For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 4 ராசிக்காரங்களுக்கு வருமானம் வரும் கூடவே செலவும் வரும்...

இன்றைக்கு ஞாயிறுகிழமை மார்ச் 22ஆம் நாள் எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும் யாரெல்லாம் ஆரோக்கியத்தில அக்கறை காட்டணும் பணத்தை பத்திரமாக வைக்கணும்னு இன்றைய ராசிபலன் உங்களுக்கு சொல்கிறது படி

|

இன்றைக்கு ஞாயிறுகிழமை மார்ச் 22ஆம் நாள் எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும் யாரெல்லாம் ஆரோக்கியத்தில அக்கறை காட்டணும் பணத்தை பத்திரமாக வைக்கணும்னு இன்றைய ராசிபலன் உங்களுக்கு சொல்கிறது படிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைக்கு உங்களின் வருமானம் அதிகமாகும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி தேடி வரும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மறையும். இன்றைக்கு உங்களுக்கு ரொமான்ஸ் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 1

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

உங்க நிதி நிலைமை பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்றைக்கு காதலான நாள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 10:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

உங்க வீட்டிற்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு மன நிம்மதி ஏற்படும். தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : காலை 7:45 முதல் மாலை 4:30 மணிவரை

கடகம்

கடகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். இன்றைக்கு உங்களுக்கு சுமாரான நாள். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். எதிலும் நிதானமாக இருங்க.

காதல் விசயத்தில் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 9:30 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். உங்க வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : விடிகாலை 4:50 முதல் நண்பகல் 12:05 மணிவரை

கன்னி

கன்னி

இன்று குடும்பத்தில் தாராள தனவரவும், சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் கல்வி விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வியாபாரத்தில் தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்று பாடும் அளவிற்கு உங்களுக்கு ரொமான்ஸ் அதிகமாகும்

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 35

சாதகமான நேரம் : விடிகாலை 5:05 முதல் பிற்பகல் 3:40 மணிவரை

துலாம்

துலாம்

இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படலாம். வெளி நபர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்திகள் தேடி வரும். இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். இந்த ராசிக்கார மாணவர்கள் ரொம்ப ஜாலியாக இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் இரவு 9:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பொறுப்புடனும், சிக்கனத்துடனும் செயல்பட்டால் பண நெருக்கடிகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களுடன் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்லுங்கள் நன்மையே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 11:05 மணிவரை

தனுசு

தனுசு

உங்க வீட்ல நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் அறிமுகம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : காலை 7:30 முதல் நண்பகல் 2:00 மணிவரை

மகரம்

மகரம்

இன்று உங்களுக்கு பயணங்களால் வீண் அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை அடையலாம். இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைத்து குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். இன்று உங்களுக்கு சந்தோஷமான நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 35

சாதகமான நேரம் : விடிகாலை 5:05 முதல் பிற்பகல் 3:40 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்றைக்கு நீங்க செய்யும் அனைத்து செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். உங்களுக்கு வெற்றிகரமான நாள் குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் நன்மைகள் நடைபெறும் சுபகாரியங்கள் கைகூடி வரும். உங்கள் முயற்சியில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். ஒற்றுமையாக இருக்கலாம். வேலை விசயத்தில் மேலதிகாரிகள் சொல்வதை கேட்டு அனுசரித்து நடந்து கொள்ளுங்கள் பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 22nd March 2020 Sunday In Tamil

Check out the daily horoscope for 22nd march 2020 sunday in tamil. Read on...
Story first published: Saturday, March 21, 2020, 19:36 [IST]
Desktop Bottom Promotion