For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காத இந்த நாளில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் தேடிவரும் தெரியுமா?

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், நன்மை மற்றும் தீமையை விளைவிக்கும் நிகழ்வுகள் எல்லாம் நம் கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்தது

|

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், நன்மை மற்றும் தீமையை விளைவிக்கும் நிகழ்வுகள் எல்லாம் நம் கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்தது. எதிர்வரும் நேரம் குறித்த அனைத்து தகவல்களையும் நீங்கள் பெற்றிருந்தால், உங்கள் தோல்வியை வெற்றியாக மாற்றலாம். அதற்கு சிறந்த வழி உங்களின் அன்றாட ராசிபலன்களை தெரிந்து கொள்வதாகும். இன்றைய நாள் யாருக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் யாருக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Daily Horoscope For 24th June 2020 Wednesday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வேலையில் இருப்பவர்களுக்கு இன்று நாள் சிறப்பானதாக இருக்கும், வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று நாள் முழுவதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். திடீர் செலவு காரணமாக இன்று உங்களின் நிதிநிலை மோசமானதாக மாறும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். காதலர்களுக்குள் சில வாக்குவாதங்கள் எழலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று வீட்டின் சூழ்நிலை சரியாக இருக்காது, நீங்கள் வீட்டில் அமைதியின்மையை உணர்வீர்கள். உங்களின் தனிப்பட்ட விஷயங்களில் மற்றவர்களை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வேலையை பொறுத்தவரை அனைத்தும் நீங்கள் எதிர்பார்த்தது போல நடக்கும். இன்று வணிகர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் இரும்பு வர்த்தகம் செய்தால், இழப்புகள் இருக்கலாம். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய நாள் இது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீங்கள் உங்களை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

பணத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்காது. ஒருபுறம் பணத்தை சேமிப்பது சிரமமாக இருக்கும்போது மறுபுறம் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகும். இதனால் இன்று நீங்கள் கடுமையான மனஅழுத்தத்தில் இருப்பீர்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்கள் இன்று முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். இன்று நீங்கள் உங்கள் குடும்பத்துடன் மிக அருமையான மற்றும் அமைதியான நாளை அனுபவிப்பீர்கள். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் கலவையான முடிவுகளைக் கொண்டிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

MOST READ:இந்தியாவை ஆண்ட டாப் 10 மன்னர்கள்... லிஸ்ட்டில் இருக்கும் ஒரேயொரு தமிழ் மன்னர் யார் தெரியுமா?

 கடகம்

கடகம்

அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள்.மன அழுத்தத்தை அதிகரிப்பது உங்கள் வேலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வேலையைப் பற்றிப் பேசும்போது, வேலை செய்பவர்களின் கடின உழைப்பு பலனளிப்பதாகத் தெரிகிறது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் பெற்றோரின் கருத்துக்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும் வகையில் உங்கள் மனைவியுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:50 மணி முதல் இரவு 8:18 மணி வரை

சிம்மம்

சிம்மம்

வேலையில் இருப்பவர்கள் உங்கள் முக்கியமான வேலையை நீங்களே சமாளிக்க முயற்சி செய்யுங்கள். சக ஊழியர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க வேண்டாம், இல்லையெனில் இன்று நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதி இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன், குறிப்பாக சகோதரர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்கள், இன்று ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். திருமணமானவர்கள் இன்று உங்கள் மனைவியுடன் எந்தவிதமான வாக்குவாதத்தையும் தவிர்ப்பது நல்லது. இன்று, உங்கள் திறனுக்கு ஏற்ப ஏழைகளுக்கு நிதி உதவி செய்ய முயற்சி செய்யுங்கள், வரும் நாட்களில் நீங்கள் நிச்சயமாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உங்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம், குறிப்பாக இந்த ராசியின் வேலை செய்பவர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அலுவலக வேலைகளை மிகவும் கவனமாக செய்யுங்கள், இல்லையெனில் உங்கள் தவறு உங்கள் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும், இதனால் நீங்கள் சங்கடப்படலாம். மறுபுறம், வணிகர்கள் தங்கள் பொருளாதார முடிவுகளை இன்று கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், இல்லையெனில் நிதி இழப்புகள் ஏற்படக்கூடும். மாலையில் திடீரென பழைய நண்பர்களைச் சந்திக்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

துலாம்

துலாம்

பணிச்சுமை அதிகமாக இருப்பதால், இன்று நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எப்படியிருந்தாலும், இந்த நேரத்தில் நீங்கள் கடின உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், நீங்கள் சாதாரணமாக இருக்க வேண்டிய நாள் இன்று. இருப்பினும், குடும்பத்தின் குறைகளை நிவர்த்தி செய்ய நீங்கள் அதிக நேரம் கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் மனைவியுடனான உறவில் கசப்பு அதிகரிக்கும். உங்கள் உறவை மேம்படுத்த முயற்சிப்பது நல்லது, இல்லையெனில் அது உங்கள் பிள்ளைகளுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

MOST READ:சாணக்கிய நீதியின் படி இந்த 6 ரகசிய குணங்கள் உங்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றுமாம் தெரியுமா?

 விருச்சிகம்

விருச்சிகம்

நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த பணம் இன்று உங்களைத் தேடிவரும். நண்பர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். இன்று நீங்கள் நிதி தொடர்பான சில பயனுள்ள திட்டங்களை உருவாக்கலாம், இதனால் நீங்கள் நிதி நெருக்கடியைத் தவிர்க்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்பத்தினருடன் அன்பும் அர்த்தமுள்ள உரையாடல்களும் அதிகரிக்கும். மறுபுறம், நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் மனைவியின் உதவியுடன், உங்கள் பெரிய பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். உங்கள் காதலி உங்களை எவ்வளவு நன்றாக புரிந்துகொள்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 முதல் 5:00 வரை

தனுசு

தனுசு

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும். இன்று உங்களின் எந்த முடிவையும் வீட்டின் பெரியவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அமைதியாக இருங்கள், அவர்களை நம்ப வைக்க முயற்சி செய்யுங்கள். அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வேலையில் இருப்பவர்கள் இன்று எளிதாக தங்கள் வேலைகளை முடிப்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் நிதிரீதியாக இலாபத்தை அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை

 மகரம்

மகரம்

உங்கள் வேலையில் இன்று உங்களுக்கு பல சவால்கள் காத்திருக்கும். உங்கள் வேலையை விடாமுயற்சியுடனும் கவனமாகவும் செய்தால் நல்லது. மறுபுறம், நீங்கள் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால், இன்று நீங்கள் சில அனுபவமுள்ளவர்களிடமிருந்து உதவியைப் பெறலாம், குறிப்பாக பணம் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையை அதிகரிக்கும். உங்கள் தாயார் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டால், நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரிடம் முறையான ஆலோசனையைப் பெற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் 12:50 மணி வரை

 கும்பம்

கும்பம்

அலுவலகப் பணிகள் இன்று நீங்கள் எதிர்பார்த்தது போல நடக்கும். பணரீதியான உங்களின் முயற்சிகள் இன்று நல்ல பலனளிக்கும். . நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுத்திருந்தால், தயவுசெய்து உங்கள் பணத்திற்காக ஒரு முறை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். அரசு துறைகளில் பணிபுரியும் மக்கள் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் உடன்பிறப்புகளுக்கு முழு ஆதரவு கிடைக்கும், மேலும் உங்கள் உறவும் வலுவாக இருக்கும். மறுபுறம், இன்று பெற்றோர்கள் உங்களுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:55 முதல் 06:50 வரை

MOST READ:உடலுறவின் போது பெண்கள் ஆண்களிடம் இந்த விஷயங்களை பற்றி கண்டிப்பா பேசக்கூடாது... இல்லனா பிரச்சினைதான்!

மீனம்

மீனம்

இன்று ஒருவருக்கு நிதி உதவி செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பை கைவிட வேண்டாம். இது உங்களை நிறைய சிக்கல்களில் இருந்து காப்பாற்ற உதவும். இன்று எந்த வேலை செய்தாலும் மிகவும் கவனமாக செய்யுங்கள். இன்று வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:25 மணி முதல் 2:15 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 24th June 2020 Wednesday In Tamil

Check out the daily horoscope for 24thd June 2020 Wednesday in Tamil.
Desktop Bottom Promotion