For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பிரச்சினை வரிசைகட்டி வருமாம்... பார்த்து நடந்துக்கோங்க...!

வாரத்தின் முதல் நாள் எப்படி அமைகிறது என்பது அந்த வாரம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். வாரத்தின் இந்த முதல் ராசிகளுக்கு சிறப்பானதாகவும், சில ராசிகளுக்கு ஆபத்தானதாகவும் இருக்கப்போகிறது.

|

வாரத்தின் முதல் நாள் எப்படி அமைகிறது என்பது அந்த வாரம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். வாரத்தின் இந்த முதல் ராசிகளுக்கு சிறப்பானதாகவும், சில ராசிகளுக்கு ஆபத்தானதாகவும் இருக்கப்போகிறது. இதற்கு காரணம் உங்கள் ராசிக்கான கிரக நிலைகள் இன்று மாறுவதுதான். உங்கள் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதனை சமாளிப்பது நமக்கு எளிதாக இருக்கும். உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Daily Horoscope For 28th June 2020 Sunday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மேஷம்

மேஷம்

மனரீதியாக இன்று நீங்கள் நன்றாக உணருவீர்கள், வேலை இல்லாததால் இன்று உங்களின் மனஅழுத்தம் குறைவாக இருக்கும். மற்றவர்களை விமர்சிப்பதை தவிர்க்கவும்.வணிகம் செய்பவர்களுக்கு நாளின் இறுதியில் இலாபம் அதிகரிக்கும். பண நிலைமை திருப்திகரமாக இருக்கும். இன்று பெரிய செலவு எதுவும் இருக்காது. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் நன்றாக இருக்கும். உங்கள் பெற்றோரிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்களுக்கு அனைத்து வகையிலும் நாள் சிறப்பானதாக இருக்கும். உங்களின் நிலுவையில் இருக்கும் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். உங்கள் குடும்பத்தினருடனான உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். இன்று உங்கள் கடின உழைப்பிற்கான பலன் உங்களை தேடிவரும். அன்பும் ஒற்றுமையும் குடும்பத்தில் நிலைத்திருக்கும். இன்று நீங்கள் உங்கள் மனைவியிடமிருந்து ஒரு அழகான பரிசைப் பெறலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் பிற்பகல் 2:20 மணி வரை

மிதுனம்

மிதுனம்

உங்கள் குடும்பத்தின் அமைதியைப் பேணுவதற்கு நீங்கள் எல்லோரிடமும் நல்லுறவை வைத்திருக்க வேண்டும். உங்கள் பெற்றோர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வது நல்லது, சிறியவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். முதலீடு செய்வதற்கு இது சரியான நேரமல்ல. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டிய நாள் இது. ஆரோக்கியத்தில் எக்காரணம் கொண்டும் அலட்சியம் காட்டாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் 10:45 மணி வரை

MOST READ:தினமும் 1000 பேரை பொழுதுபோக்கிற்காக கொன்ற கொடூர அரசன்... உலகின் படுபயங்கரமான ஆட்சியாளர்கள்...!

கடகம்

கடகம்

வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை முழுமையான நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். சகாக்கள் மற்றும் உங்கள் மூத்தவர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சிக்கவும். நீங்கள் உங்கள் தந்தையின் வியாபாரத்துடன் தொடர்புடையவராக இருந்தால், இன்று நீங்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். பணத்தைப் பற்றி இன்று வீட்டில் ஒரு தகராறு ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் நீங்கள் இனிமையான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் மனைவியுடன் காதல் அதிகரிக்கும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்து, சமூக தூரத்தை சரியாகப் பின்பற்றுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:20 மணி வரை

 சிம்மம்

சிம்மம்

இன்று பல வகையான எண்ணங்கள் நினைவுக்கு வரலாம். உங்கள் மன குழப்பம் அதிகரிக்கக்கூடும். உங்கள் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்க முயற்சித்தால் நல்லது. தேவைப்பட்டால் நீங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியையும் பெறலாம். இன்று உங்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்த பணியையும் முடிக்க முயற்சிக்கவும். எந்தவொரு முக்கியமான வணிக முடிவுகளையும் தவிர்க்க வணிகர்கள் இன்று அறிவுறுத்தப்படுகிறார்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் ஒரு சிறிய பிரச்சனையை கூட புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:30 முதல் 7:55 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உங்கள் மனைவியுடன் விவாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கலாம். அவர்களின் தரப்பில் இருந்து சிந்திக்க முயல்வது நல்லது. நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், அது உங்கள் உறவுக்கு நல்லது. இன்று உங்கள் அம்மா உங்களிடம் கோபப்படுவார். அவர்களுடன் வெளிப்படையாகப் பேசுவது நல்லது. சிறுவியாபாரிகள் தங்கள் தொழிலில் நல்ல இலாபத்தை அடைவார்கள். உடல்நலம் பற்றி பேசும்போது, தொண்டை தொடர்பான சில பிரச்சினைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை

 துலாம்

துலாம்

உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பேசுவதன் மூலம் உங்கள் உறவில் உள்ள கசப்பை நீக்கலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்த வேண்டும். இன்று வணிகர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். உங்கள் உடல்நிலையைப் பொருத்தவரை, சரியான நேரத்தில் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 முதல் 11:00 வரை

MOST READ:காமசூத்ராவில் ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்க வேண்டிய பெண்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

விருச்சிகம்

விருச்சிகம்

தேவையானதை பேசுங்கள், இல்லையெனில் இன்று உங்கள் நாள் தேவையற்ற விஷயங்களைச் செய்ய நேரிடும். உங்கள் அதிக தன்னம்பிக்கை உங்கள் சிரமங்களை அதிகரிக்கும். வர்த்தகர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் எதிரிகள் உங்களுக்கு கடுமையான போட்டியை வழங்குவார்கள். மேலும், உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று வாயு, அமிலத்தன்மை அல்லது அஜீரணம் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:00 மணி வரை

தனுசு

தனுசு

இன்று உங்கள் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், இன்று அதற்கு ஒரு நல்ல நாள். நீங்கள் வேலை செய்தால், உயர் அதிகாரிகள் இன்று உங்கள் கடின உழைப்பை கவனிக்க முடியும். அதே வழியில் உங்கள் சிறந்ததைத் தொடர்ந்து வழங்கினால், நீங்கள் விரைவில் ஒரு பெரிய மாற்றத்தைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்துடன் மிகவும் வேடிக்கையான நாளாக இருக்கும். உங்கள் தந்தையிடமிருந்து நிதி நன்மை சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மகரம்

மகரம்

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சில பணிகள் இன்று முடிக்கப்படும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழ்நிலை இன்று சரியாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களிடையே வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடும். பெற்றோருடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் அவர்கள் உங்களுக்கு மிகவும் தேவை. இன்று உங்கள் மனைவி விரக்தியில் இருப்பார்கள், இதனால் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 முதல் 9:00 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்களின் அனைத்து வேலைகளும் வேகமாக முடிக்கப்படும். பொருளாதார நிலையில் இன்று நாள் மிகவும் நல்லதாக இருக்கும், பணம் தொடர்பான கவலைகள் முடிவடையும். ஏனெனில் நீங்கள் நீண்ட காலமாக முயற்சித்த நிதி லாபம் இன்று கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டில் அமைதியான சூழல் இருக்கும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, இன்று உங்களுக்கான நாள், எனவே அதை அழகாக அனுபவிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

MOST READ:வாய்பிளக்க வைக்கும் 'மாயன்'களின் மிருகத்தனமான கலாச்சார சடங்குகள்... அதிர்ச்சியாகம படிங்க...!

 மீனம்

மீனம்

இன்று நீங்கள் ஒரு குழப்பத்தில் இருப்பீர்கள், மனக் கொந்தளிப்பு காரணமாக உங்கள் முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் அதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதி இருக்கும். உங்கள் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும், மேலும் உங்கள் குடும்பத்தினருடனான உங்கள் உறவும் வலுவாக இருக்கும். பெற்றோர் ஆசீர்வாதம் உங்களுக்கு புதிய ஆற்றலைத் தரும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு மேம்படும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 முதல் 9:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 28th June 2020 Sunday In Tamil

Check out the daily horoscope for 28th June 2020 Sunday in Tamil.
Story first published: Saturday, June 27, 2020, 19:16 [IST]
Desktop Bottom Promotion