Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...
இன்றைய தினம் உங்களுக்கு என்ன நடக்கும்னு நினைக்கிறீங்களா? தினசரி ராசி பலன்கள் படிங்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதுன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம். மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க வேலை செய்யிற இடத்தி
இன்றைய தினம் உங்களுக்கு என்ன நடக்கும்னு நினைக்கிறீங்களா? தினசரி ராசி பலன்கள் படிங்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதுன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம். மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க வேலை செய்யிற இடத்தில ஜாக்கிரதையாக இருங்க. சிம்மம், விருச்சிகம், மகரம் ராசிக்காரங்களுக்கு உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கும். மொத்தத்தில இன்றைக்கு எல்லா ராசிக்காரங்களுக்குமே நல்லதும் கெட்டதும் கலந்த பலன்களையே தரப்போகிறது.

மேஷம்
இன்னைக்கு நீங்க எந்த ரிஸ்க் ஆக முடிவுகளை எடுக்காதீங்க. பணம் விசயத்தில ஜாக்கிரதையாக இருங்க இல்லாட்டி பணம் உங்களுக்கு லாஸ் ஆகிடும். 'ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு' அது மாதிரி நல்ல வாய்ப்பு வரும் வரைக்கும் காத்திருங்க. உங்க வேலை உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கலாம் சில மிஸ்டேக்ஸ் செய்வீங்க அதை அவாய்ட் பண்ணுங்க. பெற்றோர்களோட ஆசிர்வாதம்தான் உங்களை வாழ வைக்கும் அது உங்களுக்கு எப்பவுமே கிடைக்கும். உங்க லைப் பார்ட்னரை நீங்க கவனமாக பார்த்துக்கங்க. உங்க ரொமாண்டிக் லைப்ல இன்னைக்கு டென்சன் ஜாஸ்தியா இருக்கும். உங்க பார்ட்னரோட தேவைகளை நிறைவேற்றுங்க. காதல் வாழ்க்கையில கன்வின்ஸ் ஆக பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
அதிர்ஷ்ட நேரம் : இரவு 7.15 மணி - இரவு 10.20 மணி

ரிஷபம்
இன்றைய தினம் உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய நாளாக அமையும். மிகப்பெரிய பிரச்சினையில் இருந்து உங்க நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களோட உதவியோட தப்புவீங்க. உங்க வாழ்க்கை துணையோட நீங்க சந்தோஷமா இருப்பீங்க. உங்க அன்பானவர் செய்யிறதை பார்த்து ஹெசிடேட் ஆகாதீங்க. உங்க குழந்தைகள் மேலயும் நீங்க கவனமாக இருங்க. வேலை செய்யிற இடத்தில சில ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் கிடைக்கும். ரொம்ப ஹார்ட் ஒர்க் செஞ்சி இன்னைக்கு வேலைகளை எல்லாம் செய்து முடிப்பீங்க. உங்க பொருளாதார நிலைமை நேற்றைய விட இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கும். பணப்புழக்கம் இன்னைக்கு சரளமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 27
அதிர்ஷ்ட நேரம் : இரவு 1.15 மணி - இரவு 7.45 மணி

மிதுனம்
இன்னைக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் உற்சாகமாக இருப்பீங்க காரணம் உங்க பழைய நண்பர்களை சந்தித்து ரொம்ப நேரம் பேசி பழகுவீங்க. சில சந்தோஷ நினைவுகளை அசைபோடுவீங்க இதனால உங்களுக்கு புதிய அனுபவமும் மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். பிரச்சினைகளையும் தவறுகளையும் புத்திசாலித்தனமாக சரி பண்ணுவீங்க. உங்க நிதி நிலைமை இன்னைக்கு ரொம்ப சாதாரணமாக இருக்கும். ஆன்மீக பயணங்கள் போவீங்க. கோவில் அல்லது உங்க வீட்ல செய்யப் போற பூஜைகளால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : காலை 9.20 மணி இரவு 7.45 மணி

கடகம்
ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு ரொம்ப மன அமைதியா ஃபீல் பண்ணுவீங்க. உங்க வீடு, சுற்றுப்புற சூழ்நிலை ரொம்ப அமைதியா இருக்கும். நீங்களும் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க. நீங்க உங்க வேலையை ஹார்ட் ஒர்க் பண்ணி செய்து முடிப்பீங்க. உங்க வேலை உங்க சீனியர்ஸ்க்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு புரமோசன் கிடைக்க கூட வாய்ப்பு இருக்கு. உங்க பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கு. உங்க நிதி விவகாரங்கள், திட்டங்களை நீங்க ரகசியமாக வச்சிக்கங்க. எதையும் வெளியே சொல்லாதீங்க. உங்க பெண்டிங் வேலை எல்லாம் செய்து முடிச்சிட்டு கவலைப்படாம இருங்க. உங்க வாழ்க்கை துணைக்கு உதவி பண்ணிட்டு இந்த நாளை சந்தோஷமா கடத்துங்க.
ராசியான நிறம் : பச்சை
ராசியான எண்: 21
ராசியான நேரம் : காலை 4.30 மணி - பிற்பகல் 1.30 மணி

சிம்மம்
இன்னைக்கு நீங்க ரொம்ப மன அழுத்தமா ஃபீல் பண்ணுவீங்க. உங்க குடும்ப உறுப்பினர்களோட சப்போர்ட் இன்னைக்கு உங்களுக்கு கிடைக்காம போகலாம். உங்க அன்பான உறவுகள் கிட்ட நீங்க மனசு விட்டு பேசுங்க. வேலை செய்யிற இடத்தில உங்களுக்கு வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். கஷ்டமான வேலைகளை கூட நீங்க ஈஸியா செய்து முடிப்பீங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் கூட உங்க மன அமைதியை பாதிக்கும். பண வரவு இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும். உடல் நலத்தில நீங்க அக்கறை காட்டுங்க.
ராசியான நிறம் : பர்ப்பிள்
ராசியான எண் : 30
ராசியான நேரம் : காலை 10.00 பிற்பகல் 1.30 மணி

கன்னி
உங்க குடும்ப உறுப்பினர்கள் உங்க கிட்ட ரொம்ப உற்சாகமாக பழகுவீங்க. உங்க அன்பும் காதலும் ரொம்ப ஸ்டிராங்க் ஆக இருக்கும். உங்க கவனத்தை கவர குழந்தைகள் செய்யிற சேட்டை உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். உங்க வாழ்க்கை துணையோட உடல் நலத்திலயும் ஆரோக்கியத்திலயும் அக்கறை காட்டுங்க. சின்னச் சின்ன மாற்றங்களை நீங்க பார்ப்பீங்க. வேலை செய்யிற இடத்தில இடத்தில உங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். நீங்க ரொம்ப நல்லா வேலை செய்வீங்க. பண விசயத்தில ஜாக்கிரதையாக இருங்க. திடீர் செலவுகள் உங்களுக்கு எட்டிப்பார்க்கும். விரைய செலவுகள் வரலாம்.
அதிஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.15 மணி மாலை 6.45 மணி

துலாம்
இன்னைக்கு உங்க பிசினஸ்ல நல்ல லாபம் கிடைக்கும். உள்ளூர் மட்டுமல்ல வெளியூர் வெளிநாட்டிலையும் உங்களோட பிசினஸ் நல்லா வளரும். உங்க பிசினஸ் வளர இது நல்ல வாய்ப்பு. உங்க திருடண வாழ்க்கையில அன்பும் காதலும் அதிகமாக இருக்கும். உங்க குழந்தைங்க மூலமா உங்களுக்கு டென்சன் குறையும். உங்க காதலர் அல்லது காதலியை இன்னைக்கு பார்த்து ரொமாண்டிக்கா பேசுவீங்க. உங்க மனசும் உடம்பும் ரொம்ப சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். நீங்க இன்னைக்கு ரொம்ப நல்லா இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண் : 22
அதிர்ஷ்ட நேரம் : காலை 7.30 மணி - பிற்பகல் 3.40 மணி

விருச்சிகம்
இன்னைக்கு உடம்பும் மனசும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உங்க குடும்ப நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. வேலை செய்யும் இடத்தில நீங்க கிரியேட்டிவ் ஆக செய்யும் வேலை வெற்றிகரமாக முடியும் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும். நீங்க புது பிசினஸ் தொடங்கியிருந்தா அது உங்களுக்கு நல்ல வருமானத்தையும் லாபத்தையும் கொடுக்கும். உங்க சூழ்நிலை உங்களை மாற்றியமைக்கும். நல்ல நாள் இன்னைக்கு உங்க பணப்பிரச்சினை தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. கல்யாணம் ஆகாத சிங்கிள்ஸ்க்கு நல்ல திருமண வாழ்க்கை தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட நேரம் : 18
அதிர்ஷ்ட நேரம் : காலை 5.30 மணி - மாலை 6.30 மணி

தனுசு
இன்னைக்கு உங்களுக்கு கோபம் வரலாம், சூடான பேச்சுகளை விவாதங்களை தவிர்த்து விடுங்க. உங்க கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நீங்க பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆபிஸ்ல உங்களைப் பார்த்து சிலர் பொறாமைப்படுவாங்க. கண் திருஷ்டி தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டு வரும். சூழ்நிலையை சரியா ஹேண்டில் பண்ணுங்க, நிங்க ரொம்ப பிசியான பிசினஸ் மேனாக இருந்தால் திடீர் பயணங்கள் ஏற்படும். உங்க கடினமான வேலைக்கும் முயற்சிக்கும் ஏற்ப நல்ல ரிசல்ட் கிடைக்கும். உங்க திருமண வாழ்க்கையில நீங்க ரொம்ப திருப்தியா ஃபீல் பண்ணுவீங்க. உங்க ரொமான்ஸ் வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும். பணப்பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனம்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 19
அதிர்ஷ்ட நேரம் : காலை 7.20 மணி பிற்பகல் 1 மணி

மகரம்
இன்னைக்கு நீங்க ரொம்ப பிசியாக இருப்பீங்க. உங்க வேலை செய்யிற இடத்தில நீங்க உங்க திறமையை நிரூபிப்பீங்க. நீங்க வேலை செய்யிற இடத்தில உங்க திறமையை நிரூபிப்பீங்க. ஒரு தங்கமான வாய்ப்பு உங்க வீட்டுக்கதவை தட்டப்போகிறது அதை தவறவிட்டு விடாதீர்கள். பிசினஸ் செய்பவர்கள் உங்க பணத்தை லாஸ் பண்ணிடாதீங்க. உங்க பிசினஸ் பார்ட்னரை நீங்க சரியா புரிஞ்சுக்காட்டி பண விசயத்தில நஷ்டம் ஏற்படும். உங்க நிதி நிலைமை நல்லா இருக்கும் பழைய கடன்கள் பைசலாகும். இதனால் திடீர் வருமானம் கிடைக்கும். உங்க குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சந்தோஷமான நாள் இது.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 17
அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி - பிற்பகல் 3 மணி

கும்பம்
இன்னைக்கு நீங்க உங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான வேலைகளை எல்லாம் செய்து முடிப்பீங்க. எதையும் கூட்டு முயற்சியோட செய்து முடிப்பீங்க. இன்னைக்கு உங்க வேலைகளை உற்சாகமாக செய்வீங்க அலுவலகத்திலயும் நல்ல பெயர் கிடைக்கும் எதையும் பெண்டிங் வைக்கமாக எல்லா வேலைகளையும் செய்து முடிச்சிருவீங்க. உங்க லைப் பார்ட்டனர் கோபமாக இருந்தா கூட நீங்க கன்வின்ஸ் பண்ணிருவீங்க. நிதி நிலைமையில சரியான முடிவு எடுக்கா விட்டால் நீங்க நஷ்ட பட வேண்டியிருக்கும் ஜாக்கிரதை.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5.20 மணி - இரவு 8 மணி

மீனம்
இன்னைக்கு உங்களுக்கு சிறப்பான நாள், ரொம்ப தன்னம்பிக்கையோட நீங்க வேலை செய்வீங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும். உங்க இலக்கை அடைய முடியும். உங்க குடும்ப வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும். பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும் ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பாங்க. நீங்க சிங்கிளா இருந்தா உங்களுக்கு புது காதல் துளிர்க்கும் சந்தோஷமாக அந்த காதலை வரவேற்கலாம். கொஞ்சம் நேரம் செலவு பண்ணுங்க நல்லதாகவே நடக்கும். திருமணம் ஆனவங்களுக்கு சின்னச் சின்ன டென்சன் எட்டிப்பார்க்கும். நிதி நிலைமை இன்னைக்கு நார்மலாகவே இருக்கும். பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி செலவு பண்ணுங்க இல்லாட்டி சிக்கலாயிரும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நேரம் : காலை 8 மணி - பிற்பகல் 12.55 மணி



Click it and Unblock the Notifications