Latest Updates
-
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, உங்கள் வாழ்க்கையில் சிலரை நீங்கள் ஒருபோதும் நம்பக்கூடாது என்று கூறப்படுகிறது.
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த இராஜதந்திரி, அறிஞர், ஆலோசகர் மற்றும் பொருளாதார நிபுணர். மௌரிய வம்சத்தின் வெற்றிகளுக்கு சாணக்கியரின் உளவுத்துறையும், புத்திக்கூர்மையும் இருந்தது. சாணக்கியர் அரசியலில் மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் கைதேந்தவராக இருந்தார். சாணக்கிய நீதியின் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற முடியும். சாணக்கியரின் இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் எந்தவொரு நபரும் தனது வாழ்க்கையில் இருந்து விரக்தியை அகற்ற முடியும்.

சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, உங்கள் வாழ்க்கையில் சிலரை நீங்கள் ஒருபோதும் நம்பக்கூடாது என்று கூறப்படுகிறது. அவர்கள் உங்களுக்கு நன்மைக்கு பதிலாக சிக்கலை ஏற்படுத்துவார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக உங்களை ஏமாற்றுவார்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். அத்தகையவர்கள் எதிரியை விட ஆபத்தானவர்கள். இந்த 7 வகையான நபர்களிடமிருந்து நீங்கள் எப்போதும் தூரமாக ருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

காதலில் ஏமாற்றுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, தவறான நபரைக் காதலிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கவனமாக இருக்க வேண்டும். அத்தகையவர்கள் தங்கள் நலனுக்காக யாரையும் ஏமாற்றலாம். அப்படிப்பட்டவர்கள் பணத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் காதலித்து ஏமாற்றி மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து எப்பொழுதும் தூரமாக இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.

சுயநலவாதிகள்
சாணக்கியர் தனது சொந்த நலனை மட்டுமே பெரிதாக நினைக்கும் ஒருவரிடம் ஒருபோதும் உதவியை நாட வேண்டாம் என்று கூறுகிறார். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பிறரை காயப்படுத்த தயங்க மாட்டார்கள். அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் லாபத்தைத் தவிர வேறு எதையும் நினைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என்கிறார் சாணக்யா. இவர்களிடம் உதவி பெற நினைக்கவே வேண்டாம்.

கெட்ட குணம் கொண்ட பெண்கள்
கெட்ட குணம் கொண்ட பெண்களிடம் இருந்து விலகி இருக்க சாணக்கியர் அறிவுறுத்துகிறார். அந்தவகை பெண்களுக்கு உதவி செய்யத் துணிபவர்களுக்கு பிரச்சனைகள் மற்றும் கவலைகள் மட்டுமே மிஞ்சும். அத்தகைய பெண்கள் தங்கள் சுயநல காரணங்களுக்காக மட்டுமே ஆண்கள் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். அத்தகைய பெண்ணின் வலையில் விழுவது உங்கள் சமூக அந்தஸ்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கெடுத்துவிடும். எனவே அத்தகைய பெண்களிடம் இருந்து விலகி இருங்கள் என்கிறார் சாணக்கியர்.

பொறாமை கொண்டவர்கள்
பொறாமை கொண்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த காரணமும் இல்லாமல் தனிமையாக உணருபவர்களிடமிருந்து விலகி இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், அவர்களுக்கு எதிலும் திருப்தி ஏற்படுவதில்லை. அவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் இருப்பதைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. ஏனென்றால் அவர்கள் நம் மன அமைதியைக் கெடுக்கிறார்கள். ஒரு பொறாமை கொண்ட நபர் எப்போதும் தனது எதிரியை தோல்வியடையச் செய்து மகிழ்ச்சியற்றவராக மாற்ற விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் உங்கள் கெட்ட நேரத்தை பயன்படுத்தி உங்களை ஏமாற்றலாம்.

முட்டாள்கள்
எப்போதும் முட்டாள்களிடமிருந்து விலகி இருங்கள். ஏனென்றால், உலகில் நடக்கும் எதையும் அவர்கள் உணர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடிப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். முட்டாள்களுக்கு ஒருபோதும் அறிவுரை கூறாதீர்கள். அறிவைப் பகிர்வதன் மூலம் அவர்களுக்கு உதவ முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணம் முற்றிலும் தவறானதாகும். வாழ்க்கையில் சரியான விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களுக்கு அறிவுரை கூறுவதில் அல்லது உதவுவதில் அர்த்தமில்லை. அவர்கள் சிறிய விஷயங்களுக்குக் கூட வாக்குவாதம் செய்து உங்கள் நேரத்தையும் முயற்சியையும் வீணடிக்கலாம். எனவே முட்டாள்களிடமிருந்து விலகி இருங்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.

பாவம் செய்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, மதத்திலிருந்து விலகிய ஒருவர் பாவச் செயல்களைச் செய்யத் தொடங்குகிறார், மற்றவர்களை தவறான செயல்களைச் செய்ய வற்புறுத்துகிறார். அப்படிப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்தால் அவமானம் ஏற்படும் என்கிறார் சாணக்கியர். எனவே அவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருங்கள்.

முன்கோபக்காரர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, சிலர் கொஞ்சம் கோபமாக இருக்கலாம். ஆனால் மிகவும் கோபம் கொண்டவர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக மற்றவர்களை இரக்கமின்றி காயப்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
