For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு 12 ராசிக்காரங்களுக்கும் ராசியான கலர் என்ன தெரியுமா?

இன்னைக்கு உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது ஏமாற்றமாக இருக்குமா? உங்களோட இன்றைய ராசி பலரன் என்ன சொல்லுது பாருங்க படிச்சு தெரிஞ்சுக்கங்க.

|

இன்னைக்கு உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது ஏமாற்றமாக இருக்குமா? நமக்கு பணம் வருமா? யாராவது சண்டைக்கு வருவாங்களா? வீட்ல சூழ்நிலை எப்படி இருக்கும், யாரெல்லாம் ஒய்ஃப் கிட்ட வாக்குவாதம் பண்ணக்கூடாது? உங்களோட இன்றைய ராசி பலரன் என்ன சொல்லுது பாருங்க படிச்சு தெரிஞ்சுக்கங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷன் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு. அதனால கண்ட இடத்துல சாப்பிடுறதை அவாயட் பண்ணுங்க. ஆஃபீஸ்ல வேலை கொஞ்சம் ஜாஸ்தியவே இருக்கும். எந்த அளவுக்கு வேலை பாக்க முடியுமோ அதை மட்டும் பாருங்க. தேவையில்லா வேலையை இழுத்து போட்டு செய்யாதீங்க. செய்யுற வேலையை திருப்தியா செஞ்சி முடிச்சி திருப்தியாவீங்க. வேற இடத்துக்கு மாறுதல் எதிர்பார்த்தீங்கன்னா, இன்னிக்கு அந்த வாய்ப்பு கிடைக்க சான்ஸ் இருக்கு. இன்னிக்கு பிசினஸ் பண்றவங்களுக்கு ஏத்த நாள் கிடையாது. ஃபேமிலி லைஃப் ரொம்ப அமைதியா நகரும். உங்க அப்பாவோட ரிலேஷன்சிப் ரொம்ப நல்லா இருக்கும். வெளியிடத்துல நடக்குற பொது நிகழ்ச்சியில கலந்துக்க சான்ஸ் இருக்கு. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அற்புதமான நாள். இன்னிக்கு உங்க லவ்வர் கிட்ட இருந்து உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திட்டு இருக்குன்னு சொல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : காலை 10:00 முதல் மாலை 4:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு உங்களோட பொருளாதார நிலை நல்லா இருக்கு. ஃபைனான்ஸ் பொசிஷனை அதிகரிக்குறதுக்கு எடுக்குற முயற்சி சக்ஸஸ்ஃபுல்லா முடிய வாய்ப்பிருக்கு. கூடவே உங்களுக்கு தொந்தரவா இருந்த கடனையும் பைசல் பண்றதுக்கும் வழி பிறக்கும். அதோட புதுசா இண்வெஸ்ட் பண்ணவும் வாய்ப்பு இருக்கு. இருந்தாலும் எதையும் அலசி ஆராயாம வீட்டு பெரியவங்க கிட்ட கலந்தாலோசிக்காம, எதுலயும் இன்வெஸ்ட் பண்ணாதீங்க. இல்லேன்னா பணத்தை இழக்குறதுக்கான வாய்ப்பிருக்கும். கவனமா இருங்க. கல்யாண தம்பதிங்களுக்குள்ள சின்னதா சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்பிருக்குது. ஒய்ஃபோட வார்த்தைக்கும் உணர்வுக்கும் கொஞ்சமாச்சும் மதிப்பு கொடுங்க. ஆஃபீஸ்லயும் இன்னிக்கு ஒர்க் லோட் ஹெவியா இருக்கும். கொடுத்த வேலையை முடிக்க முடியாம திண்டாடுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : சஃப்ரூன்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : நண்பகல் 12:15 முதல் மாலை 6:20 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு நீங்க வெளியூர் போறதுக்கு ப்ளான் பண்ணி இருந்தீங்கன்னா கடைசி டையத்துல அதை மாத்திக்குவீங்க. ரொம்ப நாளைக்கு பிறகு உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கூட ரொம்ப சந்தோஷமா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. ஆஃபீஸ்லயும் வேலையை முடிக்க தேவையான டைம் உங்களுக்கு கிடைக்கும். அதையும் ப்ளான் பண்ணி டைம் ஒதுக்கி செஞ்சி முடிப்பீங்க. அதனால உங்க ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கும். மேரேஜ் லைஃப்ல சந்தோஷம் தாண்டவமாடும். ரெண்டு பேரும் ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க. ஒய்ஃபும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும். இன்னிக்கு பொழுதுபோக்கு விசயத்துக்கு டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். உங்களுக்கு ரொம்ப நெருக்கமானவங்க கிட்ட பொய் சொல்றதை அவாய்ட் பண்ணுங்க. ஹெல்த் கண்டிஷனம் நார்மலா இருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : பிற்பகல் 2:45 முதல் இரவு 7:05 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு உங்க பசங்க சைடுல இருந்து ரொம்ப சந்தோஷமான செய்தி கிடைக்க சான்ஸ் இருக்கு. அது உங்க குடும்பத்துல சந்தோஷமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கூடவே, உங்க ஒய்ஃபும் உங்களுக்கு ரொம்ப சப்போர்டிவா இருப்பாங்க. அதனால இன்னிக்கு அவங்க கூட வழக்கத்துக்கு மாறா எக்ஸ்ட்ரா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. இன்னிக்கு ஆஃபீஸ்ல சில சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கு. உங்க சோம்பேறித்தனத்தை பார்த்து உங்க சீனியர் கடுப்பாகலாம். வேலை, டைம் ரெண்டோட முக்கியத்துவத்தை தெரிஞ்சி உருப்படியா வேலையை பாருங்க. இன்னிக்கு உங்க ஃப்ரண்ஸ் கூட சின்ன வாக்குவாதத்தில இறங்க வாய்ப்பிருக்கு. அதனால உங்க கோவத்தை கண்ட்ரோல் பண்றது நல்லது. ஃபைனானன்ஸ் பொசிஷன்லயும் இன்னிக்கு நல்ல முன்னேற்றம் இருக்கு. எதிர்பாராத விதமா திடீர்னு பணம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் மாலை 3:15 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு ஒரு சந்தோஷமான செய்தி வர வாய்ப்பிருக்கு. அது உங்க சந்தோஷத்தை கூட்டிடும். அதோட ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்ப நல்லா இருக்கும். வருமானம் அதிகரிக்குறதோட, உங்க செலவும் கண்ட்ரோல்ல இருக்கும். இன்னிக்கு உங்க ஒய்ஃப் உங்களை ரொம்ப வித்தியாசமான முறையில நல்லவிதமா கவனிப்பாங்க. அதைப் பார்த்து நீங்க ரொம்பவே மெர்சலாகிடுவீங்க. இதனால ஃபேமிலியும் ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னிக்கு உங்க வீட்டுல ஒரு சுப நிகழ்ச்சி நடக்குறதுக்கு வாய்ப்பிருக்குது. அதனால குடும்பமே கலகலப்பா மாறிடும். ஆஃபீஸ்லயும் உங்க சீனியர் உங்களுக்கு ரொம்பவே சப்போர்ட்டிவா இருப்பாரு. அது உங்க வேலையை இன்னும் சுலபமாக்கிடும். இதையே சாக்கா வச்சிக்கிட்டு நீங்க உங்க வேலையை சீக்கிரமா முடிப்பீங்க. அது உங்களுக்கு ப்ரமோஷனுக்கும் வழி வகுக்கும். நீங்க பிசினஸ் பண்றவரா இருந்தா, எதிர்பார்த்த லாபம் கிடைக்கவும் சான்1 இருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் மாலை 6:30 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு உங்க கல்யாண வாழ்க்கையில அன்பும் அமைதியும் தாண்டவமாடும். உங்க சக்திக்கு மீறுன பொறுப்புங்க இருந்தாலும், அதை அனுசரிச்சி உங்க ஒய்ஃபும் ரொம்ப சப்போர்டிவா இருப்பாங்க. அது உங்க பொறுப்புங்களை ரொம்ப லேசாக்கிடும். அத்தோட ஒய்ஃப் கிட்ட ரொம்பவே மெர்சலாகிடுவீங்க. உங்க குழந்தைங்க சைடுல இருந்தும் சந்தோஷமான செய்தி வர வாய்ப்பிருக்கு. உங்க ஃபேமிலி மெம்பர்ஸுங்க யாருக்காவது உடம்பு சரியில்லாம இருந்தா, இன்னிக்கு அதுக்கு ரிலீஃப் கிடைக்க வாய்ப்பிருக்கு. இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் நல்லா இருக்கு. புதுசா எந்த திட்டத்திலயாவது இண்வெஸ்ட் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கு. ட்ராவல் பண்றதுக்கும் இன்னிக்கு வாய்ப்பிருக்கு. ஆஃபீஸ்ல ஒர்க் பண்றவங்களுக்கு ரொம்ப சாதாரணமான நாளாவே இருக்கும். உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப நல்லா இருக்கும். ரொம்ப நிம்மதியா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 33

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 6:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்கும். ரொம்ப நாளா இருந்த உடம்புல இருந்த பிரச்சனை இன்னிக்கு சால்வ் ஆகிடும். அதனாலயே ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணுவீங்க. ஏதாவது வேலையை முடிக்காம பாக்கி வச்சிருந்தீங்கன்னா அதை இன்னிக்கு முடிச்சிடுவீங்க. பிசினஸ் பண்றவங்க, செஞ்ச வேலைக்கு இன்னிக்கு நல்ல லாபம் கொட்டும். ரொம்ப நாளா ட்ரை பண்ணுன ஒரு வேலை இன்னிக்கு சக்ஸஸ்ஃபுல்லா முடிய வாய்ப்பிருக்குது. அது உங்களக்கு ரொம்பவே பலன் கொடுக்கும்னு நம்பலாம். ஃபேமிலி லைஃப்பும் ரொம்பவே சந்தோஷமாவும் நிம்மதியாவும் நகரும். உங்க ஒய்ஃப் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கும் உங்களுக்கு டைம் கிடைக்கும். அதனால ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சி நடந்துக்குவீங்க. அந்நியோன்யம் கூடிடும். உங்க பொருளாதார நிலையும் வழக்கத்தை விட இன்னிக்கு நல்லாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு நீங்க ரொம்பவே பிஸியா இருப்பீங்க. ஆஃபீஸ்லயும் வேலை உங்களை திக்குமுக்காட வைக்கும். அதனால ரொம்பவே கஷ்டப்பட்டு வேலை பாக்க வேண்டியதிருக்கும். பிசினஸ் பண்றவங்களும் இன்னிக்கு பிசினஸ் விஷயமா ஒரு முக்கியமான வேலையை முடிக்க முடியாம திணறவீங்க. இன்னிக்க பணவரவும் மந்தமாவே இருக்கும். அதனால செலவழிக்கிறதை யோசிச்சி செலவழிங்க. ஏதாவது வாங்கணும்னா கூட அது இப்போ தேவையான்னு யோசிச்சி செலவழிங்க. வீட்டுலயும் சரி வெளியிலயும் சரி தேவையில்லாத வாய்த் தகராறு பண்ணாதீங்க. ஆஃபீஸ்லயும் யாரோட சொந்த விஷயத்துலயும் தலையிடாம உங்க வேலையை மட்டும் பாத்தாலே போகும். இன்னிக்க ரொம்ப பிஸியாவே இருக்குறதுனால ரெஸ்ட் எடுக்கக்கூட முடியாம திணறுவீங்க. அது உங்களோட ஹெல்த் கண்டிஷனை ரொம்பவே பாதிக்க வாய்ப்பிருக்கு. கவனமா இருக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கைப்ளூ

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 6:30 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு நீங்க ரொம்பவே கவனமா இருக்க வேண்டிய நாள். ரொம்ப அவசரப்பட்டு பெரிய தப்பு பண்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால பின்னாடி சிக்கலை சந்திக்கவும் வாய்ப்பிருக்கு. தயவுசெஞ்சி உங்களோட கோவத்தை கட்டுப்படுத்திக்கோங்க. ரொம்பவே கோவப்பட்டு உங்க சீனியரும் உங்களை விமர்சனம் பண்ணவேண்டிய சூழ்நிலை உண்டாகிடும். கவனமா இருங்க. ஃபேமிலி லைஃப்ல ஒரு நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திட்டு இருக்கீங்க. ஃபேமிலி மெம்பர்ஸுங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவும் வாய்ப்பிருக்கு. உங்க மேல ப்ரியமா இருக்குறவங்க கிட்ட நீங்களும் ரொம்பவே பாசமா இருப்பீங்க. ஒய்ஃப் கூடவும் ரொம்ப ப்ரியமா இருப்பீங்க. ரெண்டு பேருமே சேர்ந்து குடும்ப பொறுப்புங்களை நல்லவிதமா முடிக்க பார்ப்பீங்க. இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷன் நார்மலா இல்லை. வருமானத்தை விட செலவுங்க ஜாஸ்தியா இருக்கும். ப்ளட் ப்ரஷர் இருக்குறவங்க இன்னிக்கு கொஞ்சம் கூடுதல கவனிச்சிக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : காலை 10:00 முதல் இரவு 8:15 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு நீங்க உங்களோட பிசினஸ்ல ஜெயிச்சி வாழ்க்கைல முன்னேறனும்கிற கனவை நனவாக்க நினைச்சீங்கன்னா, அசால்ட்டா வேலை பாக்குறதை விட்டுட்டு சின்ஷியரா வேலை பாக்குறது நல்லது. இல்லேன்னா அவ்வளவு தான். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் நல்லா இருக்கு. எக்ஸ்ட்ரா வருமானம் கிடைக்கணும்னா, இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைக்குறது நல்லது. இன்னிக்கு யாராவது உங்ககிட்ட ஹெல்ப்ன்னு வந்து நின்னா யோசிக்காம ஹெல்ப் பண்ணிடுங்க. அதுக்குண்டான பலன் உங்களை தேடி வரும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் ரொம்ப டல் தான். ரொம்பவே அசமந்தமாவே இருப்பீங்க. அதை மாத்தி சந்தோஷமா இருக்கணும்னா சாப்பாட்டு முறையை கொஞ்சம் மாத்தி பாருங்க. கூடவே எக்சர்ஸைஸ் பண்றதும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 7:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு உங்களுக்கு நாள் அமோகமா இருக்கும். நிங்க எந்த துறையில இருந்தாலும் இன்னிக்கு சாதகமாவே முடியும். உங்களோட சின்சியாரிட்டிக்கு ஏத்த வெகுமதியும் இன்னிக்கு கிடைக்கும். அதோட எல்லோருமே உங்களை பாராட்டுவாங்க. பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு ரொம்ப முக்கியமான முடிவெடுப்பாங்க. அது அவங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும்கிறது நிச்சயம். இன்னிக்கு நீங்க உங்க ஒய்ஃப் கூட பேசும்போது, ரொம்ப அன்பா பேசுறது நல்லது. ரொம்ப கோவப்பட்டு பேசுனீங்கன்னா, உங்களுக்கு தான் சேதாரம் ஜாஸ்தியாகும். அதனால கவனமா பேசுறது நல்லது. அதோட இன்னிக்கு ஃபேமிலி சம்பந்தப்பட்ட விஷயமும் உங்களை கடுப்பேத்த வாய்ப்பிருக்கு. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலா இருக்கும். பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரியே செலவழிப்பீங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும், மனசளவிலும் ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு லவ் பண்றவங்களுக்கு நாள் நல்லா இருக்கு. கடந்த ரெண்டு மூணு நாளா உங்க லவ்வரை மீட் பண்ண முடியாம தவிச்சிட்டு இருந்தீங்கன்னா இன்னிக்கு நீங்க மீட் பண்றதுக்கு வாய்ப்பிருக்குது. உங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்சின்னா, ஒய்ஃப் கூட ஜாலியா வாக்கிங்க போய்ட்டு வருவீங்க. இன்னிக்கு வீட்டு நிலைமையும் சந்தோஷமா அமைதியா இருக்கும். பெத்தவங்க ஒத்துழைப்போட வீட்டு வேலைங்க எல்லாத்தையும் முடிச்சிடுவீங்க. நீங்க வேலை பாக்குற இடத்திலயும் உங்களுக்கு சாதகமாவே இருக்கும். உங்களோட உழைப்புக்க ஏத்த மாதிரி பாராட்டும் கிடைக்கும். கூடவே உங்களோட டேலண்ட்டும் பளிச்சின்னு எல்லோருக்கும் தெரிய வரும். பிசினஸ் பண்றவங்களுக்கு வெளிநாட்டு மூலமாவும் பணம் வர்றதுக்கு வழியிருக்குது. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கு. உங்க மனக்கஷ்டமெல்லம் பறந்தோடி, ரொம்பவே சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 11:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 26th November 2019 Tuesday

Check out the daily horoscope for 26th november 2019 tuesday. Read on...
Story first published: Monday, November 25, 2019, 22:46 [IST]
Desktop Bottom Promotion