Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உச்சமான சூரியனால் வாழ்க்கையில் உயரத்திற்கு போகும் ராசிக்காரர்கள் நீங்கதான்...
இன்றைக்கு யாருக்கு பணம் வரும் யாருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? சூரியன் ஆதிக்கம் நிறைந்த ஞாயிறு கிழமையில் மக்களின் சந்தோஷமும் ஓய்வான இந்த தருணம் எப்படி இருக்கும்?
இன்றைக்கு யாருக்கு பணம் வரும் யாருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? சூரியன் ஆதிக்கம் நிறைந்த ஞாயிறு கிழமையில் மக்களின் சந்தோஷமும் ஓய்வான இந்த தருணம் எப்படி இருக்கும் என்று இன்றைய ராசி பலனை படிங்க. உங்களின் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு எதுலயும் கொஞ்சம் நிதானமா நடந்துக்கிறது நல்லது. வீட்டுல எல்லாரையும் அனுசரிச்சி நடந்துக்கோங்க. தேவையில்லாத வீண் அலைச்சல் உண்டாகும். அநாவசியமான தண்டச் செலவுங்களை தவிர்த்திட்டா பணப் பிரச்சனை வராம தவிர்த்திடலாம். இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல் கூடுதல் அக்கறை காட்டுங்க. இல்லேன்னா மருந்து மாத்திரைன்னு செலவழிக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதால, உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம். கவனமா நடந்துக்கோங்க. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வண்டி வாகனத்துல வெளிய போகாம வீட்டுலயே இருக்க பாருங்க. பிசினஸ்ல மத்தவங்களை நம்பி பெரிய பொறப்பு எதையும் கொடுத்தீங்கன்னா, பிரச்சனை வரலாம். பொது இடத்துல வெட்டி பேச்சு பேசாம அமைதியா இருக்க பாருங்க. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க.
அதிர்ஷ்ட நிறம் : வயலட்
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : காலை 9: 00மணி முதல் பகல் 11:00 மணிவரை

மிதுனம்
மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்களால நல்லது நடந்துடும். நகை நட்டு வாங்குறதுல ரொம்பவே ஆர்வமா இருப்பீங்க. நீங்க எதிர்பாக்காத இடத்துல இருந்து உதவி, ஒத்தாசை கிடைக்கும். வெளியூர் பிரயாணத்துல புது நபரோட அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள்ளாற நெருக்கமும் சந்தோஷமும் கூடிடும். குடும்பத்துலயும் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 3: 00மணி முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்
கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு வீட்டுக்கு தேவையான புது பொருட்களை வாங்குவீங்க. பிசினஸ்லயும் புதுசா எடுக்குற முயற்சிங்கள்ல வெற்றி கிடைச்சிடும். பிள்ளைங்களும் இன்னிக்கு ரொம்பவே பொறப்பா நடந்துக்குவாங்க. கூடவே பெத்தவங்களோட அன்பும் அரவணைப்பும் கிடைச்சிடும். வீட்டுக்கு சுபச் செய்திங்க தேடி வரும். அதனால மனசில சந்தோஷம் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 : 00மணி முதல் மாலை 5:00 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களோட ஒத்துமை கூடி, அதனால வியாபாரம் பெருகி திடீர் லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களினால உங்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். கூடப்பொறந்தவங்களோட உதவியும் கிடைக்கும். இன்னிக்கு குடும்பத்துல தேவையில்லாத பிரச்சனை உண்டாகி, அதனால வீண் விரையச் செலவுகள் வரலாம். கவனமா இருக்க பாருங்க. பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் எச்சரிக்கையோட இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : காலை 06 : 00மணி முதல் காலை 11 :00 மணிவரை

கன்னி
கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு கல்யாணம் சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில வெற்றி கிடைக்கும். கூடப்பொறந்தவங்களும் இன்னிக்கு உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. ஃப்ரண்ட்ஸுங்க மூலமாவும் எதிர்பாத்த உதவியும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள்ளாற நெருக்கம் கூடிடும். இன்னிக்கு உங்க முகத்துல புதுப்பொலிவும், உற்சாகமும் தென்படும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல ரொம்பவே கவனமா இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

துலாம்
துலா ராசிக்காரங்களே, இனனிக்கு நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு நிச்சயமா வெற்றி கிடைச்சிடும். அதனால உங்க தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. பிசினஸ்ல புது நபரோட அறிமுகம் கிடைக்கும். பிள்ளைங்களும் இன்னிக்கு ரொம்பவே அமைதியா இருப்பாங்க. குடும்பத்துல எல்லோரும் ஒத்துமையா இருப்பாங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல எச்சரிக்கையோட இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12 : 00மணி முதல் பிற்பகல் 3 :30 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க முன்கோபத்தையும். பேச்சுல கடுமையையும் குறைச்சிட்டா, பெரிய பிரச்சனைங்க வாராம அவாய்ட் பண்ணிடலாம். எதிர்பாக்காம திடீர் உதவியும் கிடைக்கும். அதனால மனசுல சந்தோஷம் கூடும். கூடப்பொறந்தவங்களால மன நிம்மதி குறையும். இன்னிக்கு குடும்பத்துலயும் தேவையில்லாம பிரச்சனை உண்டாகும். கவனமா இருக்க பாருங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல பாதிப்பு வரலாம். எச்சரிக்கையோட இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நேரம் : காலை 10: 45 மணி முதல் பிற்பகல் 1 :30 மணிவரை

தனுசு
தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க கோபத்தை கண்ட்ரோல் பண்ணி, வீட்டுல இருக்குறவங்க கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்து தன்மையா பேசுனா, தேவையில்லாத வீண் பிரச்சனைங்க வராம தவிர்த்திடலாம். வண்டி வாகனத்துனால தண்டச் செலவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. பிரயாணத்துனால அநாவசிய அலைச்சல் ஏற்படலாம். அதனால கொரோனா பிரச்சனை முடியுற வரைக்கும் வீட்டுலயே இருக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

மகரம்
மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ளாற சின்னச் சின்னதா பிரச்சனைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா நடந்துக்கோங்க. பிசினஸ்ல இருந்து வந்த பிரச்சனைங்க கொஞ்சம் குறையலாம். இன்னிக்கு வருமானத்தை விட செலவுகள் கூடுதலா இருக்கும். சிக்கனமா செலவு செஞ்சா பணத்தை மிச்சம் பண்ணலாம். இன்னிக்கு பிள்ளைங்களால சின்னதா மனசங்கடம் நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 : 00மணி முதல் மாலை 5:00 மணிவரை

கும்பம்
கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க கூட இருந்து வந்த மனஸ்தாபம் மறைஞ்சி ஒத்துமை கூடிடும். பழைய ஃப்ரண்ட்ஸுங்க மீட் பண்ணி பழைய நினைவுகளை அசை போடுவீங்க. பிசினஸை இம்ப்ரூவ் பண்றதுக்கு நீங்க எடுக்குற முயற்சிகள் வெற்றிகரமா முடியும். இன்னிக்கு பண வரத்து அமோகமா இருக்கும். உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப சிறப்பா இருக்கும்கறதால குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகிடும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 : 20 மணி முதல் இரவு 9 :00 மணிவரை

மீனம்
மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல லாபம் அமோகமா கிடைக்கும். சுப காரியம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையில நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். அதனால சுபச் செலவுங்களும் உண்டாகும். பெண்களோட ரொம்ப நாள் ஆசைகளும் பூர்த்தியாகிடும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 :00 மணிவரை



Click it and Unblock the Notifications