For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல கவனமாக இருங்க...

இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது பாருங்க. இன்றைய ராசி பலன்களை படித்து தெரிஞ்சுக்கங்க.

|

இன்றைக்கு ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? இன்றைக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதோ என்று நினைக்கிறீர்களா? இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது, யார் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் என பாருங்க. இன்றைய ராசி பலன்களை படித்து தெரிஞ்சுக்கங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைக்கு உடல்நிலையில அக்கறை காட்டுங்க. கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருங்க. உங்க அன்பானவரின் பாசமும் நேசமும் அதிகமாகும். ஒருசிலருக்கு காதல் வாழ்க்கையில் பச்சை சிக்னல் கிடைக்கும். உங்க குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். உங்க குடும்பத்தில் குழந்தைகளோடு நேரம் செலவு செய்வீர்கள். இன்றைக்கு நீங்க ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வருமானமும் லாபமும் அதிகமாகும். உங்க குடும்ப வாழ்க்கையில் மூன்றாவது நபரின் தலையீடு வேண்டாம் தவிர்த்து விடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

ரிஷபம்

ரிஷபம்

உங்க நிதி நிலைமை இன்றைக்கு அற்புதமாக இருக்கும். திடீர் பணவரவு கிடைக்கும். நிலத்தில் முதலீடு செய்யலாம். உங்க செயல்பாடுகளால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வேலைகளை பாக்கி வைக்காமல் செய்து முடிப்பீர்கள். திருமணம், காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். உங்க வேலைகளையும் செயல்பாடுகளையும் வாழ்க்கை துணைவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார். உங்க பழைய நண்பர்களுடன் நீங்க சந்தோஷமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 12

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 மணி - இரவு 9 மணி

மிதுனம்

மிதுனம்

இன்றைய தினம் உங்க பெர்சனல் வாழ்க்கை, பிசினஸ் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உங்க உடல் ஆரோக்கியம் இன்றைக்கு அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம் : காலை 4.50 மணி முதல் பிற்பகல் 1.15 மணிவரை

கடகம்

கடகம்

சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே. இன்றைக்கு நீங்க உங்க குடும்பத்தோடு செலவு செய்ய நேரம் ஒதுக்குங்கள்.வேலைப்பளு உங்களை அழுத்தும். அது உங்க குடும்ப உறவை சிதைக்கும். எனவே பிஸி ஷெட்யூலிலும் நீங்க கவலைப்படாமல் குடும்பத்தை கவனிங்க. உங்க வருமானம் வரும் வழியை கவனிங்க. உங்க பொருளாதார நிலை, உங்களுக்கு ஏற்படும் செலவுகளை கண்காணியுங்கள். உங்க குடும்ப உறுப்பினர்களிடம் பேசுங்க. வருமானத்தை அதிகரிக்க என்ன செய்யணுமோ அதை செய்யுங்க. உங்க ரொமான்டிக் வாழ்க்கை இன்றைக்கு சந்தோஷமாக இருக்க காயப்படுத்தாமல் பேசுங்க.

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1 மணி மாலை 5 மணி

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே இன்றைக்கு உங்க நிதி நிலைமை சுமாராகவே இருக்கும். பொருளாதார நிலை உங்க மன அழுத்தத்தை அதிகரிக்கும். ஏற்றம் இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும். இன்றைய தினத்தை சமாளிங்க நாளைக்கு சந்தோஷமாக இருக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். பிசினஸ் செய்பவர்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கோபத்தோடு எதையும் முடிவு செய்யாதீர்கள் உறவில் விரிசல்கள் வரலாம். புரிந்து நடந்து கொள்ளுங்கள் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம். சின்ன சின்ன உடற்பயிற்சி செய்யுங்க உங்க உடல் ஆரோக்கியம் உற்சாகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண்: 42

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12.45 மணி முதல் மாலை 5.20 மணி வரை

கன்னி

கன்னி

இன்றைய தினம் உங்க மனசும் உடம்பு ஓய்வு இல்லாம இருக்கும். திருமண வாழ்க்கையில் சோதனைகளை சந்திப்பீர்கள். உங்க பார்ட்டனருடன் நீங்க நிறைய நேரத்தை செலவு செய்வீர்கள். கஷ்டபட்டு வேலை செய்தால் உங்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும். புதிய பிசினஸ் தொடங்கலாமா என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். உங்க பார்ட்டனிடம் அதிக அன்பையும் அக்கறையையும் செலுத்துவீர்கள் உங்க உடல் ஆரோக்கியம் இன்றைக்கு சுமாராகவே இருக்கும். சில நோய் தொற்றுக்கள் உங்களை பாதிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.30 மணி இரவு 9.15 மணி

துலாம்

துலாம்

இன்றைய தினம் நீங்க ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்க. உங்க எதிரிகள் தொல்லை மறைமுகமாக தாக்கும். பொருளாதார ரீதியாக நீங்க முன்னேற நினைப்பீர்கள், ஆனால் செலவுகள் அதிகமாக வரும். பணத்தை யாருக்கு கைமாத்து கொடுக்க வேண்டாம் திரும்ப வராது. மாணவர்களுக்கு சில பிரச்சினைகள் வரலாம். வெலை செய்யும் இடத்தில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சீனியர்ஸ் உதவியால் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்க திருமண வாழ்க்கையில் திடீர் பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். புத்திசாலித்தனமாக யோசித்து முடிவு பண்ணுங்க மனசு சொல்றதை மட்டும் கேட்காதீர்கள். உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். மனதுக்கு பிடித்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் : 21

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12 மணி இரவு 9 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

திருமண வாழ்க்கையில் உங்களுக்கு அமைதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். உங்க வாழ்க்கைத் துணையிடம் இருந்து நிறைய உதவியும் ஆதரவும் கிடைக்கும். பிசினஸ் வேலையில் வெற்றி கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். உங்க பார்ட்டனர் உங்களுக்கு விலை மதிப்பு மிக்க பரிசுப்பொருளை தருவார். உங்க உடல் ஆரோக்கியத்தை நினைத்து உங்க குடும்பத்தினருக்கு கவலை ஏற்படும். உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வருமானத்திற்கு புதிய வழி கிடைக்கும். லேசான வழியில் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். சந்தோஷம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4.30 மணி பிற்பகல் 11 மணி

தனுசு

தனுசு

இன்றைய தினம் திருமண வாழ்க்கையில் சில வாக்குவாதங்கள் ஏற்படும். உங்க வாழ்க்கை துணையோடு சில மணி நேரங்களை செலவு செய்வீர்கள். உங்க அன்பிற்குரியவர்களுக்கு நீங்க சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் உங்க மனதை அமைதிப்படுத்தும். உங்க பொருளாதார நிலை உயரும். உங்க புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். உங்க நிதி நிலை விவகாரங்கள் பற்றி நீங்க பேச வேண்டாம். நீங்க சில சமூக நல வேலைகளில் ஈடுபடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களால் சோதனைகள் வரலாம் அதை தவிர்த்து விடுங்கள். காதல் விவகாரங்கள் மனதிற்கு சந்தோஷத்தை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம் மாலை 5 மணி - இரவு 10 மணி

மகரம்

மகரம்

இந்த நாள் உங்களுக்கு சுமாரான நாள்தான். சில பிரச்சினைகள் வந்து செல்லும் குழந்தைகள் படிப்பு விசயத்தில் கவனமாக இருங்க. உங்க அன்பை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். உங்க சுற்றுச்சூழல் இன்றைக்கு அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கவனமாக இருங்க. உங்க பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நிதி நிலைமை சிக்கலாக இருக்கும் அதுவே உங்களை டென்சன் படுத்தும். பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்ய வேண்டாம். அலுவலகத்தில் உங்க உயரதிகாரிகளுக்கு மதிப்பு கொடுங்க இல்லாவிட்டால் வேலையில் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும்.

ராசியான நிறம்: வெள்ளை

ராசியான எண்: 18

ராசியான நேரம் : காலை 7.45 மணி பிற்பகல் 12 மணி

கும்பம்

கும்பம்

இன்றைக்கு பொருளாதார ரீதியாக நீங்க சந்தோஷமாக இருப்பீர்கள். நல்ல செய்திகள் தேடி வரும். புதிய பிசினஸ் தொடங்குவீர்கள். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் சந்தோஷ செய்திகள் வந்து சேரும். பெற்றோர்கள் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரன் சகோதரிகளின் ஒத்துழைப்பினால் உங்க உறவு வலுவடையும். உங்க மண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அனுபவிப்பீர்கள்.

ராசியான நிறம் : ப்ளூ

ராசியான எண் : 10

ராசியான நேரம் : காலை 7.15 மணி பிற்பகல் 2.05 மணி

மீனம்

மீனம்

உங்க நிதி நிலைமை இன்றைக்கு நன்றாக இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். அரசு வேலையில் இருந்தால் ஊதிய உயர்வு பண உயர்வு கிடைக்கும். நிறைய வேடிக்கை விளையாட்டுக்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்க வேலை உங்களுக்கு இன்றைக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்றாலும் நீங்க கவனமாக இருங்க. பிசினஸ் செய்பவர்கள் ரொம்ப கவனமாக இருக்கவும். உங்க திட்டங்களை சீர்குலைக்க நினைப்பார்கள். உங்க வாழ்க்கை துணையோடு செலவு செய்ய சிறப்பான நாள். உங்க மன அமைதியை கவனமாக கையாளுங்க. மன அழுத்தத்தை தவிர்க்கலாம்.

ராசியான நிறம் : மெரூன்

ராசியான எண் : 2

ராசியான நேரம் : காலை 4.20 மணி பிற்பகல் 12.00 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 10th November 2019 Sunday

Check out the daily horoscope for 10th november 2019 sunday. Read on...
Story first published: Saturday, November 9, 2019, 18:24 [IST]
Desktop Bottom Promotion