Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வீட்ல எல்லாம் சண்டை வருமாம்.. ஜாக்கிரதை..!
சண்டே உங்க ஸ்பெஷல் டே. இன்னைக்கு உங்க ராசி பலன் எப்படி இருக்கும்னு படிங்க. யாரெல்லாம் வீட்ல ஜாக்கிரதையாக இருக்கணும் யார் வீட்ல சண்டை வரும், யாரெல்லாம் பிக்னிக் போவாங்கன்னு படிங்க.
சண்டே உங்க ஸ்பெஷல் டே. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இருக்காது. சூரியன், சந்திரன் உள்ளிட்ட நவ கிரகங்களின் நகர்வு 12 ராசிகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். யாரெல்லாம் வீட்ல ஜாக்கிரதையாக இருக்கணும் யார் வீட்ல சண்டை வரும், யாரெல்லாம் பிக்னிக் போவாங்க? இன்றைய தினம் உங்களுக்கு நல்லதாக இருக்குமா? இன்னைக்கு உங்க ராசி பலன் எப்படி இருக்கும்னு படிங்க...

மேஷம்
இன்னிக்கு உங்களுக்கு நாள் அவ்வளவு நல்லதா இல்லை. பல சமயத்துல உங்க பொறுமையை ரொம்பவே சோதிக்கும். கூடவே உங்க ஒய்ஃபும் உங்க கூட சின்ன சின்னதா சண்டை போடுவாங்க. அதனால நீங்க பேசாம கொஞ்சம் ஒதுங்கியே இருங்க. என்ன பேசணுமோ அதை மட்டுமே அளவோட பேசுங்க. இன்னிக்கு உங்க குடும்ப வாழ்க்கையிலும் ஏமாத்தம் தான் மிஞ்சும். லவ் பண்றவங்க இன்னிக்கு மனசு விட்டு பேசுங்க. அதனால ஏதாச்சும் மனஸ்தாபம் இருந்தாலும் அது குறைஞ்சிடும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். வேலையும் சுலபமா முடிஞ்சிடும். உங்க சீனியரும் உங்களை அப்ரிஸியேட் பண்ணுவாரு. அதனால நீங்க ரொம்ப சந்தோஷப்படுவீங்க. அந்த சந்தோஷம் உங்க வீட்டு சூழ்நிலையையும் மாத்திடும். குடும்பத்துல பழைய நினைவுகளை சொல்லி சந்தோஷப்பட்டுக்குவீங்க. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும். வருமானமும் கூட வாய்ப்பிருக்குது.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:45 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு உங்களுக்கு நாள் நல்லா இருக்கும். உடம்பும் மனசும் ரொம்ப தெம்பா இருக்குற மாதிரி ஃபீல் பண்ணுவீங்க. ஆஃபீஸ்லயும் உங்களுக்கு சில சவாலா வேலைங்க இருந்தாலும் கூட அதையெல்லாம் ஊதி தள்ளிட்டு போய்ட்டே இருப்பீங்க. இது வரைக்கும் நீங்க பட்ட கஷ்டத்துக்கு இனிமே தான் விடிவு காலம் பிறக்கும். அதுக்கான வாய்ப்பு பிரகாசமா இருக்கு. கடந்த சில நாளா வீட்டு நிலவரம் சரியில்லாம இருந்தது. இன்னிக்கு அது அப்பிடியோ மாறி எல்லாமே உங்களுக்கு சாதகமா அமையும். உங்கள் வாழ்க்கை முழுக்க லவ் இருந்தாலும் கூட இன்னிக்கு உங்க ஒய்ஃப் கொஞ்சம் கடுப்பேத்துவாங்க. அதனால அவங்க கிட்ட கொஞ்சம் கவனமா நடந்துக்கோங்க. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் நல்லா இருக்கு. திடீர்னு விலைமதிப்பற்ற பொருள் ஒண்ணு உங்க கைக்கு வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 16
சாதகமான நேரம் : மாலை 6:0 முதல் இரவு 8:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உங்க வீட்டு நிலைமை உங்களை ரொம்பவே இம்சை பண்ணலாம். வீட்டுல உள்ளவங்க உங்களை புரிஞ்சிக்காம பேசிடறது உங்களுக்கு கொஞ்சம் மனசு சங்கடத்தை கொடுக்கலாம். அவங்க கூட உக்காந்து பேசி எல்லாத்தையும் சரி பண்ணுங்க. கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்தா எல்லாமே உங்களுக்கு ஃபேவரா நடக்க வாய்ப்பிருக்குது. ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு சாதாரணமா இருக்கும். உங்க பாக்கெட்டுல என்ன இருக்குதோ அதுக்கேத்த மாதிரியே செலவை கண்ட்ரோல் பண்ணுவீங்க. அதனால ஃபைனான்ஸ் விஷயத்துல எந்த தொந்தரவும் இருக்காது. மேரேஜ் லைஃப்ல இன்னிக்கு சில சிக்கல் உண்டாகலாம். வேலை பிஸியில ஒய்ஃபை கண்டுக்காம இருக்குறதுனால அவங்க கடுப்பாகலாம். கொஞ்சம் அவங்களையும் கவனிங்க. ஆஃபீஸ்ல வேலையில ரொம்ப பிஸியா இருப்பீங்க. உங்களோட சின்ஸியாரிட்டி, நேர்மையா வேலை செஞ்சி எல்லா வேலையையும் முடிச்சிடுவீங்க. ரொம்ப நாளா ப்ளான் பண்ணின ஒரு வேலையை இன்னிக்கு முடிச்சிடுவீங்க. கூடவே முக்கியமான ஒரு முடிவெடுத்து செயல்ல இறங்கிடுவீங்க. ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 7:55 முதல் காலை 10:30 மணிவரை

கடகம்
இன்னிக்கு உங்க ஒய்ஃப் கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. அதுக்காக அவங்களை வெளியில கூட்டிட்டு போவீங்க. அவங்களும் அவங்க மனசுல உள்ளதை உங்க கிட்ட மனசு விட்டு பேசுவாங்க. இன்னிக்கு உங்க வீட்டு நிலவரமும் நல்லாவே இருக்கும். பெத்தவங்க பாசமும், ஆதரவும் உங்களுக்கு இருக்குது. உங்க அப்பா உங்களுக்கு பணம் கொடுத்து உதவ வாய்ப்பிருக்குது. அதனால புதுசா பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்கும் ஒரு வாய்ப்பிருக்குது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லாவே இருக்குது. வேலையும் இன்னிக்கு கம்மியா தான் இருக்கும். அதனால ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்ணுவீங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லாவே இருக்கும். ரொம்ப நாளா வயிறு சம்பந்தமா சிரமப்பட்டுகிட்டு இருந்தா, இன்னிக்கு அந்த வலி சரியாகிடும். அதையே சாக்கா வச்சிகிட்டு உங்களக்கு பிடிச்சதை சாப்பிட்டு என்ஜாய் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 7:00 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு மத்தவங்க உங்களை பெருமையா பேசணும்கிறதுக்காக கைகாசை அள்ளி வீசி செலவழிப்பீங்க. அதனால உங்க பாக்கெட் காலியாகலாம், கவனமா செலவழிங்க. மேரேஜ் லைஃப் இன்னிக்கு நல்லா இருக்கும். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல லவ் ரொம்ப டீப்பா மாறும். அதே சமயத்துல ஒய்ஃப் கூட சின்னதா சிக்கல் உண்டாகவும் வாய்ப்பிருக்குது. மத்தவங்க பேச்சை கேட்டு ஒய்ஃபை சந்தேகப்படாதீங்க. அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கேப் விழ ஆரம்பிக்கும். கவனமா நடந்துக்கோங்க. உங்க மனசுல இருக்குற சந்தேகத்தை உங்க ஒய்ஃப் கிட்ட கேட்டு நிவர்த்தி பண்ணிக்கோங்க. வீட்டுல இருக்குற கடுப்பை ஆஃபீஸ்ல யார் கிட்டேயும் காட்டாதீங்க. அது உங்க இமேஜை கெடுத்துடும். அதனால மனசை கொஞ்சம் அமைதியா வச்சிக்க ட்ரை பண்ணுங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 5:55 மணிவரை

கன்னி
இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷசன் நல்லா இல்லை. உடம்புக்கு முடியாம போய் ஹாஸ்பிடல்ல ரொம்ப நேரம் இருக்க நேரிடும். அதனால கூடுதலா செலவாகி உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் கவலைப்படும்படியா இருக்கும். கூடவே உங்க பழைய கடன் ஒண்ணு ரொம்ப தொந்தரவு கொடுக்கலாம். அதனால வீட்டுலயும் கொஞ்சம் குழப்பம் ஏற்படலாம். உங்க அம்மா கூட சண்டை போடவும் வாய்ப்பிருக்குது. வேலை பிஸியில உங்க ஒய்ஃப் கூட ரொம்ப நேரம் பேச முடியாம் போக வாய்ப்பிருக்குது. அதனால ஆஃபீஸ் வேலை, வீடு ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி நடக்க பாருங்க. உங்க வீட்டுல இருக்குறவங்களை நீங்க உதாசீனம் பண்றதா நினைப்பாங்க. அதுக்கு இடம் கொடுக்காதீங்க. அது உங்களுக்கும் உங்க பிள்ளைங்களுக்கும் கூட நல்லதில்லைங்க. இன்னிக்கு ட்ராவல் பண்றதை அவாய்ட் பண்றது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : அதிகாலை 4:05 முதல் காலை 10:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு வீட்டுல எல்லாருமே நார்மலா இருப்பாங்க. ரொம்ப சந்தோஷமா, நிம்மதியா இருப்பாங்க. ரொம்ப நாளைக்கு அப்புறமா உங்களை பெத்தவங்க கூட உக்காந்து மனசு விட்டு பேசுவீங்க. உங்க ஒய்ஃப் மூடும் இன்னிக்கு நார்மலா இருக்கும். ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சி நடந்துக்குவீங்க. ஆஃபீஸ்லயும் உங்க வேலையை பாத்து உங்க முதலாளி ரொம்ப சந்தோஷப்படுவார். அத்தோட உங்க ப்ரமோஷனுக்கும் இன்னிக்கு வாய்ப்பிருக்குது. கூட வேலை பாக்குறவங்க கூட ரிலேஷன்சிப் நல்லா இருக்கும். இன்னிக்கு உங்க ஃப்ரண்ட்ஸுங்க கூட பிக்னிக் போக வாய்ப்பிருக்குது. உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும். வரம்பு மீறி செலவழிச்சாலும் பிரச்சனை வராது. ஹெல்த் கண்டிஷனம் இன்னிக்கு நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : அதிகாலை 5:45 முதல் நண்பகல் 1:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு நாள் உங்களுக்கு சாதகமாவே இருக்கும். அதனால மனசளவில ரொம்ப உற்சாகமாவும், ரொம்ப தெம்பாவும் இருக்குறதா ஃபீல் பண்ணுவீங்க. எந்த முடிவெடுத்தாலும் தெளிவா இருக்கும். வேலையிலயும் சில சேன்ஜ் இருக்கலாம். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாளா இருக்கலாம். எந்த வேலையையும் ரொம்ப அசால்ட்டா செஞ்சி முடிச்சிடுவீங்க. அதை பாத்து உங்க சீனியரும் ரொம்ப சந்தோஷப்படுவாரு. பிசினஸ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நல்ல வாய்ப்பா இருக்கும். புதுசா பிசினஸ் ஆரம்பிக்கவும் இன்னிக்கு ஃபைனான்ஸ் கிடைக்கவும் வாய்ப்பு கிடைக்கும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அமோகமான நாள். மனசுல இருக்குற லவ்வை கொட்டி தீத்து அவங்க கூட ரொம்ப நேரம் செலவழிப்பீங்க. உங்க அப்பாவோட சப்போர்ட் இன்னிக்கு உங்களுக்கு முழுசா கிடைக்கும். கூடவே உங்க வேலை சம்பந்தமாவும் ஒரு ஐடியா கொடுப்பார். ஹெல்த்துல கொஞ்சம் அக்கறை காட்டுங்க. சளி தொந்தரவு இருந்தா டாக்டர்கிட்ட காட்டி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 7:30 மணிவரை

தனுசு
இன்னிக்கு பொழுது போக்குறதுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்க ஃப்ரண்ட்ஸுங்க கூட சேர்ந்துகிட்டு பார்ட்டி, ட்ரீட்டுன்னு என்ஜாய் பண்ண வாய்ப்பிருக்குது. வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. உங்க அறிவிக்கும் திறமைக்கும் ஏத்த மாதிரியே ப்ரமோஷன் கிடைக்கவும் வாய்ப்பிருக்குது. அதே மாதிரி மத்த விஷயத்திலேயும் இன்னிக்கு நாள் நல்லாவே இருக்கும். குடும்ப தம்பதிகளுக்கு இன்னிக்கு நாள் சாதாரணமாவே இருக்கும். ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்ப நல்லா இருக்கும். திடீர்னு எதிர்பார்க்கமா பணம் உங்க கைக்கு வந்து சேரும். அதை பயன்படுத்தி ஃபைனான்ஸ் விஷயத்துல முக்கிய முடிவெடுக்கலாம். ரொம்ப நாளா உடம்பு முடியாம இருந்தது. இன்னிக்கு அது நிவர்த்தியாக நார்மலா ஆகிடுவீங்க. அதனால ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு நீங்க மனசுல ஒரே குழப்பத்தோடயே இருப்பீங்க. உங்க மேரேஜ் லைஃப்ல ஏற்படுற பிரச்சனையை ரொம்ப அமைதியா, பொறுமையா இருந்து புத்திசாலித்தனமா சால்வ் பண்ண பாருங்க. இல்லாட்டி ஒய்ஃப் கூட வாய் தகராறு ஏற்பட வாய்ப்பிருக்கு. வார்த்தையை கண்ட்ரோல் பண்ணலைன்னா சண்டை பெருசாக வாய்ப்பிருக்குங்கிறதை மனசுல வச்சிக்கிட்டு நடந்துக்கோங்க. வாழ்க்கையில நீங்க ஜெயிக்கணும்னா நெகடிவ் எண்ணத்தை விட்டுடுங்க. உங்களை கவுக்கணுன்னு நினைக்கிறவங்க சந்தர்ப்பத்துக்காக காத்திட்டு இருக்காங்க. அவங்களுக்கு நீங்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துடாதீங்க. ஆஃபீஸ்ல இன்னிக்கு வேலையும் கொஞ்சம் ஏற்ற இறக்கமா தான் இருக்கும். திடீர்னு உங்களுக்கு தர்ற வேலையினால பொறுப்பும் கூடிடும். இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் நல்லா இருக்கும். செலவுங்களை கண்ட்ரோல் பண்ணுங்க.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 32
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 10:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷன் மந்தமா தான் இருக்கும். யோசிக்காம செலவழிச்சா பாக்கெட் காலியாறதோட கடன் வாங்க வாய்ப்பிருக்கு. அதனால எதையும் யோசிச்சி செலவு பண்றதோட, ஃப்யூச்சருக்கு தேவையான இண்வெஸ்ட்டும் பண்றது நல்லது. குடும்பத்துலயும் இன்னிக்கு சில சிக்கல் உண்டாகலாம். ஃபேமிலி மெம்பர்ஸும் உங்களை புரிஞ்சிக்காம நடந்துக்குவாங்க. அதனால வீட்டுல எதை செய்யுறதா இருந்தாலும் யோசிச்சி செய்றது நல்லது. இன்னிக்கு உங்க குழந்தைங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும். அது உங்களோட டென்ஷனை குறைக்கும். ஒய்ஃபும் இன்னிக்கு உங்களுக்கு ஃபேவராவே நடந்துக்குவாங்க. ஒய்ஃப் கூட உக்காந்து எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான ப்ளானை ரெடி பண்ணுவீங்க. ஆஃபீஸ்ல இன்னிக்கு சாதாரண நாளாவே இருக்கும். இருந்தாலும் நீங்க ரொம்ப டல்லாவே ஃபீல் பண்ணுவீங்க. ஃப்ரஷ்ஷாகுறதுக்கு கொஞ்சம் காத்தாட வாக்கிங்க போறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் இரவு 9:00 மணிவரை

மீனம்
இன்னிக்கு தேவையில்லாததை மனசுல போட்டு குழப்பிக்காதீங்க. ஃபேமிலி லைஃப் ரொம்ப மகிழ்ச்சியா நகரும். உங்களோட கவனமெல்லாம் ஒய்ஃப், குழந்தைங்களை பத்தியே இருக்கும். உங்க ஒய்ஃபும் உங்களுக்கு ஃபுல்லா சப்போர்ட் பண்ணுவாங்க. குடும்பத்துல இருக்குற எல்லோருமே இன்னிக்கு உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. அவங்களும் உங்ககிட்ட ரொம்ப அந்நியோன்யமாவும் அன்பாவும் நடந்துக்குவாங்க. பெத்தவங்களோட கோவிலுக்கு போயிட்டு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. ஆஃபீஸ்லயும் இன்னிக்கு நாள் நார்மலாவே இருக்கும். அதனால வேலையையும் ரொம்ப சுலபமா முடிச்சிடுவீங்க. ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லாவே இருக்கும். ஏற்கனவே போட்டிருந்து இண்வெஸ்ட்ல இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. அதனால உங்க ஃபைனான்ஸ் பொசிஷனம் ரொம்ப ஸ்ட்ராங் ஆகிடும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 7:00 மணிவரை



Click it and Unblock the Notifications











