Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இந்த ராசிக்காரங்க எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க ஜாக்கிரதை..
ஞாயிறு கிழமை இன்று சூரியபகவான் ஆதிக்கம் நிறைந்த நாள். சூரியன் இப்போது மேஷம் ராசியில் உச்சத்தில் இருக்கிறார். சூரியன் இன்றைக்கு சில ராசிக்காரர்களுக்கு யோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறார்.
ஞாயிறு கிழமை இன்று சூரியபகவான் ஆதிக்கம் நிறைந்த நாள். சூரியன் இப்போது மேஷம் ராசியில் உச்சத்தில் இருக்கிறார். சூரியன் இன்றைக்கு சில ராசிக்காரர்களுக்கு யோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறார். சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தேவையில்லாத பிரச்சினை வரும் ஜாக்கிரதை. எதற்காகவும் வீட்டை விட்டு வெளியில் இறங்க வேண்டாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க வியாபாரத்துல லாபம் அமோகமா வரும். பணத்தை எண்ணி எண்ணி செலவு பண்ணுனா, பணத்தை கூடுதலா மிச்சம் பண்ணி சேமிக்கலாம். நினைச்ச காரியம் நல்லவிதமா நிறைவேறும். முகத்துலயும் வசீகரமும், பேச்சுல இனிமையும் கூடிடும். குடும்பத்துல எல்லோரும் சந்தோஷமா இருப்பாங்க. பண வரத்தும் இன்னிக்கு தாராளமா இருக்கும். ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. ஃபேமிலி லைஃப் ரொம்ப சந்தோஷமா நகரும். உங்களோட ஃபேமிலி மெம்பர்ஸும் உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க. பணப்பிரச்சனையில எதை செஞ்சாலும் கவனமா ப்ளான் பண்ணி செய்யுங்க. மத்தவங்க உங்களை பாராட்டணும்கிறதுக்காக தாம் தூம்னு செலவு பண்ற பழக்கத்தை நிப்பாட்டுங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் இரவு 10:20 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க எதையும் ரொம்ப துணிச்சலா, தைரியமா செஞ்சி முடிப்பீங்க. பிசினஸ்ல கூட்டாளிங்களால அனுகூலம் கிடைக்கலாம். சொந்தக்காரங்க ஒத்துழைப்புனால சுபகாரியங்கள் கைகூடிடும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். இன்னிக்கு எந்த வேலையை தொட்டாலும் நல்லா இருக்கும். இன்னிக்கு புதுசா ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்க நினைச்சிருந்தா, அதை ஆரம்பிக்கிறதுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்குது. இருந்தாலும் வீட்டுல இருக்குற பெரியவங்ககிட்ட கொஞ்சம் டிஷ்கஸ் பண்ணிக்கிறது நல்லது. உங்க பிடிவாத குணத்தால இன்னிக்கு ஏதாவது சிக்கல் வந்து உங்க வீட்டுக்கதவை தட்ட வாய்ப்பிருக்குது.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : காலை 6:00 முதல் முற்பகல் 11:25 மணிவரை

மிதுனம்
மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்களுக்கு பொருளாதார ரீதியான நெருக்கடிங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எதிர்பாத்துட்டு இருந்த காரியம் நடக்காம தள்ளி போகலாம். ஹெல்த் கண்டிஷன்லயும் சின்னச் சின்னதா பாதிப்புங்க வர வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருக்க பாருங்க. உங்க முயற்சிங்களுக்கு குடும்ப உறுப்பினர்களும் சப்போர்ட் பண்ணுவாங்க. சுபகாரிய செலவுங்களால கை காசு கரையும். பெரியவங்ககிட்ட பேசம்போது, கவனமா பேசுங்க. வார்த்தையை விட்டுறாதீங்க. அவங்களுக்கு மதிப்பு கொடுத்து பேசுங்க. அவங்களை சங்கடப்படுத்துறது மாதிரி எதையாச்சும் சொல்லாதீங்க. இன்னிக்கு உங்களுக்கு பிடிச்ச சாப்பாட்டை அனுபவிச்சி சாப்பிடுவீங்க. உங்க ஹெல்த் கண்டிஷனம் இன்னிக்கு நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

கடகம்
கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க ரொம்ப உற்சாகமா, சந்தோஷமா இருப்பீங்க. சாப்பாட்டு விஷயத்துல வாயை கண்ட்ரோல் பண்றது நல்லது. இன்னிக்கு பண வரத்து அமோகமா இருந்தாலும் கூட, செலவு பண்றதுல சிக்கனமா நடந்துக்கோங்க. குடும்பத்துலயும் எல்லோரும் ஒத்துமையா இருப்பாங்க. பிசினஸ்ல லாபம் அமோகமா இருக்கும். மேரேஜ் லைஃப் ரொம்ப ஸ்மூத்தா அமைதியா நகரும். உங்க ஒய்ஃப் கூட அந்நியோன்யமா இருப்பீங்க. உங்க அப்பா அம்மாவும் உங்களுக்கு அனுசரனையா இருப்பாங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லா இருக்குது.
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : காலை 7:00 முதல் இரவு 10:00 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு எடுத்த காரியங்கள் வெற்றிகரமா முடியும். கூடப்பொறந்தவங்க வழியில சுபகாரிய செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். உத்தியோகம் பாக்குறவங்க வேலையை சுலபமா செஞ்சி முடிப்பீங்க. மொத்தத்துல இன்னிக்கு நீங்க நெனைச்ச காரியம் நடக்கும்கிறதுனால மகிழ்ச்சிகரமான நாளா அமையும். இன்னிக்கு ப்ளான் பண்ணுனது மாதிரி எல்லா வேலையையும் முடிச்சிட்டீங்கன்னா, உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். இதனால, ஏற்கனவே உங்கமேல கடுப்புல இருக்குற உங்க சீனியர்ங்க உங்களைப் பத்தின தப்பான அபிப்ராயத்தை மாத்திக்கிறதுக்கும் சான்ஸ் இருக்கு. பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு வழக்கத்தை விட கொஞ்சம் நல்லா இருக்கும்கிறது நிச்சயம்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

கன்னி
கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு சாப்பாட்டு விஷயத்துல ரொம்பவே எச்சரிக்கையா நடந்துக்கோங்க. ஹெல்த் கண்டிஷனை பொருத்த வரை ரொம்பவே டல்லா ஃபீல் பண்ணுவீங்க. அதனால எந்த வேலையும் ஓடாது. இன்னிக்கு பண வரத்து தாராளமா இருந்தாலும், அதுக்கேத்த மாதிரி செலவுங்களும் லைனா வந்து நின்னுடும். வீட்டுல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. ஆஃபீஸ்லயும் உங்க முதலாளியோட போக்கு உங்களுக்கு எதிரா தான் இருக்குது. அதனால, யார் என்ன சொன்னாலும் காதுல போட்டுக்காம, உங்க வேலையில மட்டும் கவனமா இருங்க. கணவன் மனைவிக்குள்ள அந்நியோன்யம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : பிற்பல் 3:00 முதல் மாலை 6:30 மணிவரை

துலாம்
துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதனால, மத்தவங்க கிட்ட தேவையில்லாம கோபப்பட்டு சண்டை போடுற நிலை வரலாம். அதனால மத்தவங்க விஷயத்துல தலையிடாம எச்சரிக்கையா ஒதுங்கி இருக்க பாருங்க. உங்க மனசும் இன்னிக்கு குழப்பமான நிலையில இருக்குறதுனால, வெளிய போகாம வீட்டுலயே இருக்குறது நல்லது. ஃபைனான்ஸ் பொசிஷனை பொறுத்த வரை, செலவுகளை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க. இல்லைன்னா உங்க வீட்டு பட்ஜெட்டுல சிக்கல் உண்டாக்கி, எதிர்கால திட்டத்துக்கும் இடைஞ்சலா வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 11:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்க நீங்க எதிர்பாத்துட்டு இருந்த இடத்துல இருந்து கடனுதவி கிடைச்சிடும். மனசளவுல ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க. குடும்பத்துலயும் ஒத்துமை மகிழ்ச்சியும் கூடிடும். பண வரத்தும் அதிகமா இருக்கும். கணவன் மனைவிக்குள்ளாற நெருக்கம் கூடிடும். மேரேஜ் லைஃப் இன்னிக்க ரொம்ப அமைதியா நகரும். உங்க ஒய்ஃப் நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுவாங்க. ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து ரொம்ப ஹேப்பியா இருப்பீங்க. ஆஃபீஸ்ல கூட வேலை பாக்குறவங்க கூட கொஞ்சம் கவனமா பழகுங்க. தேவையில்லாம வார்த்தையை விட்டுடாதீங்க. அப்புறம் உங்க வேலைக்கே உலை வச்சிடுவாங்க. ஹெல்த் கண்டிஷன்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு
தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்களை சந்திக்குறதுனால உங்க சந்தோஷம் கூடிடும். கடன், பிரச்சனை, நோய் பிரச்சனை ரெண்டும் காணாம போயிடும். சுப காரிய பேச்சு வார்த்தை நல்ல விதமா முடியும். பெண்களுக்கு இன்னிக்கு ரொம்ப சந்தோஷமான நாள். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவீங்க. ஹெல்த் கண்டிஷன்ல இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பா மாறிடுவீங்க. பிசினஸ்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பிசினஸ் பண்றவங்க, அவங்க உழைப்புக்கு ஏத்த மாதிரி லாபம் கிடைக்கலாம். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கும் இன்னிக்கு நல்ல நாளாவே அமையும். ப்ரமோஷன், இன்க்ரிமெண்ட் பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 2:25 மணிவரை

மகரம்
மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்குறதுல தாமதம் உண்டாகலாம். கூடப்பொறந்தவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. இன்னிக்கு பண விரயம் உண்டாகலாம். கவனமா செலவு பண்ண பாருங்க. காரமான உணவுகளை தவிர்த்திட்டு சத்தான உணவுகளை சாப்பிட்டா நோய் எதிர்ப்பு சக்தி கூடிடும். உங்க ஒய்ஃப் கூட கொஞ்ச நேரம் நிம்மதியா உக்காந்து பேசுறதுக்கு வாய்ப்பிருக்குது. வீட்ல இருந்து வேலை செய்தாலும் உங்க சீனியரோட எதிர்பார்ப்பையும் நீங்க பூர்த்தி செஞ்சிடுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

கும்பம்
கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு பிள்ளைங்களால எதிர்பாக்காத தண்டச் செலவுங்க வரலாம். அதோட உங்களுக்கு வரவேண்டிய பணமும் வர்றதுல தடங்கல், இடைஞ்சல் உண்டாகலாம். இருந்தாலும், ஃபைனான்ஸ் பிரச்சனை ஓரளவுக்கு கம்மியாகும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதலா அக்கறை எடுத்துக்குறது நல்லது. எதுலயும் நிதானமா நடந்துக்க பாருங்க. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல, வெளிய போகாதீங்க, மீறி போனா, ரெண்டு வாரம் தனியா உக்கார வச்சிடுவாங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:20 மணிவரை

மீனம்
மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு குடும்பத்துல மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகிடும். பிசினஸ் ரீதியா நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்ல லாபம் கிடைக்கும். வீட்டுக்கு புது சாமான்களை வாங்கிடுவீங்க. உங்க தைரியம் கூடிடும். எடுக்குற முயற்சிங்கள்ல வெற்றி கிடைக்கும்கிறதுனால உங்க தன்னம்பிக்கையும் கூடிடும். ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:05 மணிவரை



Click it and Unblock the Notifications