Latest Updates
-
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
இன்றைய ராசிப்பலன் (04.02.2021): இந்த ராசிக்காரர்கள் இன்று செலவுகளை யோசித்து செய்வது நல்லது…
இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 4ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 4ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...


மேஷம்
இன்று நாளின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். காலையிலேயே சில நல்ல செய்திகளால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவலகத்தில் பாதகமான சூழல்களை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. கோபப்படுவதைத் தவிர்க்கவும். போக்குவரத்து தொடர்பான பணிபுரிவோர் சட்ட விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். காதல் விஷயத்தில் இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண நிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

ரிஷபம்
திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்று முடிவடையும். மேலும், இன்று இருவரிடையே மிகவும் காதல் நிறைந்திருக்கலாம் இருக்கலாம். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று காதல் திட்டம் கைகூடலாம். வேலையில் உங்களுக்கு முழு அதிர்ஷ்டம் கிடைக்கும். பதவி உயர்வு மூலம் வருமான வளர்ச்சி சாத்தியமாகும். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். வியாபாரிகள், இன்று நிறைய உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்கான சரியான முடிவுகளையும் பெறுவீர்கள். வீட்டின் சூழல் சாதாரணமாக இருக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் அன்றாட வழக்கத்தில் சிறு மாற்றங்களைக் கொண்டு வரவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம்
நீண்ட காலமாக சிக்கித் தவிக்கும் ஒரு வேலையை இன்று முடிக்க முடியும். எதிர்வரும் தடைகளை சுலபமாக கடக்க முடியும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும. வாழ்க்கைத் துணையுடன் கூடுதல் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று சில மன அழுத்தங்கள் சாத்தியமாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். குடும்ப பெரியவர்களின் முழு ஆதரவும் கிட்டும். வரவை விட செலவு அதிகரிக்கும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். யோசிக்காமல் செலவு செய்வதை தவிர்க்கவும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கடகம்
உடல்நலம் பற்றிப் பேசும்போது, அதிகரிக்கும் உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் வரும் நாட்களில் ஏதேனும் கடுமையான நோய் உண்டாகலாம். இன்று பணத்தின் அடிப்படையில் நன்றாக இருக்கும். இன்று உங்கள் பட்ஜெட்டும் சமநிலையில் இருக்கும். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் உதவியுடன், முக்கியமான சில பணிகளை முடிக்க முடியும். சக ஊழியர்களுடனும் நல்லுறவு இருக்கும். வணிகர்கள் இன்று எந்த புதிய வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பெற்றோரின் பாசத்தையும் ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவில் இனிமையை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2:15 மணி வரை

சிம்மம்
இந்த நாளில் நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். எதிரிகள் உங்களின் முக்கியமான சில வேலைகளைத் தடுக்கலாம். வியாபாரிகள், இன்று நிதி சிக்கல்களால் மிகவும் வருத்தப்படக்கூடும். எந்தவொரு முக்கியமான வணிக முடிவையும் எடுப்பதற்கு முன்பு, உங்கள் நிதி நிலைமையைக் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நேரத்தில், அவசர முடிவுகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படலாம். அன்புக்குரியவரை சமாதானப்படுத்த முயற்சிப்பது நல்லது. உடல்நலம் பற்றிப் பேசினால், உங்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் இருந்தால், உங்களை நீங்களே அதிகம் கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

கன்னி
தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், இன்று ஒரு பெரிய நிதி நெருக்கடியை சந்திக்கக்கூடும். உத்தியோகஸ்தர்கள் இன்று கடுமையாக உழைக்க வேண்டும். விரைவில் பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இன்று வர்த்தகர்கள் பெரும் நிவாரணத்தை பெற முடியும். குடும்ப வாழ்க்கை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். வீட்டு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கோபத்தில் எந்தவொரு வேலையையும் செய்யாதீர்கள். இது உங்கள் உறவை மோசமாக பாதிக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணைடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. காதல் வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று உங்கள் மன அழுத்தம் கணிசமாக அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

துலாம்
இன்று அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும். இது உங்களை மிகவும் சோர்வடையச்செய்யும். இருப்பினும், நீங்கள் கடினமாக உழைப்பதைத் நிறுத்தக்கூடாது. உங்கள் கடின உழைப்பின் சரியான முடிவை விரைவில் பெறலாம். தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை அனைத்திலும், இன்று நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். பொறுப்புகளை நிறைவேற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இதன் காரணமாக உங்களுக்காக ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. பொருளாதார முன்னணியில், இன்று மிகவும் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் புதிய உடைகள் மற்றும் நகைகளை வாங்கலாம். இன்று உங்களுக்கு ஒருவர் நிதி ரீதியாக உதவ முடியும். உங்கள் வாழ்க்கைத் துணைடன் மனதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்கள் நன்றாக உணருவீர்கள். உடல்நலம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். இன்று நீங்கள் உங்களுக்கு பிடித்த உணவுகளை முழுமையாக அனுபவித்து உண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:30 மணி முதல் மாலை 4 மணி வரை

விருச்சிகம்
வேலை முன்னணியில், இன்று புனிதமான நாள். அது வணிகமாகவோ அல்லது வேலையாகவோ இருந்தாலும், திடீரென்று ஒரு பெரிய நன்மை கிடைக்கலாம். உங்கள் கடின உழைப்பு வெற்றியைப் பெற்று தரும். நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். பணத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வணிகர்களுக்கு பெரிய பொருளாதார பரிவர்த்தனைகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவதில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் மனைவியுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 முதல் மாலை 4:00 மணி வரை

தனுசு
நீங்கள் இன்று வேலை முன்னணியில் பெரிய வெற்றியைப் பெறலாம். நீங்கள் இலக்கு அடிப்படையிலான வேலைகளைச் செய்தால், இன்று உங்கள் இலக்கை எளிதாக அடைய முடியும். நிதி நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நிதி ரீதியாக வலுவாக இருக்க, சம்பாதித்த பணத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். நிதி சார்ந்த முடிவுகளை சிந்தனையுடன் எடுக்கவும். திருமணமானவர்களுக்கு இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பும் இனிமையும் வளரும். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் உங்களிடம் ஒரு பெரிய பொய்யைக் கூற வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று சிறிது சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் இரவு 7:20 மணி வரை

மகரம்
இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும். நீங்கள் பொறுமையாக பணிபுரிந்தால், பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். குடும்ப வாழ்க்கையில் சச்சரவு இருக்கும். பரஸ்பர ஒருங்கிணைப்பு மோசமடைவது வீட்டு உறுப்பினர்களிடையே பிரிவை ஏற்படுத்தக்கூடும். உத்தியோகஸ்தர்கள், உங்கள் பணி தொடர்பான முக்கியமான தகவல்களை அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், சிக்கலில் சிக்கக்கூடும். வர்த்தகர்களுக்கு இன்று பெரிய லாபம் கிடைக்காது. பணத்தின் அடிப்படையில் இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். மேலும் பல பணிகளை ஒரே நேரத்தில் கையாள முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:25 மணி முதல் மாலை 6 மணி வரை

கும்பம்
உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு பரிசு வழங்க இன்று உகந்த நாள். இருப்பினும் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவு செய்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில், பல வேலைகள் இன்று முழுமையடையாது. வணிகர்கள் இன்று ஒரு குறுகிய பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், பயணம் செய்யும் போது கவனமாக இருக்கவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும். அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணை சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 3 மணி வரை

மீனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக செயல்படவும். இன்று பொருளாதார முன்னணியில் விலையுயர்ந்த நாளாக இருக்கும். மேலும், பணம் தொடர்பாக யாருடனாவது தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. கோபத்தில் எந்த வேலையும் செய்யக்கூடாது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் பணியில் பல குறைபாடுகளைக் கண்டுபிடிக்கலாம். நீங்கள் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி, உங்கள் கவனத்தை வேலையில் செலுத்துவது நல்லது. சிறந்த முடிவுகளைப் பெறக் கூடிய கடுமையாக உழைக்க வேண்டும். அற்ப விஷயங்களுக்காக வாழ்க்கைத் துணையுடன் வாதிடுவதைத் தவிர்க்கவும். உங்கள் பிடிவாதமான குணத்தால் உங்கள் உறவில் விரிசல் அதிகரிக்கிறது. காதல் திருமணம் செய்ய விரும்புவோரின் விருப்பம் விரைவில் நிறைவேறும். உடல்நலம் பற்றி பேசும்போது, மனம் இன்று அமைதியற்ற நிலையில் இருக்கும். மேலும், நீங்கள் உடல் ரீதியாக நன்றாக உணர மாட்டீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 7:00 மணி வரை



Click it and Unblock the Notifications











