இன்றைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ரொம்ப கவனமாக இருங்க.. பிரச்சினை வரலாம்..

இன்றைக்கு மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இன்றைய ராசிபலனை படிங்க பத்திரமாக வீட்டிலேயே இருங்க.

இன்றைய தினம் உங்களுக்கு பணம் வருமா? அதிர்ஷ்டம் வருமா என்ற கேள்வி எத்தனை பேருக்கு இருக்கும். இன்றைக்கு சந்திராஷ்டமத்தால் எந்த ராசிக்காரங்க டென்சன் ஆவங்க என்று பல கேள்விகள் எழலாம். உங்களுடைய கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் பதில் தருகிறது படிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, நீங்க செய்யுற வேலையில சின்னதா இடைஞ்சல், தடங்கள் உண்டாகலாம். ஹெல்த் கண்டிஷன்லயும் சின்னதா கோளாறு வரலாம். எச்சரிக்கையா இருக்க பாருங்க. யாருக்கும் கடன், கைமாத்துன்னு பணத்தை கொடுத்து ஏமாறாதீங்க. அதே மாதிரி யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்தும் போடாதீங்க. செய்யுற வேலையில நிதான போக்கை கையாழுறது நல்லது. தேவையில்லாத பேச்சுவார்த்தையை தவிர்க்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 10:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு உங்களுக்கு குடும்பத்துல இருக்குற பெரியவங்களோட சப்போர்ட்டும் அன்பும் கிடைச்சிடும். அதனால எந்த வேலையையும் ஆத்ம திருப்தியோட செய்வீங்க. வெளிவட்டாரத்துல புதுசா நட்பு உண்டாகும். எடுக்குற முயற்சிங்களுக்கும் வெற்றி கிடைச்சிடும். பூர்வீக சொத்து பத்து மூலமா உங்களுக்கு நல்லது நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. பழைய கடனை எல்லாம் பைசல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் இரவு 7:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு குடும்பத்துல இருக்குற எல்லாரும் உறுதுணையா இருப்பாங்க. அதனால நீங்க இன்னிக்கு செய்யுற எந்த வேலையையும் நல்ல இன்வால்மெண்ட்டோட செய்வீங்க. வருமானம் கூடி, பேங்க் பேலன்ஸும் கூடிடும். நீங்க நெனைச்சதும் நடந்துடும். பிசினஸ் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தாலும், இப்ப இருக்குற நிலையில போகாம அவாய்ட் பண்றது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : விடிகாலை 4:10 முதல் பிற்பகல் 3:50 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு நீங்க ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது அவசியம். உத்தியோகம் பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போனா, பிரச்சனை வராம தப்பிச்சிடலாம். சொந்தக்காரங்க கூட மனஸ்தாபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால யோசிச்சி பேசப்பாருங்க. குடும்பத்துல இருக்குறவங்களுக்கு மருந்து மாத்திரைன்னு வாங்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : மாலை 6:15 முதல் இரவு 11:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு நீங்க செய்யுற வேலையில வெற்றி கிடைச்சிடும். பிள்ளைங்க கிட்ட இருந்த மனஸ்தாபம் காணாம போயிடும். பெத்தவங்களோட அன்பும் அரவணைப்பும் உங்களுக்கு கிடைச்சிடும். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் அமோகமா இருக்கும். பெண்கள் சிக்கனமா செலவழிச்சி, பணத்தை சேமிச்சி வைப்பீங்க. உங்களோட ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு அற்புதமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிடுவீங்க. வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால வீடே கலகலப்பா மாறிடும். எந்த வேலையையும் ரொம்பவே சுறுசுறுப்பா செஞ்சி முடிப்பீங்க. புதுசா எடுக்குற பிசினஸ் முயற்சிங்க வெற்றியை கொடுக்கும். பழைய கடன்களும் இன்னிக்கு வசூலாகிடும். அதனால பண வரத்தும் அற்புதமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : விடிகாலை 5:20 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு கூடப்பொறந்தவங்க கிட்ட அந்நியோன்யம் குறையுறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால குடும்பத்துலயும் தேவையில்லாத பிரச்சனைங்க முளைக்கலாம். சொந்தக்காரங்க உங்களுக்கு கைகொடுத்து ஹெல்ப் பண்ணுவாங்க. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலைச்சுமை கூடிடும். பிசினஸ்லயும் எதிர்பாத்த லாபம் கிடைச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 38

சாதகமான நேரம் : காலை 8:25 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு நல்லதொரு பலன் கிடைச்சிடும். வருமானமும் பெருகி பணவரத்தும் கூடிடும். பிள்ளைங்களால சுபச்செலவுங்க ஏற்படலாம். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு பாக்குறவ வேலையில திடீர் ட்ரான்ஸ்பர் கிடைக்க வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 6:05 முதல் இரவு 9:30 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு நீங்க குடும்பத்துல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. சுபகாரிய பேச்சுவார்த்தையில வெற்றி கிடைச்சிடும். பிசினஸ் பண்றவங்களுக்கு எதிர்பாக்காம திடீர் நெருக்கடிங்க வரலாம். இன்னிக்க ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 31

சாதகமான நேரம் : மாலை 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு கூடப்பொறந்தவங்க கூட இருந்து வந்த பிரச்சினை காணாம போயிடும். சுபகாரிய முயற்சிங்களும் கைகூடும். குடும்பத்துலயும் சந்தோஷம் கொடுக்குற தரமான சம்பவங்கள் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு புது வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. மொத்தத்துல இன்னிக்கு உங்களுக்கு லாபமான நாளா அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் இரவு 8:05 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு நீங்க எந்த வேலையையும் ரொம்ப சுறுசுறுப்பா செஞ்சி முடிப்பீங்க. ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களும் செய்யுற வேலையை ஆக்டிவா செய்வீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இருந்த போட்டி, பொறாமை காணாம போயிடும். புதுசா வண்டி, வாகனம் வாங்குறதுல ரொம்பவே ஆர்வம் காட்டுவீங்க. இன்னிக்கு உங்க வருமானமும் கூடிடும். குடும்பத்துலயும் சுபச்செலவுங்க வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் நண்பகல் 12:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு நீங்க கூட இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி விட்டுக்கொடுத்து போறது நல்லது. ஃப்ரண்ட்ஸுங்க கூட மனஸ்தாபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருக்க பாருங்க. பிசினஸ்லயும் சரக்கு வித்து தீந்து லாபம் பெருகிடும். தண்டச்செலவுங்களால பாக்கெட் காலியாகிடும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : விடிகாலை 5:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, April 12, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion