Latest Updates
-
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும்
இன்னைக்கு இந்த 4 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம்...
இன்று மார்ச் 1 ஆம் நாள் சந்திரன் மேஷம் ராசியிலும் ரிஷபம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கிறது.
இன்று மார்ச் 1 ஆம் நாள் சந்திரன் மேஷம் ராசியிலும் ரிஷபம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கிறது. இந்த 4 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்களால் நன்மைகள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 4
ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்க விரைய ஸ்தானத்திலும் உங்க ராசியிலும் சஞ்சரிக்கிறார். லேசான மனக்குழப்பம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். பணவரவு சுமார்தான். விரைய செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 5
ராசியான நேரம்: பிற்பகல் 2.45 - 4 மணி

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்திலும் விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் நல்ல தொடர்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
ராசியான நிறம்: க்ரீம்
ராசியான எண்: 7
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

கடகம்
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. வண்டி வாகனங்களால் பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.
ராசியான நிறம்: ப்ரௌன்
ராசியான எண்: 37
ராசியான நேரம்: பிற்பகல் 4.30 மணி - இரவு 11 மணி

சிம்மம்
சந்திரன் சஞ்சாரம் சந்தோஷத்தை கொடுக்கும். இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ராசியான நிறம்: வெள்ளை
ராசியான எண்: 18
ராசியான நேரம்: காலை 7.45 - 12 மணி

கன்னி
சந்திரன் இன்றைய தினம் பிற்பகல் வரை எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிற்பகலுக்கு மேல் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் பிற்பகலுக்கு மேல் நன்மைகள் ஏற்படும்
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 20
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 10 மணி

துலாம்
சந்திரன் இன்றைய தினம் ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பிற்பகலுக்கு மேல் சந்திரன் எட்டாம் வீட்டிற்கு வருவதால் வண்டி வாகனங்களில் கவனமாக இருக்கவும். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று நீங்கள் எடுக்க வேண்டாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ராசியான நிறம்: ஆரஞ்ச்
ராசியான எண்: 14
ராசியான நேரம்: பிற்பகல் 12 மணி - இரவு 9 மணி

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் களத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள்.
ராசியான நிறம்: பச்சை
ராசியான எண்: 15
ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

தனுசு
சந்திரன் இன்றைய தினம் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும் உணவில் கவனம் தேவை.
ராசியான நிறம்: இளம் சிவப்பு
ராசியான எண்: 6
ராசியான நேரம்: பிற்பகல் 1 மணி - மாலை 5 மணி

மகரம்
சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
ராசியான நிறம்: மெரூன்
ராசியான எண்: 25
ராசியான நேரம்: காலை 4.20 பிற்பகல் 12 மணி

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாவது வீடான முயற்சி ஸ்தானத்திலும் நான்காம் வீட்டிலும் பயணிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம், இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ராசியான நிறம்: ப்ளூ
ராசியான எண்: 2
ராசியான நேரம்: காலை 7.15 மணி - மாலை 2.05 மணி

மீனம்
சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பிற்பகலுக்கு மேல் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 4
ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி



Click it and Unblock the Notifications
