மகரத்தில் சனி, சூரிய, சுக்கிர சேர்க்கை: ஜனவரி 14 முதல் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட காலம் தொடங்க போகுது...

மகரத்தில் சனி, சூரிய, சுக்கிர சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு பொங்கல் நாளில் இருந்து அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது என்பதைக் காண்போம்.

Conjunction Of 3 Planets In Capricorn On Pongal 2023: வருகிற ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஜனவரி 14 ஆம் தேதி நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தனுசு ராசியில் இருந்து சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். சூரியனும், சனியும் தந்தை-மகனாக இருந்தாலும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். ஆயினும் இந்த சூரிய பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனையும் வழங்கும். அதுவும் இந்த மகர ராசியில் ஏற்கனவே சனியும், சுக்கிரனும் பயணித்து வருகிறார்கள்.

Conjunction Of 3 Planets In Capricorn On Pongal 2023: These Zodiac Signs Get More Benefits In Tamil

இந்நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் மகர ராசிக்கு செல்வதால், மகர ராசியில் திரிகிரக ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. அதோடு பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது மகரத்தில் சனி, சூரிய, சுக்கிர சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு பொங்கல் நாளில் இருந்து அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகரம்

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டில் இந்த கிரக சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மகர ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறுவார்கள். இதுவரை அவதிப்பட்டு வந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். இந்த காலகட்டத்தில் புதிய வழிகள் திறக்கப்படும். இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கையானது சாதகமான பலன்களைத் தரும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உற்சாகமும், தைரியமும் நிறைந்து இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலையில் நல்ல பண பலன்கள் கிடைக்கும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் உள்ளன. இந்த பயணத்தால் நல்ல பலன்கள் கிடைக்கம்

கடகம்

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டில் இந்த கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் வாழ்க்கைத் துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். உங்களுக்கு தேவையானது உங்களைத் தேடி வரும். பணிபரிபவர்கள் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் அமையலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் இந்த கிரக சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும் பேச்சை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் இந்த கிரக சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மிதுன ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நிதி விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். மன உளைச்சல் நீங்கும். காதல் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். தந்தையின் உதவியால் நல்ல பண பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, January 6, 2023, 13:51 [IST]
Desktop Bottom Promotion