இன்றைக்கு எந்த ராசிக்காரர்கள் ரகசியங்களை வெளியில் சொல்லக்கூடாது தெரியுமா?

இன்றைய தினம் ஏதாவது லக் அடிக்குமா? ஏதாவது அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறுமா? ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? என்று நினைக்கிறீர்களா?

இன்றைய தினம் ஏதாவது லக் அடிக்குமா? ஏதாவது அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறுமா? ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? என்று நினைக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களைப் படியுங்கள் உங்க அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைக்கு கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். இன்றைக்கு உங்க மனசும் உடம்பும் சந்தோஷமாக அமைதியாக ஃபீல் பண்ணுவீங்க உங்களோட வேலைகள் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உங்க குடும்பத்தினர் உங்களுக்கு நிறைய ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நிதிப்பிரச்சினைகள் தீரும். உங்களுக்கு நல்ல நாள் இது. உங்க குடும்ப வாழ்க்கையில சின்ன பிரச்சினைகள் வந்தாலும் கவனமாக கையாளுங்கள். உங்க வாழ்க்கைத்துணையோட நீங்க உட்கார்ந்து பேசி பிரச்சினையை சால்வ் பண்ணுங்க. உங்க வேலையில நீங்க சின்சியரா இருப்பீங்க ரொம்ப கிரியேட்டிவ் ஆக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் வாழ்த்துக்களை பெறுவீர்கள். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் ப்ளூ

அதிர்ஷ்ட நம்பர் 30

அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி - மாலை 12.55 மணி

ரிஷபம்

ரிஷபம்

இன்றைய தினம் உங்களுக்கு கோபமும் டென்சனும் அதிகமாக இருக்கும். உங்க எமோசனை கன்ட்ரோல் பண்ணுங்க. உங்க குடும்பத்தில ஒத்துழைப்பு கிடைக்கும் பிரச்சினைகளை எளிதாக கையாளுவீர்கள். உங்க குடும்பத்தில நீங்க அமைதியை கொண்டுவர உங்க வாழ்க்கைத்துணை உதவி கிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். பண விசயத்தில் உண்மையாகவும் நம்பிக்கையாவும் இருப்பீர்கள். பிசினஸ் செய்பவர்கள் இன்றைக்கு ஒரு சவாலை சந்திப்பீர்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இன்றைக்கு சாதாரணமான நாள். வம்பு வழக்கு விசயத்தில் நீங்க வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 23

அதிர்ஷ்ட நேரம்: காலை 10.10 மணி - 3 மணி

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இன்றைய தினம் உங்களுக்கு பிரச்சினைகள் வரும். இந்த பிரச்சினைகளை நீங்க எளிதாக கையாளுங்கள். எதையும் பாசிட்டிவ் ஆக எதிர்கொள்ளுங்கள். உங்க வாழ்க்கை துணையோட மூடு பார்த்து நீங்க பேசுங்க. எதற்கும் கவலைப்படாதீங்க. நிலம் தொடர்பான பிரச்சினைகள் வரும் லீகலாக கையாளுங்கள். உங்க திருமண வாழ்க்கையில் பிரச்சினை வரலாம் கவனமாக கையாளுங்கள். அலுவலகத்தில் திடீர் வேலைப்பளு வரும். அதனால் மன அழுத்தம் ஏற்படலாம். உங்க உயரதிகாரி உங்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதல் மன அழுத்தத்தை ஏற்படும். உடல் நலத்தில கவனமாக இருங்க. ஹெல்த் செக்அப்பிற்கு போங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட நம்பர்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 10.45 மணி முதல் பிற்பகல் 12.25 மணிவரை

கடகம்

கடகம்

இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும் என்றாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அற்புதமாக இருக்கும் பண விசயம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சிறு பிரிவு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளுங்க. அது உங்களுக்கு இடையே நிரந்தர பிரிவு ஏற்படாமல் தடுக்கும். வேலை செய்யும் இடத்தில் அற்புதமாக இருக்கும் பண விசயம் அற்புதமாக இருக்கும். பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வந்து நிம்மதியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம் : மாலை 3.45 மணி முதல் 6.15 மணி வரை

சிம்மம்

சிம்மம்

உங்க தைரியம் தன்னம்பிக்கை கூடும். இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பணவரவு அதிகமாகும் கடன் பிரச்சினைகள் தீரும். சந்திரன் பண வருமானத்தை தருவார். லாபம் கிடைக்கும். இன்றைய தினம் நீங்க ரிலீப் ஆக இருப்பீங்க. பண விசயத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பீங்க. குடும்ப உறவுகள் உங்களுக்கு மன மகிழ்ச்சியை தரும். மதியத்திற்கு மேல் உங்களுக்கு வேலையில் அற்புதமான விசயங்கள் நடக்கும். நண்பர்களுடன் சிறு பயணம் செல்வீர்கள். ஆன்மீக பயணம் உங்களுக்கு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும். அலுவலகத்தில் பணியாளர்களால் மன நிம்மதி ஏற்படும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

ராசியான நிறம்: மெரூன்

ராசியான எண் : 7

ராசியான நேரம்: பிற்பகல் 2 மணி - மாலை 4.20 மணி

கன்னி

கன்னி

இன்றைய தினம் உங்களுக்கு ரொமான்ஸ் ஆன நாள். உங்க பார்ட்னருடன் அற்புதமான நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். அழகாக பரிசுகளை சர்ப்ரைஸ் ஆக கொடுப்பார். உங்க வீடும் சுற்றுப்புறமும் அமைதியாக இருக்கும். பிசினஸ் அல்லது வேலை செய்யும் இடத்தில் அற்புதமாக அமையும். திடீர் செலவுகள் வரும் கவனம் தேவை. நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் விரய செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலமாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

ராசியான நிறம்: அடர் மஞ்சள்

ராசியான எண் : 17

ராசியான நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

துலாம்

துலாம்

இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான தருணங்களை ஏற்படுத்தும். உங்க குடும்ப உறுப்பினர்களிடம் அன்போடும் ஆதரவோடும் பழகுவீர்கள். உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வீட்டை அழகுபடுத்தும் பொருட்களை வாங்குவீர்கள். உங்க பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்க திறமையை வெளிப்படுத்துவீர்கள். இலேசான மனக்குழப்பம் ஏற்படும். உங்களின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 - இரவு 7:20 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

சுப விரைய செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் இன்று தீர்க்கப்படும். உங்கள் நிதி நிலைமை மேம்படும், மேலும் நிலுவையில் உள்ள பணிகளை நீங்கள் செய்து முடிப்பீர்கள். உங்கள் சொற்களில் கவனம் தேவை தேவையில்லாத பேச்சுக்களால் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே ஒரு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவனமாக பேசவும். உங்கள் காதலியின் பக்கத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் தொழில் வாழ்க்கை நீண்ட காலமாக உங்கள் கவனத்தின் மையமாக இருந்தது, ஆனால் இன்று நீங்கள் சமூக வாழ்க்கையில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் முழு குடும்பத்தினருடனும் ஒரு சந்தோஷமான நிகழ்வில் பங்கேற்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 - மதியம் 1:00 மணி

தனுசு

தனுசு

இன்றைக்கு உங்களுடைய வங்கியில் சேமிப்பு உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். உங்கள் நிதி சிக்கலை தீர்க்கக்கூடிய பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உங்களுக்கு இன்று மிக முக்கியமான நாள். இன்று நீங்கள் ஒவ்வொரு முடிவையும் மிகவும் உற்சாகத்துடன் எடுப்பீர்கள். பணியிடத்தில் சில பெரிய வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக முழுமையடையாத பணிகள் இன்று எந்தவித இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக முடிக்கப்படும். மறுபுறம், நீங்கள் உங்கள் வேலை மற்றும் குடும்பத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கவனக்குறைவு வீட்டிலுள்ள அமைதியான சூழலைக் கெடுக்கும். இந்த நேரத்தில், அவர்களுக்கும் உங்கள் அன்பும் ஒத்துழைப்பும் தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 - மதியம் 2:30 மணி

மகரம்

மகரம்

இந்த நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று, நீங்கள் மன அமைதியை கெடுத்து வந்த சில பெரிய பிரச்சினையிலிருந்து விடுபடலாம். குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது, நீங்கள் இன்று சில புதிய பொறுப்புகளைப் பெறலாம், ஆனால் இவை அனைத்திலும், உங்கள் மனைவியிடமிருந்து நீங்கள் முழு ஆதரவைப் பெறுவீர்கள், இது அந்த பொறுப்புகளை எளிதில் நிறைவேற்றும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும், ஆனால் நிதி நிலைமை மேம்படும். லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் நிதி முடிவுகளை கவனமாக கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் போடவேண்டாம். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 - மாலை 3:40 மணி

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். பணியிடத்தில் நிலைமை சாதகமாக இருக்கும். வெற்றியைப் பெற நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள், உங்கள் புத்தியும் எண்ணங்களும் உங்களை மற்றவர்களை விட முன்னால் வைத்திருக்கும். பெண்டிங் வைத்திருந்த பணிகள் நிறைவடையும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். இன்று அன்பின் அடிப்படையில் ஒரு சிறந்த நாளாக இருக்கப்போகிறது. காதல் இனிமையான அனுபவங்களை தரும். உங்கள் நேரத்தையும் பணத்தையும் மட்டுமே வீணடிக்கும் என்பதால் பயணத்தைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: இரவு 04:00 - இரவு 9:30

மீனம்

மீனம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை. உங்கள் குடும்பப் பிரச்சினைகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், உங்கள் ரகசிய விஷயங்களை உங்கள் சகாக்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும், அது உங்களை சிக்கலில் ஆழ்த்தக்கூடும். காதல் தம்பதிகள் இன்று ஏமாற்றத்தை உணருவார்கள். உங்கள் பங்குதாரர் உறவைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். மன அழுத்தம் போக யோகா செய்யுங்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 - மாலை 3:45 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, March 13, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion