இந்த ராசிக்காரங்க காதலில் கவனமாக இருங்க இல்லாட்டி கவலைப்படுவீங்க...

இன்றைய தினம் ஏதாவது விசேசமான சம்பவங்கள் நடக்குமா? அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறுமா? ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? என்று நினைக்கிறீர்களா?

இன்றைய தினம் ஏதாவது விசேசமான சம்பவங்கள் நடக்குமா? அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறுமா? ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? என்று நினைக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களைப் படியுங்கள் உங்க அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைக்கு உங்களுக்கு சந்தோஷங்கள் நிறைந்த நாள். உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். மனதளவில் ரொம்ப தெம்பா ஃபீல் பண்ணுவீங்க. உங்களுக்கு விஐபிக்கள் ஆதரவு கிடைக்கும். பிசினஸ்ல நல்ல வளர்ச்சியும் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு நல்லா படிச்சு தேர்வை எதிர்கொள்வீங்க. உடல் நலத்திலதான் ஏதாவது பிரச்சினை இருந்துக்கிட்டே இருக்கும். மத்தபடி காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக ஃபீல் பண்ணுவீங்க.

மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 29

சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இன்னைக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். விரைய செலவுகளை குறைங்க பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும். மாணவர்களுக்கு இன்றைய தினம் ரொம்ப நல்ல நாளாக இருக்கும். தேர்வுகளை சிறப்பாக எழுதுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ கலர்

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்றைய தினம் உங்களுக்கு பணவரவு அதிகமாக வந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் யோசித்து செயல்படுங்கள். பங்காளிகளுடன் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்களுக்கு மனதளவில் தெம்பும் தைரியமும் கூடும். நினைவாற்றல் அதிகரிக்கும். வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. உங்க காதல் வாழ்க்கையில் கவனமாக இருங்க. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

கடகம்

கடகம்

இன்றைக்கு உங்களுக்கு தன்னம்பிக்கை தைரியம் கூடும் நாள். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு தெம்பும் தைரியமும் கூடும். தேர்வில் திறமை வெளிப்படும். அலுவலக வேலையில் ஏதாவது தடங்கல் வந்துக்கிட்டே இருக்கும் கவனமாக இருங்க. இன்றைக்கு உங்களுக்கு ரொமான்ஸ் ஆன நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்றைக்கு குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் அற்புதமாக இருந்தாலும் சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நீங்க எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று கால தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலப் பலனை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பழைய கடன்கள் வசூலாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். உங்க புத்திக்கூர்மை அதிகமாகும். குடும்பத்தில ஒற்றுமை அதிகமாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

கன்னி

கன்னி

சந்திரன் உங்க ராசியில் இன்று சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். காதல் துணையோடு ரொமான்ஸ் ஆக பேசுவீர்கள். திருமணம் ஆனவர்கள் குடும்பத்தினருடன் பேச கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

துலாம்

துலாம்

இன்றைக்கு நீங்க உங்க வீட்ல சொந்தக்காரங்க வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்க உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். காதல் விவகாரங்களில் கவனமாக இருங்க. வீட்ல அமைதியா பேசுங்க கோபப்படாதீங்க. இன்றைக்கு சுமாரான நாள்தான்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைக்கு உங்களுக்கு தாராள தன வரவும், பணவரவும் கிடைக்கும். உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் விஷயமாக வெளிமாநில நபருடன் தொடர்பு கிடைக்கும். வருமானம் பெருகும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். இதுநாள் வரை எதிரியாக நினைத்தவர்கள் கூட நண்பராக மாறி செயல்படுவார். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் அதிகம் நடக்கும் அக்கறையுடன் படிப்பீர்கள்.

குடும்பஸ்தர்கள் உங்க வாழ்க்கைத்துணையோட அன்பு மழையில் நனைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை

தனுசு

தனுசு

இன்றைக்கு தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். வேலையில் கவனமாக இருங்க. இன்று உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நல்ல செய்தியால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்பட்டு திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : பிற்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மகரம்

மகரம்

இன்றைக்கு உங்களுக்கு தேவையான பாக்கியங்கள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு இன்று மனதிற்கு மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். படிப்பில் ஆர்வம் செலுத்துவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்று உங்க உடல் நலம் சுமாராக இருக்கும் ஏதோ மன குழப்பத்தில் இருப்பீங்க. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பது அல்லது மற்றவர் வாங்கும் கடனுக்கு முன் ஜாமீன் தர வேண்டாம். யாருக்கும் கடன் வாங்கி தரவேண்டாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அக்கறையும் ஆர்வமும் செலுத்துங்கள். நண்பர்களுடன் பழகும் போது கவனமாக இருங்க. சோசியல் மீடியாவில தேவையில்லாம ஷேர் பண்ணாதீங்க. காதல் துணையோடு வம்பு வழக்கு வச்சிக்காதீங்க. பிரிஞ்சா அப்புறம் ஒட்டவே ஒட்டாது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

மீனம்

மீனம்

இன்றைக்கு கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். அன்பும் பாசமும் அன்னியோன்னியமும் அதிகமாகும். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆலய தரிசனம் மன அமைதியை தரும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் செய்வதற்கு ரொம்ப நல்ல நாள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீங்க. மாணவர்களுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கும். தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். அதே நேரம் சோஷியல் மீடியாவில செலவு பண்ற நேரத்தை குறைச்சுக்கங்க. காதல் விவகாரங்கள் கலகலப்பை ஏற்படுத்தும். உங்கள் துணையுடனான நேசத்தை நேரில் புரியவையுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : காலை 8:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, March 11, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion