Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
செவ்வாயின் ஆதிக்கத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது...
செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் சிலருக்கு சாதகமாக இருக்கும் சிலருக்கு பாதகமாக இருக்கும். சிலருக்கு பணவரவு வரும் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை தேடித்தரும்.
செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் சிலருக்கு சாதகமாக இருக்கும் சிலருக்கு பாதகமாக இருக்கும். சிலருக்கு பணவரவு வரும் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை தேடித்தரும். சனியின் பிடியில் இருந்து செவ்வாய் விலகியிருந்தாலும் இப்போது குடியிருப்பது சனியின் வீடான கும்பம் ராசியில்தான். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, செவ்வாய் உங்க ராசி அதிபதி. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் நீங்கள் இன்னிக்கு பிசினஸ்ல புது யுக்தியை பயன்படுத்தி கூடுதல் லாபம் சம்பாதிப்பீங்க. கல்யாணம், சுபகாரிய பேச்சுவார்த்தைகளை இன்னிக்கு தாராளமா ஆரம்பிக்கலாம். பணம் கொடுக்கல் வாங்கல் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க கூட ஒத்துமை கூடிடும். கூடவே நல்ல சப்போர்ட்டும் கிடைக்கும். இன்னிக்கு நீங்க தொட்டதெல்லாம் துலங்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:00 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, பிசினஸ்ல ஃபைனான்ஸ் பொசிஷன் கொஞ்சம் மந்தமா இருந்தாலும், அதனால பெருசா பாதிப்பு இருக்காது. மதியத்துக்கு மேல எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடும். உத்தியோகத்துல திடீர்னு வர்ற தேவையில்லாத பிரச்சனையினால மன உளைச்சல் நேரலாம். எச்சரிக்கையா நடந்துக்கோங்க. வீட்டுலயும் சொந்தக்காரங்க கூட தேவையில்லாதை பேசி வீண் மனஸ்தாபம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 13
சாதகமான நேரம் : நண்பகல் 1:30 முதல் மாலை 6:00 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு செய்யுற வேலையில கூடுதல் கவனம் தேவை. எந்த காரணத்துக்காகவும் வீட்டை விட்டு வெளிய போகாதீங்க. வெளி இடத்துல யார் கிட்டயும் அநாவசியமா பேச்சு கொடுக்காம ஒதுங்க இருக்க பாருங்க. இன்னிக்கு உக் ராசிக்கு மதியத்துக்கு மேல சந்திராஷ்டமம் வர்றதுனால மத்தவங்களோட வீண் பேச்சுக்கு ஆளாகுறதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. கவனமா இருங்க. இன்னிக்கு மருந்து மாத்திரைன்னு செலவு பண்ண நேரலாம். எச்சரிக்கையா இருக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:30 மணிவரை

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்களோட ரொம்ப சந்தோஷமா பேசி பொழுதை கழிப்பீங்க. பண வரத்தும் அமோகமா வரும்கிறதுனால, பழைய கடனும் பைசல் ஆகும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடும். பிசினஸ்ல கூட்டாளிங்களோட சப்போர்ட் கிடைக்கும். இன்னிக்கு எந்த வேலையையும் ரொம்ப உற்சாகமா செஞ்சி முடிப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 4:00 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குற முயற்சி கைகூடும். பிசினஸ் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தா, எச்சரிக்கையா இருக்கணும். உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களால இன்னிக்கு மனசுல் சந்தோஷம் கூடும். இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் கவனம் செலுத்துறது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 1
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 9:00 மணிவரை

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க சரியான சமயத்துல சப்போர்ட் பண்ணுவாங்க. கவர்மெண்ட் கிட்ட இருந்து உதவி கிடைக்குறதுல தடங்கல் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைச்சி, ரொம்ப சிக்கனமா நடந்துகிட்டா சேமிப்பு கூடும். இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல சின்னதா பாதிப்பு வர வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:00 மணிவரை

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போனா பிரச்சனை வராம தப்பிக்கலாம். கடன் பிரச்சனையும் இன்னிக்கு ஓரளவு குறைஞ்சுடும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்காம போகும். கூடப்பொறந்தவங்க கூட மனஸ்தாபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா நடந்துக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 1:30 முதல் மாலை 6:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாய் உங்க ராசி அதிபதி. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் உங்களுக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களோட சப்போர்ட் கிடைக்கும். கூடப்பொறந்தவங்க கூட இருந்து வந்த மனஸ்தாபமும் மறையும். பிசினஸ்ல இருந்த மந்த நிலையும் மாறிடும். சிலருக்கு புதுசா வண்டி, வாகனம் வாங்குறதுக்கும் யோகம் உண்டாகும். இன்னிக்கு எந்த வேலையையும் முழு ஈடுபாட்டோட செஞ்சி முடிப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:30 மணிவரை

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் உண்டாகும். பண வரத்து இருக்குறதுனால, பேங்க் பேலன்ஸும் கூடிடும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா எதிர்பாத்த உதவி, ரொம்ப ஈசியா கிடைக்கும். வீட்டுத் தேவைகளும் இன்னிக்கு பூர்த்தியாகிடும். எதிர்பாக்காத இடத்துல இருந்து சுபச் செய்திங்க வந்து உங்களை சந்தோஷப்படுத்தும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு ரொம்ப சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 1:00 மணிவரை

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல சீனியர் அதிகாரியோட வேலைச் சுமையும் உங்களுக்கு கலக்கத்தை கொடுக்கும். இருந்தாலும், கூட வேலை பாக்குறவங்களோட சப்போர்ட் கிடைக்கும். எதிர்பாத்த இடத்துல இருந்தும் உதவி, ஒத்தாசை தங்கு தடையில்லாம கிடைக்கும். பிசினஸ் சம்பந்தமா எடுக்குற முயற்சியில கூடுதல் கவனத்தோட இருக்குறது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் :
சாதகமான நேரம் : மாலை 5:25 முதல் இரவு 9:00 மணிவரை

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ் விஷயமா வெளியூர் பிரயாணம் போறதுனால அனுகூலம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான புது பொருட்களை வாங்குறதுல ஆர்வம் காட்டுவீங்க. உத்தியோகத்துல புது பதவிகள் உங்களை தேடி ஓடி வரும். குடும்பத்துலயும் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையே இருக்கும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் அற்புதமா
இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல வேலையாட்களோட ஒத்துழைப்புனால வியாபாரம் பெருகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டுல ரொம்ப சிக்கனமா செலவழிச்சா பணம் கையை கடிக்காம சமாளிக்க முடியும். உத்தியோகம் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் பண்றதுனால வீண் அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். இன்னிக்கு எந்த வேலையை செஞ்சாலுமே ரொம்ப எச்சரிக்கையா இருக்க வேண்டியது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 7:00 முதல் காலை 8:45 மணிவரை



Click it and Unblock the Notifications