Latest Updates
-
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கரும்புள்ளிகளை சாதாரணமா நினைக்காதீங்க.. அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
பாபா வாங்காவின் தலைசுற்ற வைக்கும் உலக அழிவு பற்றிய கணிப்பு..எந்த வருடத்தில் உலகம் அழியப்போகுதாம் தெரியுமா? -
சுக்கிர பெயர்ச்சி: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள ராஜயோகம்..இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்...! -
வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா?
இன்றைய ராசிப்பலன் (28.05.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருக்கணும்…
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...


மேஷம்
இன்று உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நேர்மறையாக உணர்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறீர்கள். ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாளுவதால் அழுத்தமாக உணரலாம். இருப்பினும், உங்கள் வேலையை அமைதியாகவும், புரிதலுடனும் முடிக்க முயற்சிக்கவும். அப்போது தான் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் இன்று நல்ல பொருளாதார நன்மையைப் பெற முடியும். குறிப்பாக இரும்பு உற்பத்தியாளர்கள் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவால் நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை

ரிஷபம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது, குறிப்பாக வங்கி ஊழியர்கள் இன்று சில நல்ல செய்தியைப் பெறலாம். பதவி உயர்வு பெறவும் வாய்ப்புள்ளது அல்லது விரும்பும் இடமாற்றத்தைப் பெறலாம். வணிகர்கள் பெரிய வாடிக்கையாளர்களை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். இன்று நிதி அடிப்படையில் ஒரு விலையுயர்ந்த நாளாக இருக்கும். பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், எதிர்காலத் திட்டங்கள் தடைபடக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று வீட்டில் ஒரு விவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நிலையைப் பொறுத்தவரை, உடற்சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக, இன்று உங்கள் உடல்நலம் சற்று மோசமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மிதுனம்
நீங்கள் ஆன்லைனில் வியாபாரம் செய்தால், இன்று உங்களுக்கு மிகவும் பயனளிக்கும். உங்கள் வணிகம் வளர வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செயல்திறன் பெரிதும் பாராட்டப்படும். மேலும் இன்று சில நல்ல செய்திகளையும் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். நீங்கள் அவர்களுக்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும். இன்று பணத்தின் அடிப்படையில் கலவையான நாளாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று உங்களுக்கு வாயு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

கடகம்
நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், படிப்பில் இன்று அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் எல்லா கவலைகளையும் மறந்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்பின் நல்ல பலனைப் பெறலாம். நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தால், உயர் பதவியுடன் கூடிய சம்பள உயர்வைப் பெற முடியும். வணிகர்கள் இன்று பெரிதும் பயனடையலாம். தடைப்பட்ட எந்த வேலையையும் முடிக்க வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான விவாதம் இன்று சர்ச்சையாக மாறும். உங்கள் கோபத்தையும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்தவும். இல்லையெனில், வீட்டின் அமைதி கலங்கக்கூடும். உடல்நிலையைப் பற்றி பேசுகையில், அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், உடல்நலம் மோசமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:50 மணி முதல் இரவு 8:18 மணி வரை

சிம்மம்
நீங்கள் ஒரு தொழிலதிபர் என்றால், இன்று கவனமாக இருக்க வேண்டும். அரசு ஆவணங்களைப் பொறுத்தவரை, அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லையெனில் நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். இன்று அலுவலகத்தின் சூழ்நிலை சரியாக இருக்காது. வேலை அழுத்தம் அதிகரிக்கும். மேலும், உங்கள் செயல்திறன் குறித்து முதலாளி அதிருப்தி அடைவார். உங்கள் வேலையை பாதுகாக்க விரும்பினால், கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். பணத்தைப் பொறுத்தவரை, பிறரை மகிழ்விக்க அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், சிக்கலில் சிக்கக்கூடும். ஆரோக்கியமாக இருக்க அன்றாட வழக்கத்தில் தேவையான சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

கன்னி
நீங்கள் ஒரு தொழிலதிபர் மற்றும் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், எல்லா வேலையையும் முழுமையாக சரிபார்க்க வேண்டும். மேலும், இன்று அவசரப்படுவது உங்களுக்கு நல்லதல்ல. உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலையுடன் தொடர்புடைய ஒரு சிறந்த நபரை சந்திக்க முடியும். எதிர்காலத்தில் இந்த சந்திப்பின் நல்ல பலனை நிச்சயமாக பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படுத்த முடியும். வருமானம் அதிகரிக்கக்கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு உறுப்பினர்கள் அனைவருடனான உறவும் இனிமையாக இருக்கும். மேலும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஆச்சரியத்தை கொடுக்க விரும்பினால், இன்று அதற்கு ஒரு நல்ல நாள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

துலாம்
இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். மனரீதியாக நீங்கள் எதையும் நன்றாக உணர மாட்டீர்கள். பல வகையான கவலைகளால் சூழப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பாக இருக்கும். முதலாளி ஒரு பெரிய பணியை உங்களிடம் ஒப்படைக்கலாம். வணிகர்கள் நல்ல பொருளாதார நன்மைகளைப் பெறலாம். ஒரு புதிய வணிக முன்மொழிவைப் பெற்றால், உங்கள் முடிவை கவனமாக எடுக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, தவறான புரிதல்கள் உங்கள் உறவில் அதிகரிக்கும். எனவே புத்திசாலித்தனமாகவும் பொறுமையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நலம் பற்றிப் பேசினால், உங்களுக்கு இதய நோய் இருந்தால், இன்று அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

விருச்சிகம்
இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. புதிதாக கூட்டு வணிகத்தைத் தொடங்க விரும்பினால், நீங்கள் ஒரு சிறந்த சலுகையைப் பெறலாம். பொருத்தமான ஆலோசனையை எடுத்த பின்னரே இறுதி முடிவை எடுப்பது நல்லது. அலுவலக சூழல் நன்றாக இருக்கும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று, கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கப்படும். வீட்டுச் சூழலில் முன்னேற்றம் சாத்தியமாகும். வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு எதிராக எதையும் செய்யாதீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்களுக்காக நிறைய பணம் செலவிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்களுக்காக போதுமான நேரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தனுசு
வேலை முன்னணியில், இன்று நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். இன்று சில சாதகமான மாற்றங்கள் சாத்தியமாகும். அலுவலகத்தில் நிறைய மரியாதையைப் பெறலாம். அதே போல் உங்கள் வருமானமும் அதிகரிக்கும். வர்த்தகர்கள் இன்று தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை என்று வரும்போது, உங்கள் முடிவுகளை உங்கள் வாழ்க்கைத் துணை மீது திணிப்பதைத் தவிர்க்கவும். அவர்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்க வேண்டும். பெற்றோரின் ஆரோக்கியம் இன்று குறையக்கூடும். இன்று, அவர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, தூய்மைக்கு அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 5:25 மணி முதல் 2:15 மணி வரை

மகரம்
இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. பல வகையான எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரக்கூடும். மேலும், அதிக அழுத்தத்தை உணருவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் முதலாளியின் நடத்தை உங்களை நோக்கி மிகவும் கடுமையாக இருக்கும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் சில பெரிய தவறுகள் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக விஷயத்தை கையாள வேண்டும். வணிகர்கள் ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். பெரிய லாபங்களுக்காக சிறிய லாபங்களை புறக்கணிக்கும் தவறை செய்ய வேண்டாம். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். இன்று குழந்தைகளுக்கு அதிக நேரம் கொடுக்க முயற்சிக்கவும். உடல்நலம் பற்றி பேசினால், பலவீனம் அதிகரிக்கும். எனவே, ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் 6:50 மணி வரை

கும்பம்
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பதற்றம் சாத்தியமாகும். வீட்டின் பெரியவர்களுடன் ஒருங்கிணைப்பு மோசமடையக்கூடும். உங்கள் நடத்தைய அனைவரிடமும் சீராக வைத்திருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் வீண் விசாதத்தைத் தவிர்க்க வேண்டும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. வேலையை மாற்றுவது பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், இன்று நீங்கள் ஒரு நல்ல சலுகையைப் பெறலாம். விரைவில் உங்கள் வாழ்க்கை புதிய திசையில் நகரும். வணிகர்களுக்கு இன்று அதிக லாபம் கிடைக்காது. ஆனால் உங்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். வரவ விட அதிகமாக செலவழிக்கும் தவறை செய்ய வேண்டாம். உடல்நலம் பற்றி பேசுகையில், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் 12:50 மணி வரை

மீனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பதற்றமாக நாளாக இருக்கும். இன்று. கடினமாக உழைத்த போதிலும், எதிர்பார்த்த முடிவுகளைப் பெற மாட்டீர்கள். சில காரணங்களால் உங்கள் பதவி உயர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, பொறுமையுடன் பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறீர்கள். வணிகர்களின் எந்தவொரு பெரிய பிரச்சனையும் இன்று தீர்க்கப்படலாம். கூட்டு வியாபாரிகள் இன்று நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உடன்பிறப்புகளுடன் மிகவும் வேடிக்கையாக இருப்பீர்கள். குழந்தைகள் மூலம் இன்றுசில நல்ல செய்திகளைப் பெறலாம். மேலும், வாழ்க்கைத் துணையின் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அத்துடன் போதுமான ஓய்வு பெற வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை



Click it and Unblock the Notifications











