Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
இன்றைக்கு யாரெல்லாம் ரொம்ப குதூகலமாக இருக்கப் போறீங்க தெரியுமா?
இன்றைய தினம் சில ராசிக்காரங்களுக்கு பணம் வரலாம். சிலருக்கு ஓய்வும் மகிழ்ச்சியும் அதிகமாகும். உங்களுக்கு உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களை படியுங்கள்.
இன்றைய தினம் சில ராசிக்காரங்களுக்கு பணம் வரலாம். சிலருக்கு ஓய்வும் மகிழ்ச்சியும் அதிகமாகும். உங்களுக்கு உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களை படியுங்கள். உங்களின் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க. உங்க ஒய்ஃப் கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. இன்னிக்கு உங்களோட செல்வாக்கும் அந்தஸ்தும் அதிகரிக்கும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வெளியில போக நினைக்காதீங்க. அப்புறம் கொரோன உங்க வீட்டுல என்ட்ரி ஆயிடும் ஜாக்கிரதை. ஆஃபீஸ் உத்தியோகத்தையும் ரொம்ப உற்சாகமா செய்வீங்க. இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம் : காலை 4.15 மணி மாலை 5 மணி

ரிஷபம்
இன்னிக்கு நீங்க வீட்டு வேலைங்களை ரொம்பவே சந்தோஷமா செஞ்சி முடிப்பீங்க. சாப்பாட்டு விஷயத்துல கொஞ்சம் கவனம் செலுத்துறது நல்லது. மேரேஜ் லைஃபும் சந்தோஷமா நகரும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல நீங்க வீட்டுல இருக்குறதுனால, எக்ஸர்ஸைஸ் பண்ணி ஹெல்த் கண்டிஷனை கண்ட்ரோலா வச்சிக்குறது நல்லது. அப்பதான் நீங்க சுறுசுறுப்பா இருப்பீங்க. அநாவாசியமா சோஷியல் மீடியாவுல புகுந்து டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட நம்பர் 22
அதிர்ஷ்ட நேரம் : காலை 6.15 மணி பிற்பகல் 1.40 மணி

மிதுனம்
இன்னிக்கு உங்களுக்கு பணவரத்து கூடுதலா இருக்கும்குறதுனால, கடன் பிரச்சனையும் தீர்ந்துடும். பெத்தவங்களோட ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை எடுத்துக்குறது நல்லது. சின்னதா பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அமோகமா இருக்கும். கையிருப்புல இருக்குற ஸ்டாக்கெல்லாம் வித்து தீர்ந்து லாபம் கொட்டும். ஒய்ஃபோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதலா அக்கறை காட்டுறது நல்லது. இது வரைக்கும் தொந்தரவு கொடுத்துவந்த நோய் காணாம போயிடும். எதையுமே பாசிட்டிவா திங்க் பண்ண பாருங்க. நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.30 மணி மாலை 6 மணி

கடகம்
இன்னிக்கு குடும்பத்துல இருக்குறவங்க கூட அநாவசியமா வாக்குவாதம் பண்ணாதீங்க. பசங்க மூலமா ஒத்தாசை கிடைக்கும். எல்லா வேலையையுமே ரொம்ப சந்தோஷமா செஞ்சி முடிப்பீங்க. சில விஷயத்துல இடைஞ்சல் தடங்கல் இருந்தாலும் அதைப் பத்தி கவலைப்படாதீங்க. பணப்பிரச்சனைங்க எட்டிப்பார்க்கலாம், கவனமா இருங்க. ஒய்ஃபோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 20
அதிர்ஷ்ட நேரம் : காலை 10.35 மணி இரவு 7 மணி

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்க இன்னிக்கு ஒய்ஃப் கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. குடும்பத்துல இருக்குறவங்களையும் சந்தோஷமா வச்சிக்குவீங்க. லவ் பண்றவங்க, இன்னிக்க தாராளமா லவ் ப்ரபோஸல் பண்ணலாம். இன்னிக்கு செலவுங்க வந்தாலும் அது சுபச் செலவாவே இருக்கும்கிறதுனால கவலைப்படவேண்டாம். சாப்பாட்டு விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி இரவு 8.30 மணி

கன்னி
கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்களுக்கு ஒரு நல்ல சேதி உங்களை தேடி வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. கொரோனா பீதியினால வீட்டுல இருப்பீங்க, அதனால ஒய்ஃப் கூடவும், குடும்பத்துல இருக்குற மத்தவங்க கூடவும் சந்தோஷமா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. கூடவே, கொஞ்சம் எக்ஸர்ஸைஸ் பண்ணி உடம்பை கண்ட்ரோல்ல வச்சிக்கோங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் ஓரளவு கிடைக்கும். ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் கூடுதலா அக்கறை எடுத்துக்கோங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம் : காலை 5 மணி மாலை 5 மணி

துலாம்
இன்னிக்கு உங்களுக்கு பிரயமானவங்களோட அன்பும் கனிவான பேச்சும் ரொம்பவே உற்சாகப்படுத்தும். அதனால ரொம்பவே சந்தோஷமா இருப்பீங்க. எதிர்பாக்காத இடத்துல இருந்து திடீர் பணவரத்து உண்டு. ஒய்ஃப் கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. மொத்தத்துல இன்னிக்கு ரொம்ப அமைதியான நாளா கழியும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 31
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 மணி 9.30 இரவு

விருச்சிகம்
இன்னிக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, யார் கிட்டயும் ரொம்ப பேச்சு வார்த்தையை வச்சிக்காதீங்க. அது வீண் வம்புல கொண்டு போயி விட்டுடும். அதனால அமைதியா இருக்க பாருங்க. இல்லேன்னா அது குடும்பத்துலயும் பிரச்சனையை உண்டு பண்ணிடும். உங்க மனசுக்கு பிடிச்சவங்களோட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 3 மணி இரவு 9 மணி

தனுசு
இன்னிக்கு உங்க குடும்பத்தோட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் ஓரளவுக்கு கிடைக்கும். ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்குறதுனால, மனசளவுல ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவீங்க. அதனால உங்க எனர்ஜியும் சந்தோஷமும் கூடிடும். லவ் பண்றவங்க இந்த சமயத்துல கொஞ்சம் கவனமா மூணு அடி கேப் விட்டு பழகுறது நல்லது. இல்லேன்னா கொரோனா வைரஸை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவீங்க.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : மாலை 3 மணி இரவு 7 மணி

மகரம்
மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு தயவு செஞ்சி யாருக்கும் வாக்குறதியை அள்ளி வீசிடாதீங்க. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வீட்டை விட்டு வெளியில வராம, வீட்டுல இருந்து மொத்த குடும்பத்தோட டைம் ஸ்பெண்ட் பண்றது நல்லதுங்க. மனசை ரிலாக்ஸா வச்சிக்கோங்க. அதுவே உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். நாள் பட்ட நோய்க்கு இன்னிக்கு விடிவு காலம் பிறக்கும். எதுலயாச்சும் இண்வெஸ்ட் பண்றதுக்கு முன்னாடி அது சம்பந்தமா நல்லா யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம் : காலை 11.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கும்பம்
இன்னிக்கு உங்களுக்கு எதிர்பாக்காத வழியில இருந்து பண வரத்து இருக்கும். அதனால பணப் பிரச்சனை சால்வ் ஆகிடும். இன்னிக்கு நாள் முழுக்கவும் ரொம்பவே பிசியா இருப்பீங்க. சொந்தக்காரங்க கிட்ட அநாவசியமா வாக்குவாதம் பண்ணாம கவனமா பேசி பழகுறது நல்லது. மொத்தத்துல இன்னிக்கு தரமான சம்பவங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9.20 மணி வரை

மீனம்
இன்னிக்கு நீங்க வீட்டுலயே இருக்குறதுனால குடும்பத்தோடவும், ஒய்ஃப் கூடவும் ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. அதனால உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கூடிடும். அதோட சிக்கலும் காணாம போயிடும். குடும்பத்தாரோட ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைச்சிடும். மொத்தத்துல இன்னிக்கு மனநிம்மதியா இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6 மணி இரவு 11 மணி



Click it and Unblock the Notifications











