இந்த ராசிக்காரங்க இன்றைக்கு ரொம்ப டென்சன் ஆவீங்க... கவனம்

வார விடுமுறை நாளான ஞாயிறு இன்று சிலருக்கு சாதகமாக இருக்கும் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். சிலருக்கு மனதில் உற்சாகத்தை தரும். இன்றைய ராசி பலன்களை படித்து தெரிஞ்சுக்கங்க.

வார விடுமுறை நாளான ஞாயிறு இன்று சிலருக்கு சாதகமாக இருக்கும் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். சிலருக்கு மனதில் உற்சாகத்தை தரும். இப்போது இன்றைய கிரக நிலைகளைப் பொறுத்து 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களை படித்து தெரிஞ்சுக்கங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்களுக்கு இன்றைக்கு சந்திரன் சாதகமாக இல்லை. சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் கலக்கமாக இருக்கும் சோம்பேறித்தனத்தை விட்டுத்தள்ளுங்கள். பேச்சில் கவனமாக இருங்கள். வம்பு பேச்சுக்கள் வேண்டாம். குடும்பத்தில் வீணான வாக்குவாதங்கள் வேண்டாம். உங்களுக்கு இன்றைக்கு சுமாரான நாள்தான். பொருளாதார சூழ்நிலையும் சுமார்தான். பணத்தை கவனமாக கையாளுங்கள். பல்வலி, உடல் வலிகள் வரலாம். நிதானமாக இருங்க. மன உறுதியோடு எதையும் எதிர்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 9:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

மகிழ்ச்சியான நாள் தைரியமாகவும் உறுதியாகவும் எதையும் எதிர்கொள்வீர்கள். உங்கள் இலக்குகளில் வெற்றியடைவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் குதூகலமாக இருப்பீர்கள். மகிழ்ச்சியான தருணங்களை இணைந்து துணையோடு கொண்டாடுவீர்கள். பணவரவு அதிகமாகும் வங்கி சேமிப்பும் அதிகமாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் உற்சாகத்தை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:30 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். உங்களின் நேர்மையான அணுகுமுறையால் உறவு சுமூகமாகும். பணவரவு அதிகமாக இருக்கும். அதை பொறுப்போடு செலவு செய்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். மன உறுதி அதிகமாகும்.

காதல் நினைவுகள் அதிகமாகவே இருக்கும். வீட்டில் குடும்பத்தினருடன் உற்சாகமாக நேரத்தை செலவு செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:30 மணிவரை

கடகம்

கடகம்

இன்று உங்களுக்கு சவாலான நாள், பதற்றமாகவே இருப்பீர்கள் உங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பொறுப்பாக இருங்க உணர்ச்சிவசப்படாதீர்கள். பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். பணப்புழக்கம் சுமார்தான். பணத்தை பத்திரமாக வைத்திருக்காவிட்டால் நஷ்டம் ஏற்படும். கவனமாக பணத்தை வைத்திருங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சுமாரான நாள்தான். உங்களின் வேலைகளை பெண்டிங் வைப்பீர்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள். வாழ்க்கை துணையிடம் பேச்சில் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு இன்றைக்கு பதற்றமாகவே இருப்பீர்கள். பணத்தை கவனமாக கையாளுங்கள். உங்களின் உடல் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். உங்க வீட்டில் விட்டுக்கொடுத்து போங்க தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். இல்லாவிட்டால் அதுவே சிக்கலை ஏற்படுத்தி விடும். பண வரவு அதிகமாகவே இருக்கும் வரவுக்கு ஏற்ற செலவு வரும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் பேச்சை கவனமாக கேளுங்கள். திட்டமிட்டு செயல்பட்டால் வேலையை சீக்கிரம் முடித்து விடலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : மாலை 5:25 முதல் இரவு 9:00 மணிவரை

கன்னி

கன்னி

இன்று உங்களுக்கு உற்சாகமான நாள் உடல் ஆரோக்கியம் உற்சாகமாக இருக்கும். சிறப்பாக இருப்பீர்கள். தைரியத்துடன் செயல்படுவீர்கள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். இருவருக்கும் இடையே பரஸ்பர மதிப்பு அதிகமாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகமாகவே இருக்கும். உங்களின் பணத்தை சுப காரியங்களுக்க செலவு செய்வீர்கள். உற்சாகமான மனநிலையோடும் உடல் ஆரோக்கியத்தோடும் இன்றைய தினத்தை கழித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் காலை 8:45 மணிவரை

துலாம்

துலாம்

இன்றைய தினம் நீங்க ரொம்ப அமைதியாக இருங்கள். நம்பிக்கையோடு இருந்தால் உங்கள் லட்சியத்தை அடையலாம். பதற்றமாக இருக்காதீர்கள். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சில தடைகள் வரலாம். தடைகளை தாண்டி வேலை செய்யுங்கள். வாழ்க்கைத்துணையுடன் நீங்க பேசும் போது சரியாக பேசுங்கள் குழப்பங்கள் ஏற்படும். வீணான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். கூடுதல் செலவுகள் வரலாம். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். வயிறு பிரச்சினைகள் வரலாம். எண்ணெய் பலகாரங்கள், காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைய தினம் அமைதியாக இருங்கள். முக்கியமான முடிவுகளை நிதானமாக எடுங்கள். வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். பதற்றப்படாதீங்க தவறுகள் வரலாம். பொருளாதார நிலை சுமார்தான். பணப்புழக்கமும் சுமாராகவே இருக்கும். செலவுகள் அதிகமாகவே இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். பேச்சில் இனிமை கூடும். மன அழுத்தம் அதிகமாகும் உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். டென்சன் ஆகாமல் கூலாக ஹேண்டில் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 1:30 முதல் மாலை 6:00 மணிவரை

தனுசு

தனுசு

இன்றைய தினம் ரொம்ப பதற்றமாக இருப்பீர்கள் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் அமைதியான முறையில் வேலை செய்யுங்கள். நிதானமாக எதையும் கையாளுங்கள் பதற்றப்படாதீர்கள். பண வருமானம் குறைவாகவே இருக்கும். செலவுகள் அதிகமாகும். அதுவே உங்களுக்கு கவலையை தரும். எவ்வளவு சம்பாதித்தாலும் செலவுகள் வருதே என்று டென்சன் ஏற்படும் அதுவே தலைவலியை தரும். இன்றைக்கு ஒரே ஒரு மகிழ்ச்சியான விசயம் உங்க வாழ்க்கை துணையுடன் நீங்கள் சந்தோஷமாக பேசுவதுதான்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 1:00 மணிவரை

மகரம்

மகரம்

இன்றைக்கு உங்களுக்கு உற்சாகமான நாள். மன உறுதியோடு எதையும் எதிர்கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் திறமைகள் பளிச்சிடும். சக பணியாளர்களுடன் சந்தோஷமாக பேசி மகிழ்வீர்கள். இனிமையான நாளாக அமையும் வாழ்க்கைத்துணையுடன் நீங்கள் உற்சாகமாக பொழுதை கழிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும் செலவு நிதானமாக இருக்கும் சேமிப்பு அதிகமாகும். ரொம்ப எனர்ஜியோட இருப்பீர்கள் உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்றைய தினம் உங்களின் இலக்குகளை வெல்வீர்கள். இனிமையான சந்தோஷமான தருணங்கள் உருவாகும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிகரமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் அது உங்களுக்கு திருப்தியை கொடுக்கும். வாழ்க்கைத் துணையிடம் நேர்மையாக இருப்பீர்கள். உங்களின் உறவில் அன்பும் காதலும் கலந்த ரொமான்ஸ் உருவாகும். பணவரவு அதிக உற்சாகத்தை கொடுக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அதிக உற்சாகத்தை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்றைக்கு உங்களுக்கு சுமாரான நாள்தான். உங்களின் எதிர்பார்ப்பு சில ஏமாற்றங்களை கொடுக்கும். எதையும் முடிவு எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. வீட்டில் நீங்க எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் அது உங்களை எரிச்சல்படுத்தும். பேச்சில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் சிக்கலாகிவிடும். பணவரவு நிதானமாக இருக்கும். செலவுகள் அதிகமாகும் சேமிப்பு கரையும். ரொம்ப கோபப்படாதீர்கள் அதுவே உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, February 16, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion