For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு எந்த ராசிக்காரங்க மனைவி கிட்ட கவனமாக பேசணும் தெரியுமா?

இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும், யாருக்கு ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருக்கும், யாருடைய பிரச்சினைகள் தீரப்போகுது, பணம் வரும் வாய்ப்பு யாருக்கு, செலவு யாருக்கு வரும் என்று கேட்கறீங்

|

இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும், யாருக்கு ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருக்கும், யாருடைய பிரச்சினைகள் தீரப்போகுது, பணம் வரும் வாய்ப்பு யாருக்கு, செலவு யாருக்கு வரும் என்று கேட்கறீங்களா? இன்றைய ராசிபலனை படிங்க. உங்க எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு நீங்க உங்க குடும்ப விஷயத்துத்துல ரொம்பவே அக்கறை காட்டுவீங்க. ரெண்டு மூணு நாளா ரொம்ப பதட்டமாவே இருந்துட்டு வர்றீங்க. அது உங்க வேலையை ரொம்பவே பாதிக்குது. உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கூட ஏதாவது வாக்குவாதம் இருந்துச்சின்னா அதை மொதல்ல தீர்த்துட்டு அப்புறமா வேற வேலையை பாருங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு நல்லா தான் இருக்கும். யார்கிட்ட இருந்தாவது பணம் வரணும்னு எதிர்பார்த்திருந்தீங்கன்னா, அந்த பணம் இன்னிக்கு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. மேரேஜ் லைஃப் ரொம்ப நார்மலா தான் நகரும். ஒய்ஃப் கூட ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட லவ் ப்ரபோஸலுக்கு ஐடியா கேட்டு வச்சிக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ஒரு நல்ல கன்சல்ட்டன்ட் கிட்ட போய் பிசினஸ் விஷயமா ஐடியா கேக்குறது நல்லது. இதனால, உங்களுக்கு ஒரு நல்ல பிசினஸ் ஐடியா கிடைச்சி முன்னேறுறதுக்கு வாய்ப்பு கனிஞ்சி வரும். இன்னிக்கு நிங்க ஏதாவது வம்பு தும்புல மாட்டிகிட்டா கூட, உங்க சொந்தக்காரங்க வந்து உதவ தயாரா இருப்பாங்க. இன்னிக்கு உங்களோட கோவத்தை கொஞ்சம் கண்ட்ரோல்ல வச்சிக்கோங்க. உங்க ஒய்ஃப் கூட பேசும்போது எதுக்கும் கவனமா வார்த்தைய பயன்படுத்துங்க. இல்லாட்டி வீட்டுல ரகளை தான் உண்டாகி வீடே ரெண்டாகிடும். கவனமா இருந்துக்கோங்க. இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் நல்லா இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : இரவு 7:55 முதல் இரவு 9:40 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு உங்க ஒய்ஃப் உங்ககிட்ட இருந்து பெருசா கிஃப்ட் எதிர்பார்ப்பாங்க. உங்க ரெண்டு பேருக்கும் ரிலேஷன்சிப் நல்லா இருக்கணும்னா தயவு செஞ்சி அவங்க கேக்குறதை வாங்கி கொடுத்துடுங்க. ஃபைனான்ஸ் விஷயத்துல உங்க அப்பாகிட்ட ஐடியா கேட்டு நடந்தீங்கன்னா, பெருசா உங்களுக்கு பயன் இருக்கும். ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கணும்னா உங்க ரொட்டீன் பழக்க வழக்கத்தை மாத்துங்க. ஹெல்த்தை நல்ல கண்டிஷன்ல வச்சிக்கணும்னா, டெய்லி எக்ஸர்சைஸ் பண்றது நல்லது. அத்தோட சாப்பாடு விஷயத்துல கண்ட்ரோலா இருக்குறதும் நல்லது தான். இன்னிக்கு ஆஃபீஸ் விஷயமா முக்கியமான ஒருத்தரை நீங்க மீட் பண்றதுக்கு வாய்ப்பு இருக்குது. அந்த சமயத்துல உங்களைப் பத்தின நல்ல அபிப்ராயம் முக்கியமான நபருக்கு ஏற்படும். உங்க டேலண்ட்டை பாத்து உங்க முதலாளியும் சந்தோஷப்படுவார்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 37

தகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் நல்லா இருக்கும். பெண்டிங்க் வச்ச எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு வேலை பாத்து முடிச்சிடுவீங்க. இது உங்க ஃபைனான்ஸ் பொசிஷனையும் லாபகரமா மாத்திடும். இதை சாக்கா வச்சிக்கிட்டு கொஞ்சம் அதிகமா செலவு பண்ணலாம். ரொம்ப நாளாவே உறுத்திக்கிட்டு இருந்த ஒரு பிரச்சனை இன்னிக்கு முடிவுக்கு வந்துடும். ஆஃபீஸ்ல இன்னிக்கு நிலைமை உங்களுக்கு சாதகமா இல்லை. பெண்டிங் வேலையை முடிக்காம விட்டதுனால உங்க ஓனர் கடுப்பாகலாம். அதனால பெண்டிங் வைக்காம முடிக்க பாருங்க. நீங்க பிசினஸ் பண்றவரா இருந்தா, புதுசா எதுலயும் இன்வெஸ்ட் பண்ணதீங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் அவ்வளவு நல்லா இல்லை. அதனால கண்டினியுஸா வேலை பாக்குறதை அவாய்ட் பண்ணுங்க. ஓவரா ப்ரஷர் கொடுக்காதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் மாலை 6:30 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு உங்களோட கோபத்துனால சிக்கல்ல மாட்டிக்க வாய்ப்பு இருக்கு. அதனால தேவையில்லாம மத்தவங்களோட விஷயத்துல மூக்கை நுழைக்க வேண்டாம். ஆஃபீஸ்லயும் நிலைமை கொஞ்சம் மந்தமா தான் இருக்கும். உங்க சீனியரோட ப்ரஸர்னால நீங்க டென்ஷனாக வாய்ப்பிருக்கு. உங்க சீனியர் உங்ககிட்ட கொஞ்சம் கோவப்பட்டு கண்டிக்கிறதுக்கு வாய்ப்பிருக்குது. அந்த மாதிரியான சந்தர்ப்பத்துல நீங்க கொஞ்சம் கண்ட்ரோலா இருக்குறது நல்லது. பிசினஸ் விஷயமா வெளியூர் பிரயாணம் பண்றது பிரயோஜனமா இருக்கும். அதனால பிசினஸும் நல்லா டெவலப் ஆகி லாபமும் பெருக வாய்ப்பிருக்குது. உங்களோட பசங்களோட திறமையை பாத்து நீங்க ரொம்ப மெர்சலாகிடுவீங்க. இதை சாக்கா வச்சிக்கிட்டு அவங்களோட நீங்க மனசு விட்டு பேசுவீங்க. இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் பிரமாதமா இருக்கும். திடீர்னு எக்ஸ்ட்ரா வருமானம் வந்து உங்க பாக்கெட்டை நிரப்பும். அதனால இன்னிக்கு நீங்க தாம் தூம்னு செலவழிக்க வாய்ப்பிருக்குது. கூடவே உங்க ஃபேமிலியிலயும் சந்தோஷம் பொங்கும். உங்களோட கூடப்பிறந்தவங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. இன்னிக்கு உங்க ஒஃய்ப், குழந்தைங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. அதனால மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். உங்க லவ்வர் திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அமோகமா இருக்கும். புதுசா பிசினஸ் சான்ஸ் தேடி வரும். ஆஃபீஸ் வேலை பாக்குறவங்களுக்கு நாள் நல்லா இருக்கும். உங்க வேலையை பாத்து உங்க சீனியர் அசந்து போயிடுவார். உங்க ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனை வலுப்படுத்துறதுக்கு ஒரு நல்ல கன்சல்டன்ட் கிட்ட ஐடியா கேட்டு அதுக்கேத்த மாதிரி நடந்துக்கிறது நல்லது. வேலை செய்யுற இடத்துலயும் இன்னிக்கு புதுசா ஒரு வாய்ப்பு வந்து உங்களை சந்தோஷப்படுத்தும். மேரேஜ் லைஃப்ல சந்தோஷமும் அமைதியும் தாண்டவமாடும். உங்க ஒய்ஃப் கூட ரிலேஷன்சிப் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். உங்களோட பேரண்ட்ஸ் கூடி வழக்கத்தை விட கொஞ்சம் ஜாஸ்தி பேசி அவங்களை சந்தோஷப்படுத்துங்க. இல்லாட்டி, நீங்க அவங்க்ளை அவாய்ட் பண்றதா ஃபீல் பண்ணுவாங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நல்லது நடக்க சான்ஸ் இருக்குது. உங்க லவ்வர் உங்களுக்கு கொடுத்த ப்ராமிஸ்ஸை காப்பாத்திடுவாரு. ஹெல்த் கண்டிஷன் இன்னிக்கு நல்லா இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : அதிகாலை 5:30 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு காலையில நாள் மந்தமா ஏத்த இறக்கமா தான் இருக்கும். ஆனா டைம் போக போக சரியாகி எல்லாமே உங்களுக்கு ஃபேவரா தான் எல்லாமே நடக்கும். உங்களோட சின்சியாரிட்டிய பாத்து உங்க சீனியர் சந்தோஷப்படுவார். இன்னிக்கு தேவையில்லாத விஷயத்துல மூக்கை நுழைக்காம ஒதுங்கி நின்னு வேடிக்கை பாருங்க. இல்லேன்னா உங்க பெயர் கெட்டுப்போயிடும். இதனால உங்க ஒய்ஃபும் கடுப்பாகி, உங்களோட சண்டை போடவும் வாய்ப்பிருக்குது. அதனால கவனமா இருக்குறது நல்லது. இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனும் நல்லா இல்லை. அதனால தேவையில்லாம செலவு பண்றதை அவாய்ட் பண்ணுங்க. சிக்கனத்துல கவனம் செலுத்துங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : முற்பகல் 10:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்களுக்கு எல்லாமே நல்லபடியா நடக்குறதுக்கு சான்ஸ் இருக்கு. உங்களோட ராசி கட்டங்களும் அதைத் தான் சொல்லுது. நீங்க லோக்கல்ல வேலை செய்யுறதா இருந்தா, வேற சிட்டிக்கு ட்ரான்ஸ்பர் ஆகி போறதுக்கு வாய்ப்பு இருக்குது. அத்தோட இன்னிக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு உங்க வீட்டு கதவை தட்டுறதுக்கு வாய்ப்பிருக்கு. உங்களோட அச்சீவ்மெண்ட்டை பாத்து உங்க ஃபேமிலி மெம்பர்ஸும் பெருமைப்படுவாங்க. இதை சாக்கா வச்சிக்கிட்டு உங்க ஒய்ஃப் உங்க கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு எதிர்பார்ப்பாங்க. அதை அவாய்ட் பண்ணாம அவங்க சொல்றதை கேட்டு நடந்துக்கோங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் சரியில்லைன்னு தான் தோணுது. பிளட் ப்ரஷர் இருக்குறவங்க டாக்டர்கிட்ட காட்டி செக்கப் செஞ்சிக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : மாலை 4:20 முதல் இரவு 8:45 மணிவரை

மகரம்

மகரம்

நீங்க ரெண்டு மூணு நாளாவே சரியில்லை, ரொம்ப டென்ஷன்ல இருந்தீங்க. ஆனா, இன்னிக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுவீங்க. உங்களுக்கு சப்போர்ட்டா சில விஷயங்கள் நடக்கலாம். நீங்க பிசினஸ் பண்றவரா இருந்தா, கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்குறது நல்லதுங்க. உங்க எதிரிங்க திடீர்னு வந்து தொல்லை கொடுக்க வாய்ப்பிருக்குது. அதனால கொஞ்சம் கவனமா புத்திசாலித்தனமா அடியெடுத்து வைக்கணும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு, இன்னிக்கு ஒர்க் லோடு கொஞ்சம் ஓவராதான் இருக்கும். கஷ்டப்பட்டு தான் வேலையை முடிக்கணும். உங்களோட மேரேஜ் லைஃபை டெவலப் பண்றதுக்கு தீவிரமா முயற்சி பண்ணிட்டு வர்றீங்க. அதை கண்டினியூ பண்ணுங்க. அதனால ஒய்ஃப் கூட இருந்துட்டு வர்ற பிரச்சனை முடிவுக்கு வர வாய்ப்பிருக்குது. ஃபைனான்ஸ் பொசிஷன் நல்லா இருக்கும். உங்களோட பணத்தை எதுலயாவது இன்வெஸ்ட் பண்றதுன்னு முடிவெடுத்தா, ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்றது நல்லது. பணமும் கொட்டும். ஆஃபீஸ் வேலை உங்க கண்ணை கட்ட வச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் மாலை 5:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு உங்களுக்கு ரொம்ப முக்கியமான நாளா இருக்க வாய்ப்பிருக்கு. ஆஃபீஸ்ல பெண்டிங் வேலை ஏதாவது இருந்தா இன்னிக்கு கஷ்டப்பட்டு முடிக்க பாப்பீங்க. கூடவே உங்க ஃபேமிலி ப்ராப்ளத்தையும் சால்வ் பண்ண ட்ரை பண்ணுவீங்க. அதுல உங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கவும் வாய்ப்பிருக்குது. ஆனா, உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் யாராவது குட்டையை குளப்பி அதுல மீன் பிடிக்க பாக்கலாம். அதனால நீங்க கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் கொஞ்சம் மந்தமா தான் இருக்கும். அதனால செலவு பண்றதுல கவனமா இருங்க. இல்லாட்டி சிக்கல் தான். மேரேஜ் லைஃப் ஸ்மூத்தா நகரும். உங்க ஒய்ஃப் கூட அந்நியோன்யமா இருப்பீங்க. ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் கவனம் செலுத்துறது பெட்டர். ஃப்ரை பண்ணுன ஃபுட் ஐட்டத்தை அவாய்ட் பண்றது நல்லது. ட்ரிங்க்ஸ் பண்றதை நிறத்திக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 10:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு உங்களுக்கு நாள் அவ்வளவு நல்லா இல்லை. மேரேஜ் லைஃப்லயும் இடியாப்ப சிக்கல் ஏற்படுறதுக்கு வாய்ப்பிருக்குது. உங்களோட கோவத்தை கண்ட்ரோல் பண்ணலைன்னா தேவையில்லா பிரச்சனை முளைக்கலாம். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் அருமையா இருக்கு. ஆஃபீஸ்ல வேலையில் காண்சன்ட்ரேஷன் பண்ணலைன்னா பல தொந்தரவும் சிக்கலும் வந்து வாய்க்கலாம். தேவையில்லாத விஷயத்தை பத்தி கவலைப்படுறதை மொதல்ல நிறுத்துங்க. அப்பதான் வாழ்க்கையில முன்னேற முடியும். எந்த ஒரு வேலையையும் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, நல்லா ப்ளான் பண்ணிட்டு அப்புறமா அந்த வேலையில இறங்குனீங்கன்னா நல்லது. இன்னிக்கு உங்க லைஃப்ல முன்னேற்றத்தை கொண்டுட்டு வர்ற ஒரு அருமையான வாய்ப்பு உங்க வீட்டுக் கதவை தட்டும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வள நல்லா இல்லைன்னு தோணுது.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : அதிகாலை 4:15 முதல் நண்பகல் 12:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 20th November 2019 Wednesday

Check out the daily horoscope for 20th november 2019 wednesday. Read on...
Story first published: Tuesday, November 19, 2019, 23:42 [IST]
Desktop Bottom Promotion