இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...

சனிக்கிழமை இன்று பிப்ரவரி 23 ஆம் நாள் சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம்.

சனிக்கிழமை இன்று பிப்ரவரி 23 ஆம் நாள் சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த உடன் பிறப்புகள் மூலம் அனுகூலம் கிட்டும். இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். இன்று லாபமான நாள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் மாலை 6:30 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

தொழில் ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். பணவருமானம் அதிகமாகும் சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

மிதுனம்

மிதுனம்

பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

கடகம்

கடகம்

அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் அலைச்சல் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : அதிகாலை 5:30 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார். உங்கள் திறமைக்கு மதிப்பு கிடைக்கும். செய்யும் தொழிலில் பார்ட்னர்களின் உதவி கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்வீர்கள். இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆடை ஆபரண சேர்க்கை அதிகமாகும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

கன்னி

கன்னி

ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். கடன் கேட்ட இடத்தில் கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை முடியாத காரியங்கள் இன்று எளிதில் முடியும். இன்று காலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : காலை 06 : 00மணி முதல் காலை 11 :00 மணிவரை

துலாம்

துலாம்

ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளை கண்காணிப்பது அவசியம். பிள்ளைகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். நிதி நிலைமை சுமாராக இருக்கும். உங்களின் வாகன பழுதிற்காக சிறு தொகை செலவிட வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : முற்பகல் 10:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு

தனுசு

சந்திரன் இன்று மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய சொத்து வாங்குவதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சேமிப்பு உயரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 10:00 மணிவரை

மகரம்

மகரம்

சந்திரன் இன்று உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சூரியன், புதனோடு இணைகிறார். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எந்த செயல் செய்வதற்கு முன்பாக ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்று உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நடக்காது என்று நினைத்த காரியம் கூட இன்று நடைபெறும். இன்று மகிழ்ச்சிகரமான நாள். பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : இரவு 7:55 முதல் இரவு 9:40 மணிவரை

மீனம்

மீனம்

சந்திரன் இன்று உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வராத கடன்கள் வசூலாகும். இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். எச்சரிக்கையாக பேசுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, February 23, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion