For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்களுக்கு வருமானத்தோடு செலவும் கூடவே வரும்...

புதன்கிழமை பொன்னான நாள். இன்று சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம்.

|

புதன்கிழமை பொன்னான நாள். இன்று சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம். இப்போது 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிப்பலன்கள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நேரம் போன்றவற்றைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைய தினம் உங்களுக்கு சந்தோஷமான நாள். ஏகாதசி விரதம் இருந்தால் தடைகள் நீங்கும். மனதில் உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். உடலும் மனதும் சுத்தமாக இருக்கும். சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். கணவன் மனைவி இடையே காதல் ஊற்றெடுக்கும். பணவரவு அதிகமாக இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு நிறைய செலவுகள் செய்வீர்கள். சுப செலவுகள் நிறைய வரும். ரொம்ப குதூகலமாக உற்சாகமாக இருப்பீர்கள்.

நிதானமாக யோசித்து முடிவு செய்யுங்கள் காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும் உடல் ஆரோக்கியம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். கண்களில் கவனமாக இருங்க. பெருமாள் கோவிலுக்கு போயிட்டு வாங்க நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை கலந்த மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : காலை 10:00 முதல் பிற்பகல் 1:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

உங்களின் வேலைகளை நிதானமாக செய்யுங்கள். நீங்க என்ன செய்கிறீர்கள் என்பதை கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். யாரைப்பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். புரமோசன் கிடைக்கும் காலம் என்பதால் சந்தோஷமாக வேலைகளை செய்யுங்கள். சுக்கிரன் உச்சமாக இருப்பதால் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக இருங்க. வங்கி மேலாளர்கள் கூடுதல் கவனத்தோடு இருங்க. சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் போகும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : இரவு 7 முதல் இரவு 10 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் இன்றைய தினம் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. பண வரவு இன்றைக்கு அதிகமாக இருக்கும். செவ்வாய், குரு இணைந்து குரு மங்கல யோகத்தை தருகிறார். திருமண யோகம் கை கூடி வருகிறது. வேலை மாற்றம் ஏற்படும். புதன் மூலம் உயர்கல்வி யோகம் வரும். பெண்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும். விஐபிக்கள் அறிமுகம் கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்றைக்கு நீங்க பெருமாள் கோவிலுக்கு போய் துளசி மாலை போட்டு வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 7:00 மணிவரை

கடகம்

கடகம்

சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். நோய்கள் எட்டிப்பார்கள். வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கும். நினைவாற்றலை அதிகப்படுத்துங்க. ஞாபக மறதி வரும் எச்சரிக்கையாக இருங்க. சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார். கண்டச்சனி காலம் உங்களை கவலைப்படுத்தும் என்றாலும் சனி பகவான் உங்க ராசியை பார்க்கிறார் என்பதால் சோம்பல் அதிகமாகும். காது பிரச்சினைகள் வரலாம் கவனம்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சூரியன் எட்டாம் வீட்டில் இருப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுங்கள். சரஸ்வதி தேவியை வணங்குங்கள் கல்வியில் முன்னேற்றம் வரும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : நண்பகல் 1 முதல் மாலை 5 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். வாய்ப்பு வசதிகள் தேடி வரும். புகழ் பெறும் காலம். பெண்களுக்கு ரொம்ப நல்ல காலம் என்றாலும் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. அலுவலகத்தில் நல்ல செய்திகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். புதிய தொழில் தொடங்குவீர்கள். கணவன் மனைவி பிரச்சினை வரலாம் கவனமாக இருக்கவும். இன்றைக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள் பிரச்சினைகள் தீர ஆஞ்சனேயப் பெருமானை வணங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ கலர்

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : பிற்பகல் 2 முதல் இரவு 8 மணிவரை

கன்னி

கன்னி

இன்றைக்கு சந்தோஷமான நாள். சுக ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் கவனமாக இருங்க. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கன்னி ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் புதன் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். கணவன் மனைவி பிரச்சினைகள் அதிகமாகும் பிரிவு வரும் முன்பு விட்டுக்கொடுத்து போங்க. பூர்வீக சொத்துக்களை விற்பதன் மூலம் வருமானம் வரும். புதிய வீடுகளை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சிலர் நண்பர்கள் மூலம் நன்மை அடைவார்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 1:00 மணி வரை

துலாம்

துலாம்

சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நல்லதே நடக்கும் உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்க சந்தோஷத்திற்கு இன்றைக்கு அளவே இருக்காது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. காதல் விவகாரங்கள் மனதில் மகிழ்ச்சியை தரும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : மாலை 4 முதல் இரவு 9:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தன ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய், குரு, கேது என நான்கு கிரகங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் வேலையில் கவனமாக இருங்க வம்பு பேச்சுக்கள் வேண்டாம். உங்க பேச்சே உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். அம்மா உடன் அதிக நேரம் செலவு செய்வீர்கள். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குருவினால் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். காதல் வாழ்க்கை கலகலப்பை தரும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : பிற்பகல் 1:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். உங்க ராசியில் ஏற்கனவே குரு,கேது, செவ்வாய் சஞ்சரிக்கின்றனர். இன்றைக்கு எதிர்பார்க்கிற காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்றாலும் ஒருவித டென்சன் இருந்து கொண்டே இருக்கும். திருமண பேச்சுவார்த்தை நன்மையில் முடியும். வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 1

சாதகமான நேரம் : மாலை 4:20 முதல் இரவு 8:45 மணிவரை

மகரம்

மகரம்

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகிறது. வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். விசா தொடர்பான வேலைகளை இன்று தொடங்குங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். இன்றைக்கு பணம் விசயத்தில் யாரையும் நம்பாதீங்க. விருந்துகளில் கவனம் செலுத்துவீர்கள். பணவரவு இருந்தாலும் தேவையில்லாத செலவுகள் உங்களை கஷ்டப்படுத்தும். உங்க உடல் நலம் அற்புதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டைகள் வரும் கவனமாக இருங்க. சண்டைகளை தவிர்க்க மன அமைதி தேவை. உங்க ராசிநாதன் சனிபகவானை வணங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : பிற்பகல் 3:30 முதல் மாலை 6:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்றைக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே லாப ஸ்தானத்தில் குரு, கேது, செவ்வாய் சஞ்சரிக்கிறார்கள். பணவருமானம் அற்புதமாக இருக்கும். பணத்தை பத்திரப்படுத்தினால் மட்டுமே விரைய செலவுகளை தவிர்க்க முடியும். உங்க உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வேலையில் கவனமாக இருங்க. உங்க எதிர்காலத்தை திட்டமிட இது நல்ல நாள். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் வரலாம். காதல் விவகாரங்கள் சந்தோஷத்தை ஏற்படுத்தும். இன்றைக்கு நீங்க மதுரை மீனாட்சியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : மாலை 2:00 முதல் இரவு 4:00 மணிவரை

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்றைக்கு ரொம்ப நல்ல நாள் காரணம் தொழில் ஸ்தானத்தில் சந்திரன் குரு உடன் சஞ்சரிக்கிறார். குரு சந்திர யோகம் உள்ளதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கினால் லாபத்தை கொடுக்கும். அற்புதமான நாள். குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். காதல் மலரும் நாள் இது. திருமண வாழ்க்கையில் உங்க வாழ்க்கை துணை மீது அன்பு அதிகரிக்கும். வீட்டில் சில வருத்தம் தரக்கூடிய நிகழ்வுகள் நடந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். இன்றைக்கு நீங்க குரு பகவானை வணங்குங்கள் குடும்பம் குதூகலமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : அதிகாலை 4 முதல் காலை 8:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 19th February 2020 Wednesday In Tamil

Check out the daily horoscope for 19th february 2020 wednesday. Read on...
Story first published: Tuesday, February 18, 2020, 23:58 [IST]
Desktop Bottom Promotion