For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…

இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Daily Horoscope For 17th January 2021 Sunday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று நீங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில நாட்களாக வீட்டில் இருந்துவந்த தகராறை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பீர்கள். அதற்காக சில முக்கிய முடிவுகளையும் எடுக்கலாம். வேலை முன்னணியில் இன்று நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். உங்களது சிறந்த பணிக்காக உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பர். இது உங்கள் கௌரவத்தையும் அதிகரிக்கும், வியாபாரிகளும் பயனடையலாம். நீங்கள் மரம், மின்னணு, எழுதுபொருள், உணவுப் பொருட்களை வர்த்தகம் செய்தால் இன்று பெரும் லாபம் ஈட்டலாம். பண நிலைமை வலுவாக இருக்கும். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால் அலட்சியத்தைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

வேலை முன்னணியில், இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும், உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்காது. இருப்பினும், குடும்பத்துடனான உறவில் அன்பு இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். இன்று பெரிய செலவு எதுவும் இருக்காது. இருப்பினும், சேமிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு உங்களுக்கு நல்லது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்க, வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று கை, கால்கள் தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் 6:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று பண பிரச்சனைகளால் கவலைகள் அதிகரிக்கும். பழைய கடன்கள் தொந்தரவு செய்யலாம். இதுபோன்ற தருணத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். நேரம் வரும் போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம் சாத்தியமாகும். வேலை முன்னணியில் இன்று சிறப்பான நாள். உத்தியோகஸ்தர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு கடின உழைப்பை செலுத்த முடியும். அதற்கேற்ற பலனையும் பெற்றிடுவர். எண்ணெய் வணிகம் செய்வோர் இன்று நல்ல பொருளாதார நன்மைகளைப் பெற முடியும். உடன்பிறப்புகளின் உதவியுடன் முக்கிய பணியை முடிக்க முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்

கடகம்

இன்று மன மகிழ்ச்சி அதிகரிக்கும். அதனால் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அலுவலகத்தில் அதிக வேலை இருந்தாலும், கடின உழைப்பால் வேலைகளை முடித்து காட்டுவீர்கள். உங்கள் செயல்திறனால் உயர் அதிகாரிகள் திருப்தி அடைவர். வணிகர்கள் இன்று சில வேலைகளை முடிப்பதில் தடைகளை சந்திக்கலாம். பண வரவு திருப்தி அளிக்கும். நிதி நிலைமையை வலுப்படுத்த கடுமையாக உழைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உடல்நலம் பற்றி பேசினால் இன்று மிகவும் ஆற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

சிம்மம்

சிம்மம்

வேலை முன்னணியில் பெரிய வெற்றியை அடைய விரும்பினால், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். வேலை அல்லது வணிகத்தில் உங்களது வளர்ச்சியானது, கடின உழைப்பை பொறுத்தது. எல்லா கவலைகளையும் மறைந்து இன்று உங்களுக்காக நேரத்தை ஒதுக்க முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவினாலும், வலுவாக உணருவீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உணவு, தூக்கம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேலையில் கவனம் செலுத்துகிறேன் எனும் பெயரில், ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட நாள்: 17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் 10:10 மணி வரை

கன்னி

கன்னி

தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இன்று சில நற்செய்திகள் தேடி வரலாம். இந்த நேரத்தில் கடினமாக உழைத்தால், விரைவில் பெரும் பலனைப் பெற்றிடலாம். வணிகர்கள் இன்று நிதி தடைகளை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட நாள்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

துலாம்

துலாம்

பாதகமான சூழ்நிலைகளில் தைரியமாக செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களின் வார்த்தைகளால் வருத்தப்பட வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மன அமைதியைக் குலைக்கும். அலுவலகத்தில் முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். வணிகர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்கவும். எதிரிகளால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மனதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், அதிக பதற்றம் அல்லது அழுத்தத்தின் கீழ் இருக்க வேண்டாம். ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1:45 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று அனுமான் வழிபாட்டுடன் இன்றைய தினத்தை தொடங்குங்கள். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். அலுவலகத்தில் உங்களுக்கு சில கடினமான பணிகள் ஒதுக்கப்படலாம். மன அழுத்தத்துடன் வேலை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இன்று, வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெற முடியும். திருமண வாழ்க்கையில் சிறு சச்சரவுகள் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பெரிய சண்டை ஏற்படலாம். நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், உங்களுக்கு இடையே பதற்றம் அதிகரிக்கக்கூடும். இது உங்கள் பிள்ளைகளுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

தனுசு

தனுசு

உத்தியோகஸ்தர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்கள் சிலர் உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம். இதுபோன்ற விஷயங்களை புத்திசாலித்தனமாக கையாள முயற்சிப்பது நல்லது. வர்த்தகர்களுக்கு, புதிய பங்குகள் வாங்க ஏற்ற நாள் கிடையாது. வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதங்களால் நீங்கள் நேர்மறையாக உணர்வீர்கள். உடன் பிறப்புகளுடன் மிகவும் வேடிக்கையான நாளாக இருக்கும். வரவிற்கு ஏற்ப செலவு செய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை

மகரம்

மகரம்

பணத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாள் கிடையாது. மற்றவர்களைப் பிரியப்படுத்த அதிக செலவு செய்ய வேண்டாம். செலவுகளை குறைத்து, சேமிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். இன்று, வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வியாபாரிகள், பெரிய ஒப்பந்தங்களை செய்ய இன்று சாதகமாக இருக்காது. உத்தியோகஸ்தர்கள், தங்களுக்கு ஒதுக்கப்படும் எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்கக்கூடாது. தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யும் பட்சத்தில், அது உங்களுக்கே பிரச்சனையாகிவிடும். உடல்நலம் தொடர்பான சிக்கல் ஏதேனும் இருந்தால், அதை புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க சில வாய்ப்புகளைப் பெறலாம். பழைய நண்பரை நீண்ட காலம் கழித்து சந்திக்கலாம். அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் சிறிய சிக்கலை எதிர்கொண்டால், அதனை பொறுமையுடன் கையாளுங்கள். விரைவில் சிக்கல் நீங்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்துடனான உறவு நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் பதற்றம் சாத்தியமாகும். உங்கள் கட்டுப்பாடற்ற கோபம் இருவருக்கும் இடையே கசப்பை அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உடல்நிலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைக்கும். அதனால் மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

மீனம்

மீனம்

பொருளாதார முன்னணியில், இன்றைய தினம் நன்றாக இல்லை. குறைந்த வருமானத்தை அதிகரிக்க முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். குடும்ப சண்டைகளின் போது உங்கள் பக்கத்தை நிதானமாக எடுத்துரைக்கவும். வேலை முன்னணியில் சாதாரணமான நாளாக இருக்கும். உங்கள் வேலைகளை சரியான நேரத்தை முடிக்க முயற்சிக்கவும். உயர் அதிகாரிகள் கடுமையான அணுகுமுறையைப் பின்பற்றலாம். ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 10 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 17th January 2021 Sunday In Tamil

Check out the daily horoscope for 17th January 2021 sunday in Tamil. Read on.
Story first published: Sunday, January 17, 2021, 0:39 [IST]
Desktop Bottom Promotion