Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
இந்த 6 ராசிக்காரர்களின் கடன் பிரச்சினை தீரப்போகுது...
வாரத்தின் ஏழு நாட்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு சில நாட்கள் லாபமாக இருக்கும். சிலருக்கு சில கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த நாள் நன்றாக இருக்கும்.
வாரத்தின் ஏழு நாட்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு சில நாட்கள் லாபமாக இருக்கும். சிலருக்கு சில கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த நாள் நன்றாக இருக்கும். செவ்வாய் பகவான் ஆதிக்கம் நிறைந்த மங்களகரமான நாள். இன்று அங்காரக சதுர்த்தி. இந்த நாளில் யாருக்கெல்லாம் பணவரவு வரும், யாருக்கெல்லாம் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் என்று இன்றைய ராசி பலன்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க கோபத்தை கட்டுப்படுத்திக்கிறது ரொம்ப அவசியம். கோபப்பட்டா நஷ்டம் உங்களுக்கு தான். பிசினஸ்ல இருந்த போட்டி பொறாமையும் இன்னிக்கு குறையலாம். உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு சந்தோஷம் கொடுக்குற இனிப்பான செய்திகள் வரும். கூடப்பொறந்தவங்க கூட ஒத்துமை பலப்படும். குடும்பத்தோட ஃபைனான்ஸ் பொசிஷனம் ரொம்ப சிறப்பா இருக்கும். மொத்தத்துல உங்க தன்னம்பிக்கையும் தைரியமும் இன்னைக்கு கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடும். உத்தியோகத்துல வேலைச்சுமை குறையும், இருந்தாலும் நீங்க கொஞ்சம் மந்தமாவே ஃபீல் பண்ணுவீங்க. பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் திருப்திகரமா இருக்கும். எதிர்பாத்த இடத்துல இருந்து பணம் கிடைக்கும். குடும்பப் பிரச்சனையை சூதானம சமாளிக்க பாருங்க. ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் கவனமா இருக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 13
சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல எதிர்பாத்த சலுகைகள் கிடைக்கும். உங்க பேங்க் பேலன்ஸும் கூடும். பிள்ளைங்க கூட இருந்து வந்த மனஸ்தாபங்கள் காணாம போகும். பிசினஸ்ல ஃப்ரண்ட்ஸுங்க மூலமா அனுகூலம் கிடைக்கும். அதனால லாபமும் கனிசமா உயரும். உங்க கடன் பிரச்சனையும் தீரும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல வியாபாரம் அமோகமா நடந்து லாபம் பெருகும். வேலை விஷயமா வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். நகை நட்டுன்னு வாங்கி சந்தோஷப்படுவீங்க. குடும்பத்துல சுபச் செலவுகளும் வந்துடும். எதிர்பாத்த உதவிகளும் இன்னிக்கு ஈசியா கிடைக்கும். ஹெல்த் கண்டிஷனும் சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு முக்கியமான வி.ஐ.பி.க்களோட அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமா நடந்துடும். உத்தியோகம் பாக்குற இடத்துல உற்சாகம் பிறக்கும். வேற உத்தியோகம் தேடுற முயற்சிக்கு இன்னிக்கு வெற்றி கிடைக்கும். பிசினஸ் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் பண்றவங்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். பிசினஸ்லயும் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெருன்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : அதிகாலை 4:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். வீட்டுத் தேவைகளும் பூர்த்தியாகிடும். கல்யாண முயற்சிகள்ல இருந்து வந்த முட்டுக்கட்டைகளும் விலகிடும். உத்தியோகம், பிசினஸ் சம்பந்தமா புதுசா திட்டம் தீட்டி அதுல வெற்றியும் கிடைக்கும். மொத்தத்துல இன்னிக்கு நீங்க எடுத்த காரியத்தை வெற்றிகரமா முடிப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகம் சம்பந்தமா எடுக்குற முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களோட சப்போர்ட் கிடைக்கும். பிள்ளைங்களும் ரொம்ப பொறுப்போட நடந்துக்குவாங்க. குடும்பத்துல மகிழ்ச்சியான சூழ்நிலையே இருக்கும். அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 1:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு பணம் கொடுக்கல் வாங்கல்ல ரொம்பவே எச்சரிக்கையா இருக்கணும். இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதால, மன அமைதி குறையலாம். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க கூட பேசும்போது கொஞ்சம் கவனமா நடந்துக்கோங்க. மவுன விரதம் இருக்குறது நல்ல பலனை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்க ரொம்பவே உற்சாகமா வேலை செய்வீங்க. இருந்தாலும் கூட வேலை பாக்குறவங்க கிட்ட எச்சரிக்கையோட இருக்க பாருங்க. சீனியர் அதிகாரியோட சப்போர்ட்டோட நீங்க எடுக்குற முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். திடீர் பணவரத்து உங்க்ளை திக்குமுக்காட வைக்கும். பிள்ளைங்களோட தேவையும் இன்னிக்கு நிறைவேறும். பிசினஸ்ல இருந்து வந்த மந்தநிலை மாறிடும். கணவன் மனைவிக்கு நடுவுல இருந்து வந்த மனஸ்தாபம் மறையும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்துடும். வீட்டுக்கு தேவையான புது பொருட்களை வாங்கிடுவீங்க. பிசினஸ்ல எதிர்பாத்த மாதிரி வியாபாரம் பெருகி லாபம் கூடுதலா வரும். கொடுத்த கடன்களும் இன்னிக்கு வசூலாகும். உத்தியோகத்துல வேலைச்சுமையும் இன்னிக்கு குறையும். மொத்தத்துல இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல இருந்து வந்த பாதிப்புகள் மறைஞ்சி ரொம்பவே சுறுசுறுப்பா மாறிடுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு புது பிசினஸ் ஆரம்பிக்குற முயற்சிகள்ல தடங்கல், இடைஞ்சல்னு முட்டுக்கட்டை விழலாம். சுபகாரிய முயற்சிகள்லயும் இடைஞ்சல் வரலாம். குடும்பத்துல ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்பவே மந்தமா இருக்கும். சொந்தக்காரங்க உதவியால பணப்பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க நல்ல சப்போர்ட்டா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு வீட்டுலயும் சரி, உத்தியோகத்துல சரி கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. பிசினஸ் விஷயமா வெளியூர் பிரயாணம் பண்றதுனால அலைச்சல் இருந்தாலும், அதுனால ஆதாயம் கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா சப்போர்ட் கிடைக்கும். சொந்தக்காரங்க கூட சின்னதா மனஸ்தாபம் ஏற்படலாம். இன்னிக்கு பணம் வரவை விட செலவு கூடுதலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை



Click it and Unblock the Notifications











