கன்னி

உங்க ராசிக்கு இன்றைய தினம் குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்ய நேரம் கிடைக்கும். பிரிந்திருந்த நீங்கள் குடும்பத்தோடு ஒன்று சேருவீர்கள். உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அவர்களின் அன்பு மற்றும் பாசத்தால், உங்கள் மன அழுத்தங்கள் அனைத்தும் மறைந்துவிடும். நிதிநிலைமை அற்புதமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் இன்று ஷாப்பிங் செய்வீர்கள். பணியிடத்தில் நிபந்தனைகள் சாதகமாக இருக்கும். இன்றைய தினம் உங்கள் நிலுவையில் உள்ள பணிகளை தீர்ப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறலாம். திருமணமான தம்பதிகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இடையேயான காதல் நன்றாக இருக்கும், நீங்கள் திருமணமானால், உங்கள் திருமண வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 முதல் இரவு 9:20 மணி வரை

துலாம்

துலாம்

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், உங்கள் மனமும் உடம்பும் உற்சாகமாக இருப்பீர்கள். நீங்கள் நேர்மறையாக உணருவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தினால் பெரிதும் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் நேர்மையால், நீங்கள் அலுவலகத்தில் உங்கள் வேலையை செய்து முடிப்பீர்கள். பிசினஸ் சுமாராக இருக்கும். வணிகர்கள் தேவையில்லாமல் சுற்றித் திரிய வேண்டியிருக்கும். இந்த நிலைமை நீண்ட காலம் நீடிக்காது, விரைவில் பிரச்சினை தீர்க்கப்படும். பணம் இன்றைக்கு நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்த ஒரு முக்கியமான முடிவை எடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:55 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று நீண்ட நேரம் கழித்து, நீங்கள் ஒரு பெருமூச்சு விடுவீர்கள். நீங்கள் நம்பிக்கையை விட்டுவிட்ட வேலை திடீரென்று நிறைவடையும். இன்று, சாத்தியமற்ற விஷயங்கள் கூட உங்களுக்கு சாத்தியமாகத் தோன்றும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். உங்களுக்கும் உங்கள் மூத்த சகோதரருக்கும் இடையிலான நாட்களில் இருந்து வந்த மோதல் முடிவடையும், நீங்கள் ஒன்றாக ஒரு நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் இருவரும் குடும்பம் தொடர்பான சில விஷயங்களையும் விவாதிக்கலாம். பணி முன்னணியில் இருந்து, நீங்கள் அலுவலகத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்களுக்கு சமீபத்தில் ஒரு முக்கியமான பொறுப்பு ஒதுக்கப்பட்டிருந்தால், இன்று அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் உங்கள் வேலை ஆபத்தில் இறங்கக்கூடும். உடல்நலம் பற்றி பேசினால், எந்தவொரு நாள்பட்ட வலியிலிருந்தும் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

தனுசு

தனுசு

இன்றைய தினம் நீங்கள் பயணம் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள், இல்லாவிட்டால் எதையாவது இழக்க நேரிடும். உங்களின் மதிப்புமிக்க பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் அவை திருடப்படலாம் அல்லது இழக்கப்படலாம். காதல் விஷயங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். நீங்கள் உங்களுக்கு காதல் மணியடிக்கும், இதயத்தின் ஆசையை நீங்கள் முழு மனதுடன் வரவேற்பீர்கள் ஒருவேளை உங்களுடைய இதயத்தில் இருக்கும் அதே உணர்வை நீங்களும் கொண்டிருக்கலாம். பண விசயத்தில் நீங்க ஜாக்கிரதையாக இருங்க உங்கள் மனைவியுடன் சில மோதல்கள் ஏற்படும். மனைவி சொல்லே மந்திரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பணியிடத்தில் சாதாரண நாளாக இருக்கும், மேலும் உங்கள் எல்லா வேலைகளும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். நீங்கள் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

மகரம்

மகரம்

பணம் பாக்கெட்டில் இருந்து குறையும். பணம் வரும் பாதைகள் தடைபடும். நிதி தடைகள் காரணமாக மனதில் கவலைகள் அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சொந்தக்காரர்கள், உறவினர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. அப்பாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு மன அழுத்தம் உண்டாகும். உங்க லைப் பார்ட்டனருடன் ஏற்படும் சர்ச்சை கோபத்தை ஏற்படுத்தும். உங்க வீட்டின் மன அமைதியை இது குறைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:45 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்றைய தினம் நீங்கள் எரிச்சலடைவீர்கள், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. எந்த காரணமும் இல்லாமல் கோபப்படுவீர்கள். நீங்கள் அமைதியாக உட்கார்ந்து உங்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண வேண்டும். சிறிது நேரம் தனியாக அமைதியாக இருங்க. பிரச்சினைகள் எளிதில் தீரும். வீட்டில் வயது மூத்தவர்களின் வழிகாட்டுதல் தேவைப்படும். நிதி நிலைமை சுமாராக இருக்கும் என்பதால் இன்று அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில், மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவு மேம்படும். திருமண வாழ்க்கையில் இன்று சாதாரணமான நாள். உங்க லைப் பார்ட்டனர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். உங்கள் மன அமைதியை பாதுகாக்க தியானம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 1:40 மணி வரை

மீனம்

மீனம்

வேலை செய்யும் இடத்தில் நீங்க சந்தோஷமாக இருப்பீர்கள். பணியிடத்தில் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்கள் வேலையைக் கண்டு உயர் அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள், உயரதிகாரிகளின் பாராட்டு உங்கள் நம்பிக்கையையும் மன உறுதியையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும், உங்கள் உடன்பிறப்புகளிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ளது. இன்று, நீங்கள் சில பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம். பண விசயத்தில் இந்த நாள் இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் நெருங்கிய நண்பருடன் இன்று சில மோதல்கள் எழக்கூடும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:50 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, October 29, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion